வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாழைச்சேனை ஹைறாத் பள்ளிவாயல் பின் பக்கமாகவுள்ள ஆற்றங்கரையோரத்தில் வைத்து 30 வயதுடைய இளைஞன் போதைப்பொருளுடன் வாழைச்சேனை பொலிஸாரால் இன்று முற்பகல் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாழைச்சேனை பொலிஸ் விசேட பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலின் அடிப்படையில் பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரியின் ஆலோசனையில் குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட இளைஞன் பிறைந்துரைச்சேனை, மரைக்கார் வீதியைச்சேர்ந்தவர் என்பதுடன், அவரிடமிருந்து ஹேரோயின் போதைப்பொருள் 5 கிராம் 200 மி.கிராம், கையடக்கத்தொலைபேசி, ஒரு தொகைப்பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த நடவடிக்கையை ஊழல் ஒழிப்பு பிரிவு பொறுப்பதிகாரி கே.எஸ்.பி அசங்க (SI) தலைமையிலான சமந்த (50878), கோசல (80156), அக்ரம் (92658) ஆகியோர் அடங்கிய குழுவினர் மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது கைப்பற்றப்பட்ட சான்றுப்பொருட்களையும் சந்தேக நபரையும் மேலதிக சட்ட நடவடிக்காக நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டனர்.
-எஸ்.எம்.எம்.முர்ஷித்