உள்நாடு

29 வயதுடைய பொலிஸ் கான்ஸ்டபிள் நீரில் மூழ்கி உயிரிழப்பு

தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரகஸ் வாவியில் நீராடச் சென்ற நபரொருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக தெஹியத்தகண்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 29 வயதுடைய கிராந்துருகோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த அரச புலனாய்வு சேவை தலைமை அலுவலகத்தில் பணியாற்றி வந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே உயிரிழந்துள்ளதாக தெரியவருகிறது.

குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நண்பர்களுடன் நீராடச் சென்றிருந்த வேளையில் இவ்வாறு நீரில் மூழ்கி மரணித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சடலம் தற்போது தெஹியத்தகண்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தெஹியத்தகண்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மேலும் 184 பேர் பூரணமாக குணம்

வெள்ளை வேன் ஊடக சந்திப்பு – சாட்சிகளை விசாரிக்க திகதி நியமனம்

பாதாள உலகத்துடன் தொடர்புடைய அரசியல்வாதிகள் குறித்து தகவல் வெளியிட்டார் அமைச்சர் ஆனந்த விஜேபால

editor