உலகம்

30 பேர் பயணித்த பேருந்து மண் சரிவில் சிக்கியது – 18 பேர் பலி – சோகத்தில் மூழ்கிய இந்தியா

இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் பிலஸ்பூர் மாவட்டம் மொரோடன் நகரில் ஏற்பட்ட பாரிய மண்சரிவில் சிக்கி உயிரிழந்தவரின் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஹரியானாவின் ரோஹ்தாலிலிருந்து குமர்வின் பகுதிக்கு சுமார் 30 பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்தொன்று சென்றுகொண்டிருந்த போதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பேருந்தின் மீது திடீரென மலை சரிந்து விழுந்துள்ளது. இதனால் பேருந்து மண்சரிவில் சிக்கியுள்ளது.

பேருந்து முழுவதும் பாறைகள் விழுந்து முழுவதுமாக மண்ணால் மூடப்பட்டுள்ளது.

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் படையினர் பேருந்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க முயற்சித்து வருகின்றனர்.

Related posts

இளவரசர் வில்லியம்ஸ் : தொற்றுக்குள்ளாகியமை உறுதி

சீனாவுக்கு எதிராக எழுதிய Jimmy Lai கைது

காசாவில், 4.23 லட்சம் பேர் தெற்கு நோக்கிச் சென்றுள்ளனர் : ஐ.நா தகவல்