உள்நாடு

4 வருடங்களின் பின்னர் இலங்கைக்கான குவைத் விமான சேவை மீண்டும் ஆரம்பம்

கடந்த 2021 டிசம்பர் மாதம் 31 ஆம் திகதி முதல் 4 வருடமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த குவைத் விமான சேவையின் இலங்கைக்கான விமான பயணங்கள் மீண்டும் ஆரம்பமானதுடன் அதன் ஆரம்ப பயணமாக, விமானம் இன்று (27) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.

முதல் பயணத்திற்காக ஏ- 320 நியோ வகை விமானமொன்று குவைத்தில் இருந்து இன்று காலை 9.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் குறித்த விமானம் இதன்போது நீர் பாய்ச்சு வரவேற்கப்பட்டது.

94 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களை ஏற்றிக்கொண்டு, காலை 09.40 மணிக்கு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த விமானம் மீண்டும் குவைத்திற்கு 105 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் புறப்பட்டுள்ளது.

விமானத்தின் வரவேற்பு விழாவில் இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் சுனில் ஜெயரத்ன, இலங்கைக்கான குவைத்தின் பிரதி தூதுவர் அல் முஹானா மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையில் ஈடுபட்டுள்ள ஏராளமானோர் கலந்து கொண்டுள்ளனர்.

இனிவரும் காலங்களில் குவைத் ஏர்வேஸ் விமானங்கள் குவைத்தில் உள்ள குவைத் நகர சர்வதேச விமான நிலையத்திற்கும் இலங்கையில் உள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும் இடையில் ஒவ்வொரு வாரமும் திங்கள், வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இயங்கும் என தெரிவிக்கப்படுகிறது.

Related posts

ஒக்டோபரில் பயணிக்க வேண்டிய நாடுகள் பட்டியலில் இலங்கை முதலிடம்!

editor

இலங்கையில் வழங்கப்படும் டிஜிட்டல் சேவைகளுக்கு VAT வரி விதிப்பு

editor

நிறுத்தப்பட்டிருந்த சிறிய லொறியுடன் பாரிய வாகனம் மோதி விபத்து

editor