அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

2026 வரவு செலவுத் திட்டம் – முழுமையான உரை தமிழில் இதோ

எமது இரண்டாவது வரவுசெலவுத் திட்டத்தை இவ்வுயரிய சபையில் சமர்ப்பிப்பதற்கு கிடைத்தமையையிட்டு பெருமகிழ்ச்சி அடைகின்றோம்.

இலங்கை மக்கள் எங்களுக்குப் பெற்றுத்தந்த வரலாற்றுச் சிறப்புமிக்க மக்கள் ஆணையின் பின்னர், கடந்த ஒரு வருடகால குறுகிய காலப்பகுதிக்குள் எமது மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக நாங்கள் தெளிவான நோக்குடன் பல்வேறு தீர்மானங்களை எடுத்தோம். இதுவரை காலமும் இருந்துவந்த உறவினர் உபசரிப்பு, அதனுடன் இணைந்த ஊழல் நிறைந்த அரசியல் கலாசாரத்தில் தெளிவான மாற்றம் ஏற்படுமென மக்கள் எதிர்பார்த்தனர். அந்த நம்பிக்கையைப் பாதுகாப்பதற்கு நாங்கள் எடுத்த மாற்றமிகு அந்த நடவடிக்கையையிட்டு இன்று எம்மால் பெருமைப்பட முடியும்.

பொருளாதார மற்றும் அரசியல் கட்டமைப்பை நவீனமயப்படுத்துவதற்கும், மக்களை மையமாகக் கொண்ட ஆட்சியொன்றைத் தோற்றுவிப்பதற்கும், சட்ட ஒழுங்கை மீள நிலைநாட்டுவதற்கும், ஆட்சியைப் பலப்படுத்துவதற்கும் எமது பொருளாதாரத்தில் நாம் அடையும் வெற்றிகளை நாட்டில் அடி மட்டத்தில் வாழும் மக்கள்வரை கொண்டு செல்வதற்கும் நாங்கள் தொடர்ந்தேர்ச்சியான நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளோம்.

நாங்கள் இச் சவால்களை பொறுப்பேற்ற சந்தர்ப்பத்தில் நாட்டின் பொருளாதாரம் சீர்குழைந்து காணப்பட்டது. பல தசாப்தங்களாக காணப்பட்டுவந்த பேரண்டப் பொருளாதாரம் உறுதிப்பாடற்றும் அரச நிதி சமநிலையின்மை, வினைத்திறன் அற்ற மற்றும் நிருவாகப் பலவீனங்கள் காரணமாக ஒட்டுமொத்தப் பொருளாதாரமும் பாரிய ஆபத்தை எதிர்நோக்கியிருந்தது. இதன் காரணமாக எமது மக்கள் கடும் அழுத்தத்திற்கு உட்பட்டிருந்தனர்.

இந்த நெருக்கடிக்கு எந்த விதத்திலும் பொறுப்புகூறத் தேவையில்லாத மக்களின் எதிர்பார்ப்புகள் சிதறிக் கிடந்திருந்தன. இதன் காரணமாகவே, நாங்கள் மக்கள் ஆணையைப் பெற்ற கணத்திலிருந்து பேரண்டப் பொருளாதாரத்தை உறுதிபெறச் செய்வதற்கும், அரச நிதி ஒழுக்கத்தை உறுதிப்படுத்துவதற்கும், அரச நிறுவனங்களை பலப்படுத்துவதற்கும், ஊழலுக்கு முற்றுப்புள்ளி வைத்து வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதற்கும் மக்கள் மீது பொறுப்புக்கூறுதலை உறுதிப்படுத்துவதற்கும், மிகவும் பரந்துபட்ட விதத்தில் மறுசீரமைப்புகளை நாம் ஆரம்பித்தோம். இந்த மறுசீரமைப்புகள் காரணமாக ஒருவருடமேயான மிகக் குறுகிய காலப்பகுதிக்குள் அரச நிதி, பேரண்டப் பொருளாதாரம் மற்றும் சமூக உறுதிப்பாட்டினைக் கொண்டுவருவதற்கு முடிந்தது என்பதை இந்த உயரிய சபையில் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம்.

