உள்நாடுபிராந்தியம்

27 மில்லியன் ரூபாய் பெறுமதியான கேரள கஞ்சா பறிமுதல்

27 மில்லியன் ரூபாவிற்கும் அதிக பெறுமதி கொண்ட121 கிலோ கிராம் கேரள கஞ்சாவை தொகையை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

கடந்த 27 மற்றும் 29 ஆம் திகதிகளில் மன்னாரில் உள்ள வங்காலை மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள நெடுந்தீவுக்கு அப்பால் உள்ள உள்ளூர் கடல் பகுதியில் கடற்படையினர் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கைகளின் போது இந்த கஞ்சா தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதனுடன், 19 முதல் 56 வயதுக்குட்பட்ட 05 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

இதனுடன், குறித்த கேரள கஞ்சாவை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு டிங்கி படகுகளும் கடற்படையினரால் பொறுப்பேற்கப்பட்டுள்ளன.

இரண்டு டிங்கி படகுகள், கேரள கஞ்சா மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக நெடுந்தீவு மற்றும் வங்காலை பொலிஸ் நிலையங்களில் ஒப்படை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

தனியார் நிகழ்வுகளில் கலந்துகொள்ளப் போவதில்லை

மின் மற்றும் நீர் குழாய் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் முதலாவது மத்திய செயற்குழு புதனன்று