உலகம்உள்நாடு

22 இந்தியர்கள் அதிரடியாக கைது!

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள்  கைது செய்யப்பட்டுள்ளதுடன், மூன்று படகுகளும் கைப்பற்றப்பட்டது.

யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பரப்பில் கடற்படையினர் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டு இருந்த போதே நேற்று இரவு (09) இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களை காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்று விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

விசாரணைகளின் பின்னர் கடற்றொழில் நீரியல் வளத்துறை திணைக்கள அதிகாரிகள் ஊடாக, ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Related posts

மலையக அதிகார சபை மூடப்படாது – மனோ எம்.பியிடம், அமைச்சர் சமந்த வித்யாரத்ன உறுதி

editor

ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

editor

ஸ்பெயினில் ஊரடங்கு உத்தரவு மே மாதம் வரையில் நீடிப்பு