வகைப்படுத்தப்படாத

4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் தீ விபத்து – 7 சிறுவர்கள் உயிரிழப்பு

(UTV|SYRIA)-சிரியாவில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில், தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

சிரியா தலைநகர் டமாஸ்கசின் மத்திய பகுதியில் உள்ள மனாக்லியா என்கிற இடத்தில் 4 மாடிகளை கொண்ட குடியிருப்பில் ஒரு வீட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர்கள் 7 பேர் இருந்துள்ளனர்.

கண்இமைக்கும் நேரத்தில் தீ மளமளவென வீடு முழுவதும் பரவியதனால் சிறுவர்கள் வெளியேற முடியாமல் உள்ளே சிக்கிக்கொண்டனர்.

தீயில் கருகி சிறுவர்கள் 7 பேரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

புத்­தளம் முன்னாள் காதி­நீ­தி­ப­தியின் விளக்­க­ம­றியல் 17 ஆம் திகதி வரை நீடிப்பு!

அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து

கர்ப்பிணி பெண் உஷாவின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி