உள்நாடு

300 கிராம் தங்கத்தை உடல் பாகத்தினுள் மறைத்து கடத்திய 41 வயதுடைய பெண் கைது

உடல் பாகத்தினுள் மறைத்து தங்கத்தை கடத்திய பெண் ஒருவரை காங்கேசந்துறை சுங்கத் திணைக்கள அதிகாரிகள் நேற்று (21) கைது செய்துள்ளனர்.

நேற்று காலை இந்தியாவில் இருந்து வந்த விமானத்தின் ஊடாக குறித்த பெண் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

அதன்போது விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் நடத்திய சோதனையில் அவர் தமது உடற்பாகங்களுக்குள் தங்கத்தை மறைத்து வைத்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.

இதனை அடுத்து சந்தேகநபரை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதித்து மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சையின் போது மறைத்து வைக்கப்பட்டிருந்த தங்கம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நேற்று (21) மாலை சிகிச்சையின் பின் தங்கம் எடுக்கப்பட்டதாக தெரிய வருகின்றது

இதன்போது அவரது உடற் பாகங்களுக்குள் இருந்த 300 கிராம் தங்கம் மீட்கப்பட்டுள்ளது.

சந்தேகநபர் கொழும்பை சேர்ந்த 41 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.

Related posts

தேசபந்து தென்னகோன் தொடர்பிலான விசாரணைக் குழுவின் அறிக்கை அடுத்த வாரம் சபாநாயகரிடம் கையளிப்பு

editor

RMV பரிவர்த்தனைகளுக்கான மின்னணு அட்டை வசதி

கொரோனா : சந்தேகிக்கப்படும் 103 பேர், 15 மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு