உள்நாடுபிராந்தியம்

26 வயது பெண் கொலை – குற்றத்தை ஒப்புக்கொண்ட 17 வயது சிறுவன்

குருவிட்ட, தெவிபஹல, தோடன் எல்லவைச் சேர்ந்த 26 வயது பெண்ணை கழுத்தை அறுத்து கொலை செய்ததாக 17 வயது சிறுவன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார்.

பாலியல் வன்புணர்வுக்கு முயன்றபோது குறித்த பெண் சத்தம்போட முயன்றபோதே இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேக நபர் கூறியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவருக்குச் சொந்தமான தங்கச் சங்கிலி, தொலைபேசி மற்றும் கைப்பை ஆகியவை பின்னர் தொலைதூரப் பகுதியில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டன.

பாடசாலைக்குச் செல்லாத சந்தேக நபர், பொலிஸ் K9 பிரிவின் உதவியுடன் கடந்த வியாழக்கிழமை (3) கைதுசெய்யப்பட்டார்.

நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, அவர் தெஹியோவிட்ட சிறுவர் தடுப்பு மையத்தில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேக நபருக்கு 18 வயது நிரம்பியதும் சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்டவரின் இறுதிச் சடங்கு நேற்று முன்தினம் (4) மதியம் குருவிட்ட மயானத்தில் நடைபெற்றது.

ஜூலை 2 ஆம் திகதி மதியம் பாதிக்கப்பட்ட பெண் வேலை முடிந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்தது.

சம்பவத்தில் காயமடைந்த பெண் இரத்தினபுரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்

Related posts

UNOPS இன் தெற்காசிய அலுவலகத்தின் பணிப்பாளர் பிரதமரைச் சந்தித்தார்

editor

மீண்டும் கட்சியில் ஒன்றிணையுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பகிரங்க அழைப்பு

editor

கோட்டா திறமையான அரசியல்வாதி அல்ல