வணிகம்

3,739 மெட்ரிக் டொன் வெற்றிலை ஏற்றுமதி

(UTV | கொழும்பு) –  இந்த வருடம் ஜனவரி முதல் நவம்பர் மாதம் வரையில் 3,739 மெட்ரிக் டொன் வெற்றிலை ஏற்றுமதி செய்யப்பட்டிருப்பதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ரூபாய் 2792 மில்லியன் அன்னியச் செலாவணியைப் பெற்றிருப்பதாகவும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்நாட்டின் வெற்றிலை உற்பத்தியில் 95 வீதமானவை பாகிஸ்தானுக்கும், அதற்கு மேலதிகமாக மத்திய கிழக்கு நாடுகள், ஜப்பான், ஐக்கிய இராச்சியம் போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுவதாக ஏற்றுமதி விவசாயத் திணைக்களத்தின் இடைப் பயிர் மற்றும் வெற்றிலை ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் பேராசிரியர் ஆனந்த சுபசிங்க தெரிவித்துள்ளார்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

25 லட்சம் தேயிலை கன்றுகளை வளர்ப்பதற்கு திட்டம்

இலங்கை ரூபாவின் பெறுமதி மேலும் வீழ்ச்சி

ஒரு கிலோகிராம் சம்பா அரிசியை 125 ரூபாவுக்கு