உள்நாடுவிசேட செய்திகள்

400 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களுடன் இலங்கை வந்த சீனா விமானம்

சீன மக்கள் குடியரசு நன்கொடையாக வழங்கிய 400 மில்லியன் ரூபா பெறுமதியான நிவாரணப் பொருட்களை ஏற்றிய விமானம் இன்று (08) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

இந்த விமானம் 84,525 கிலோகிராம் எடையுள்ள லைஃப் ஜாக்கெட்டுகள், கூடாரங்கள், போர்வைகள் மற்றும் மெத்தைகள் உள்ளிட்ட உதவிப் பொருட்களையும் கொண்டு சென்றது.

துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் அனுர கருணாதிலக்க, பாதுகாப்பு பிரதியமைச்சர் அருண ஜெயசேகர, இலங்கைக்கான சீனத் தூதர் ஜி சாங்ஹோங் உள்ளிட்ட ஏராளமானோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Related posts

பேர வாவியில் பறவைகள் உயிரிழப்பு – காரணம் வௌியானது

editor

மஹிந்த ராஜபக்ஷவை நெருக்கடிக்குள்ளாக்க அரசாங்கம் முயற்சி – முன்னாள் எம்.பி திலும் அமுனுகம

editor

ரயில்வே பொது முகாமையாளர் தனது கடமைகளை ஆரம்பித்தார்

editor