இலங்கை பொலிஸ் துறைக்கு 3,000 பொல்லுகளை (தடிகளை) வாங்குவதற்கான கொள்முதல் செயல்முறை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்காக ஏற்கனவே கேள்விமனுக்கள் கோரப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
பொலிஸ் துறையில் நீண்ட காலமாக நிலவும் ஒரு பிரச்சினையாக இருந்து வரும் தடியடிகள் பற்றாக்குறையை முடிவுக்குக் கொண்டு வருவதற்காக இந்த கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது.
கலவரக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளின் போது போராட்டக்காரர்களைக் கலைக்க இந்தக் கைத்தடிகள் பயன்படுத்தப்படவுள்ளன.