உள்நாடு

ரம்புக்கனை விவகாரம் தொடர்பில் ஜனாதிபதி – பிரதமர் கவலை

(UTV | கொழும்பு) – அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் இலங்கை பிரஜைகளின் உரிமைக்கு, இடையூறு ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ட்விட்டர் பதிவொன்றின் ஊடாக அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

ரம்புக்கனையில் நடந்த சம்பவம் தொடர்பில் பக்கசார்பற்ற மற்றும் வெளிப்படையான விசாரணைகளை காவல்துறை மேற்கொள்ளும் எனவும் குறித்த துயரச் சம்பவம் தொடர்பில் தான் கவலையடைவதாகவும் ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், எதிர்ப்பு தெரிவிக்கும் அனைத்து பொதுமக்களும் வன்முறையை தவிர்க்குமாறு ஜனாதிபதி தனது ட்விட்டர் பதிவில் மேலும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் ட்விட்டரில் கருத்தொன்றை வெளியிட்டுள்ள பிரதமர், குறித்த சம்பவத்தினால், தாம் மிகுந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும், இது தொடர்பில் விசேட விசாரணை நடத்தப்பட வேண்டுமென இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

Related posts

ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பகுதி மக்களுக்கான அறிவித்தல்

இதுவரை 1,076 பேர் கைது

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்