உள்நாடு

250 பேருக்கு ஆசிரியர் நியமனம் வழங்கி வைப்பு

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த 250 பட்டதாரிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (30) திருகோணமலை -உவர்மலை விவேகானந்தா கல்லூரியின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

2024 போட்டிப்பரீட்சை நடாத்தப்பட்டு அதிலிருந்து 1000 பேர் நேர்முகப்பரீட்சைக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.

இதன்போது நேர்முகப் பரீட்சையிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 250 பேருக்கே ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதில் அம்பாறை மாவட்டத்திலிருந்து சிங்கள மொழிமூலம் 34 பேரும் தமிழ் மொழிமூலம் 61பேரும், மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் மொழிமூலம் 94 பேரும், திருகோணமலை மாவட்டத்தில் சிங்கள மொழிமூலம் 19 பேரும் தமிழ் மொழிமூலம் 42 பேருக்குமாக மொத்தம் 250 பேருக்கான ஆசிரியர் நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் பேராசிரியர் ஜயந்தலால் ரத்ன சேகர, வெளிவிகார வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா, கிழக்கு மாகாண பிரதம செயலாளர் ஆர் எம் பி எஸ் ரத்நாயக்க ,கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர், கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நாடாளுமன்ற உறுப்பினர் சுரேன் ராகவன் கலந்து கொள்ளும் THE BATTLE

நிபந்தனையுடனான மீளழைத்துவரும் நடவடிக்கைகள் அரசினால் மீண்டும் அறிமுகம்

பொதுத் தேர்தல் தொடர்பில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பதிவு

editor