அரசியல்

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில்.

22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தற்போது வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

அரசியலமைப்பின் 83 ( பி ) பிரிவை 6 ஆண்டுகளுக்குப் பதிலாக 5 ஆண்டுகளாக திருத்த இந்த வரைவு தயாரிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இந்த வரைவு  வர்த்தமானியாக  வெளியிடுவதனை நிறுத்துமாறு அமைச்சு செயலாளருக்கு தான் அறிவித்ததாக நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்க்ஷ நேற்று (18) தெரிவித்தார்.

ஆனால் இன்று (19) ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் உத்தரவின் பேரில் இந்த வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது.

Related posts

மர்ஹூம் எம்.எச்.எம். அஷ்ரஃப் அவர்களின் 25 ஆவது நினைவேந்தல் தினத்தை முன்னிட்டு கலந்துரையாடல்

editor

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் – 09.00 மணி வரை பதிவான வாக்கு சதவீதம்

editor

ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி இன்று வேட்புமனு தாக்கல்

editor