பெருந்தொகை போதைப்பொருளுடன் ஆறு இலங்கையர்கள் மாலைதீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
300 கிலோகிராம் ஹெரோயின் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருளை ஏற்றிச் சென்ற நெடுநாள் மீன்பிடிப் படகு ஒன்றே 6 இலங்கையர்களுடன் மாலைத்தீவு கடலோர காவல்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
