அரசியல்உள்நாடு

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரை நாளை

2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை, நாளை (07) இடம்பெற உள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்க உள்ளார்.

அதன்படி, வரவு செலவுத்திட்ட இரண்டாவது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 8 ஆம் திகதி முதல் 6 நாட்கள் இடம்பெறவுள்ளது.

இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது.

மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 5 ஆம் திகதி பிற்பகல் 6 மணிக்கு நடத்தப்படவுள்ளது.

Related posts

மாணவர்களின் பங்களிப்பில் பொலிவுற்ற தென்கிழக்கு பல்கலையின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிப் பீடம்!

editor

எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விவகாரம் – உயர் நீதிமன்றின் உத்தரவு

editor

ஏமாந்துவிடாதீர்கள்! – இலங்கை மத்திய வங்கி மக்களுக்கு எச்சரிக்கை!