சூடான செய்திகள் 1

4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது.

(UTV|COLOMBO)-4 லட்சம் ரூபாய் பெறுமதியான போலி நாணயத்தாள்களுடன் சந்தேக நபர் ஒருவர் குற்றம் தடுப்பு பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கிடைக்கபெற்ற தகவல் ஒன்றுக்கமைய நேற்று சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்போதே பியகம பேரகஸ் சந்தியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபரிடம் இருந்து 5 ஆயிரம் ரூபாய் போலி நாணயத்தள்கள் 38ம் மற்றும் ஆயிரம் ரூபாய் நாணயத்தாள்கள் 300 கைப்பற்றப்பட்டுள்ளது.

சந்தேக நபர் மாத்தறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

விபத்தில் தாயும் இரு மகள்களும் பலி

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 22 வது நபர் அடையாளம்