அனுமதிப்பத்திரம் இல்லாமல் 3500 கிலோகிராம் கழிவு தேயிலையை ஏற்றிச் சென்ற லொறியை ஹட்டன் பொலிஸார் (07) இன்று இரண்டு சந்தேக நபர்களுடன் கைது செய்துள்ளனர்.
கம்பளை, வெலம்பொடவிலிருந்து தலவாக்கலைக்கு கழிவு தேயிலை கொண்டு செல்லப்படுவதாக ஹட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில ஹட்டன் மல்லியப்பு பகுதியில் வைத்து குறித்த லொறியை பொலிஸார் நிறுத்தி சோதனை செய்தனர்.
கழிவு தேயிலையை கொண்டு செல்வதற்கான அனுமதிப்பத்திரம் அந்த லொறிக்கு இல்லை என்பதைக் கண்டறிந்த பின்னர், சாரதி மற்றும் உதவியாளர் குறித்த லொறியையும் பொலிஸார் கைது செய்தனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கழிவு தேயிலை மற்றும் சந்தேக நபர்கள் ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று சோதனை நடத்திய ஹட்டன் பொலிஸின் ஊழல் தடுப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
-க.கிஷாந்தன்