நாட்டு மக்களுக்கு உயர்தரம் மற்றும் சிறந்த சுகாதார சேவையை வழங்கும் நோக்கில் முன்கூட்டியே சுகாதார சேவையில் ஆளணி வளத்தை வலுப்படுத்துவதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் வேலைத்திட்டங்களுக்கு அமைவாக அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் பதவிக்காக 213 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்நியமனம் வழங்கல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நேற்று (27) கொழும்பில் இலங்கை மன்றக் கல்லூரியில் இடம்பெற்றது.
