வகைப்படுத்தப்படாத

23 பேரை நாட்டிலிருந்து வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவு

(UTV|COLOMBO)-தமது நாட்டில் பணியாற்றும் 23 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் ரஷ்ய உளவாளி மீதான கொலை முயற்சி தொடர்பில் ரஷ்யா தெளிவான விளக்கமளிக்காமையினால் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாக பிரித்தானிய பிரதமர் தெரசா மே தெரிவித்துள்ளார்.

வெளியுறவு துறை அதிகாரிகளை வெளியேற்றியமைக்கு ரஷ்யா கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்த நடவடிக்கை பகை உணர்வு கொண்டது எனவும் முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் லண்டனிலுள்ள ரஷ்ய தூதரகம் தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவில் கடந்த 04 ஆம் திகதியன்று மயங்கிய நிலையில் இருந்து தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் முன்னாள் ரஷ்ய உளவாளி செர்கெய் ஸ்கிர்பால் மற்றும் அவரது மகள் யூலியாவை கொல்ல நச்சு வேதிப்பொருள் பயன்படுத்தப்பட்டிருப்பதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உளவாளி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ரஷ்யா பதிலளிக்க வேண்டுமென பிரதமர் தெரஸா மே தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், ரஷ்ய அதிகாரிகள் வெளியேற ஒரு வார கால அவகாசமளித்துள்ள பிரதமர் தெரசா மே, இந்த ஆண்டு ரஷ்யாவில் நடைபெறவுள்ள உலகக்கிண்ண கால்பந்து போட்டியில் பிரித்தானிய அரச குடும்பத்தினர் கலந்துகொள்ள மாட்டார்கள் எனவும் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Petitions against fmr. def. sec. Hemasiri & Pujith to be taken up

மிடாக் புயல் – 06 பேர் உயிரிழப்பு

Plane crash at Texas Airport kills 10