உள்நாடு

25 வயதுக்கு மேற்பட்ட நால்வரில் ஒருவர் பாரிசவாத நோயால் பாதிக்கப்படலாம்

25 வயதுக்கு மேற்பட்ட நான்கு பேரில் ஒருவர் அவர்களின் வாழ்நாளில் பாரிசவாத நோயால் (stroke) பாதிக்கப்படலாம் என்று சுகாதார தரப்பினர் கூறுகின்றனர்.

பாரிசவாத நோயாளிகளில் சுமார் 30% பேர் 20 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் என்று களுத்துறை போதனா வைத்தியசாலையின் நரம்பியல் வைத்திய நிபுணர் சுரங்கி சோமரத்ன தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 29 ஆம் திகதி உலக பாரிசவாத தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்ற போதே வைத்தியர் சுரங்கி சோமரத்ன இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்கிய வைத்தியர், ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் சிறிது நேரமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம் என்று கூறினார்.

நடைபயிற்சி, உடல் உழைப்பு தேவைப்படும் விளையாட்டை விளையாடுதல், நீச்சல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் ஆகியவையும் சிறந்தவை என்று அவர் மேலும் கூறினார்.

Related posts

அம்பாறை மாவட்டத்தின் சகல பகுதிகளிலும் பலத்த மழை

editor

யாழ் மாவட்டத்தில் குறைக்கப்படாத உணவுகளின் விலை – பொதுமக்கள் விசனம்

எதிர்வரும் வாரங்களுக்குள் மேலும் எட்டு லட்சம் பைஸர் தடுப்பூசிகள்