உள்நாடு

4 நாட்களில் 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டிய இலங்கை போக்குவரத்து சபை

கடந்த 4 நாட்களில் இலங்கை போக்குவரத்து சபை, 600 மில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளது.

பண்டிகைக் காலத்தையொட்டி அதிகளவான பேருந்துகள் சேவையில் ஈடுபட்டமையினால் இந்த வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளது.

நாளொன்றுக்கு சுமார் 200 மில்லியன் ரூபாய் வரை வருமானமாக ஈட்ட முடிந்ததாக அதன் பிரதிப் பொது முகாமையாளர் ஆர்.டி சந்திரசிறி குறிப்பிட்டார்.

இந்த வருடம் தமிழ்,சிங்களப் புத்தாண்டையொட்டி பொதுமக்களின் வசதிக்காக சுமார் 350 பேருந்துகள் மேலதிகமாக இயக்கப்பட்டதாக அவர் கூறினார்.

Related posts

களஞ்சியசாலைகளை சுற்றிவளைக்க நடவடிக்கை

மகர சிறைச்சாலை கைதி ஒருவர் விழுந்து உயிரிழப்பு

கம்பஹா மாவட்டத்தில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு உத்தரவு