உள்நாடு

24 வயது இளைஞன் ஒருவனை பலி வாங்கிய சீதாவக்கை ஆறு

(UTV | கேகாலை) –     கேகாலை, தெஹியோவிட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சீதாவக்கை ஆற்றில் நீராடச்சென்ற இளைஞர் ஒருவர் நேற்று மாலை நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.

நீரில் மூழ்கிய நபர் குறித்த ஆபத்தான நிலையில் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.  இதன்படி குருவிட்ட, கதன்கொட கொலனி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இறந்த நபரின் சடலம் அவிசாவளை வைத்தியசாலை, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் தெஹியோவிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போராட்டக்காரர்கள் பாதுகாப்பு படையினர் பிடியில்..

இரண்டு குழுக்களுக்கு இடையில் மோதல் – 8 பேர் வைத்தியசாலையில்

பல பகுதிகளில் 24 மணி நேர நீர் விநியோகம் தடை