உள்நாடுபிராந்தியம்

3 பஸ்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து – பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயம்

பலாங்கொடை மாதொல சந்தியில் 3 பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மோதியதால் இன்று 11) காலை ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வழியாக வந்த அம்பியூலன்ஸ் மற்றும் வாகனங்களில் காயமடைந்த 12 மாணவர்கள் மற்றும் பொதுப் பயணிகள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் எவருக்கும் ஆபத்தான காயங்கள் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

பெல்மதுளை முதல் பலாங்கொடை நோக்கிச் சென்ற இபோச பஸ் எதிர்ப்பக்கமாக வந்த இபோச மற்றும் தனியார் பஸ்களுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

மாணவர்கள் பாடசாலை செல்லும் நேரத்தில் இவ்வீதியில் பயணிகள் பஸ்கள் இடையே கடும் போட்டி இட ம் பெறுவதாகவும், இதனால் மாணவர்கள் உட்பட பயணிகள் பொதுமக்கள் பெரும் அசெளகரியத்துக்கு உட்படுவதாவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Related posts

வசந்த கரன்னாகொட உள்ளிட்ட 14 கடற்படை அதிகாரிகளுக்கு அழைப்பு [VIDEO]

 நாட்டில் மீண்டும் ஒரு நிலநடுக்கம்

காணிகளை பிழையாக அபகரித்தால் சட்ட நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டேன் – சாணக்கியன்.