உள்நாடுபிராந்தியம்

30 அடி பள்ளத்தில் வீழ்ந்து பவுஸர் விபத்து – இருவர் பலி

கலவானையிலிருந்து பதுரலிய நோக்கிச் சென்ற பவுசர் ஒன்று, கொடிப்பிலிகந்த சமன் தேவாலயத்துக்கு அருகில் பதுரலிய-கலவா வீதியில் 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில், உள்ளே இருந்த இருவர் உயிரிழந்தனர்.

நேற்று (26) நள்ளிரவு 12 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தில் காயமடைந்த மற்றொருவர் கலவான மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்கள் புலத்சிங்கள பகுதியில் உள்ள இறப்பர் தொழிற்சாலையின் ஊழியர்கள் என்றும், அவர்கள் புலத்சிங்கள மற்றும் ரம்புக்கனை பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

செங்குத்தான பகுதியில் பவுசர் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் சறுக்கியதால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று கலவானை பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்த விபத்து குறித்து கலவானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பல துறையினருக்கு நிவாரணம் வழங்குவதற்கு அரசாங்கம் நடவடிக்கை

சிலிண்டரின் தேசியப் பட்டியலில் ரவி கருணாநாயக்க

editor

இந்திய மீனவர்கள் 54 பேர் இலங்கை கடற்பரப்பில் கைது