வகைப்படுத்தப்படாத

30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளை திருடிய 2 பேர் கைது

(UDHAYAM, COLOMBO) – கொஹிலவத்தையில் குதிரைகளை பராமரிக்கும் நிலையத்தில் இருந்து திருடப்பட்டுள்ள 30 லட்சம் பெறுமதியுடைய 2 குதிரைகளுடன் 2 சந்தேக நபர்கள் வெல்லம்பிடிய காவற்துறையினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திம்புலாகல வன பகுதி ஒன்றில் இருந்து குதிரைகளுடன் குறித்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குதிரைகளின் உரிமையாளர் காவற்துறையில் வழங்கிய முறைப்பாட்டுக்கு அமைய, தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதனை தொடர்ந்து திருடப்பட்டுள்ள குதிரைகள் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வடமத்திய மாகாண அமைச்சு பதவிகளில் இருந்து விலக போவதாக எஸ்.எம் ரஞ்ஜித் அறிவிப்பு

சாதாரண தர மாணவர்களுக்கான மேலதிக வகுப்புக்கள் நாளை முதல் தடை

கணிதப்பாட பரீட்சை எழுதிய GCE (O/L) மாணவர் தற்கொலை