பொருளாதாரத்தில் எல்லாத் துறைகளிலும் காணப்பட்ட பலமான வளர்ச்சி காரணமாக, 2025 ஆம் வருடத்தில் முதல் அரையாண்டு காலப்பகுதியில் எமது பொருளாதாரம் 4.8 வீத வளர்ச்சியடைந்தது. இது பல்வேறு நிறுவனங்களின் எதிர்வுகூறுதலையும் தாண்டிய பொருளாதார வளர்ச்சியாகும். பணவீக்கம் தற்சமயம் மீண்டும்​ நேர்மறை பெறுமதியை அடைந்துள்ளது. வட்டி வீதம் 8.3 வீதம் வரை குறைந்து இருப்பதன் மூலம் நிதித்துறை உறுதிப்பாடடைந்துள்ளது.

அந்நியச்செலாவணி வீதமும் உறுதிப்பாடடைந்துள்ளது. உலகளாவிய அதிர்வுகளுக்கு மத்தியிலும்கூட ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட வெளிநாட்டு துறை பலப்படுத்தப்பட்டுள்ளது. ஏற்றுமதி, சுற்றுலாத்துறை மற்றும் வெளிநாட்டு அனுப்பீடு வருமதிகளின் அதிகரிப்பு காரணமாக மொத்த உத்தியோக பூர்வ ஒதுக்கீடுகளின் அளவு 6 பில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது. 2006 ஆம் வருடத்திலிருந்து சுமார் 2 தசாப்தங்களுக்குப் பின் அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியின் 16 வீதம் என்ற மட்டத்தை இந்த வருடத்தில் அடைய முடியுமென எதிர்பார்க்கின்றோம். அதேபோன்று இந்த வருடத்தில் மொத்த தேசிய உற்பத்தியின் வீதமொன்றாக 2.3 வீத இலக்கு வைக்கப்பட்ட பெறுமதியை குறிப்பிடத்தக்க அளவின் தாண்டிச் செல்கின்ற, வரலாற்றில் அதியுயர் ஆரம்ப மிகுதியை அடையலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலை காரணமாக சர்வதேச தரப்புகளுடன் பலமான தொடர்புகளைக் கட்டியெழுப்புவதற்கும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை முன்னொரு போதும் இல்லாதவாறு கட்டியெழுப்புவதற்கும் எம்மால் முடிந்துள்ளது.

பொருளாதார நெருக்கடியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பதற்கான மூலோபாயமாகக் காணப்பட்டது எதுவெனில், அரச நிதி ஒழுக்கக்கத்துடனும் வெளிப்படைத் தன்மையுடனும் பொறுப்புக் கூறும் தன்மையுடனுமான அரச நிதி முகாமைத்துவமொன்றை ஏற்படுத்தியதாகும். உள்நாட்டு வருமானங்களை சேகரிப்பதை பலப்படுத்தல், வருமான நிருவாகத்தை டிஜிட்டல் மயப்படுத்தல், அரச செலவினங்களை மட்டுப்படுத்தலூடாக உயர் ஆரம்ப மிகுதியை அடைய முடிந்தது. இந்த ஆரம்ப மிகுதியின் தொடர்ச்சியான அதிகரிப்பு மொத்த தேசிய உற்பத்தியின் வீதமாக மத்திய அரசின் கடன் அளவை 2022 ஆம் வருடத்தில் காணப்பட்ட 114.2 என்ற வீதத்திலிருந்து 2026 ஆம் வருடமாகும் போது 96.8 வீதம் வரை குறிப்பிடத்தக்களவில் குறைப்பதற்கு பங்களிப்புச் செய்கின்றது.

மேலும், 2030 ஆம் வருடமாகும் போது இப்பெருமானம் 87.0 வீதம் என்ற மட்டத்தை அடைவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் மூலம் எமது எதிர்பார்ப்பாகிய கடன் நெருக்கடியிலிருந்து மீள்வதற்கான வழி திறந்துள்ளது.

2020 ஆம் வருடத்தில் பொருளாதாரத்தில் காணப்பட்ட நெருக்கடி நிலை படிப்படியாக அதிகரித்து உச்ச கட்டத்தை அடைந்தது. இது பொருளாதாரத்தில் எல்லா துறைகளிலும் தொடர் விளைவுகளை உருவாக்கியது. 

இதன் இறுதி விளைவு என்னவெனில் 2022 ஏப்ரல் மாதமாகும்போது எமது நாடு வங்குரோத்து நாடாக பிரகடனப்படுத்தப்பட்டதாகும். இந்த பொருளாதார வங்குரோத்து நிலை எமது நாட்டுக்கு ஒரு தசாப்த காலத்தை இழக்கச் செய்தது. அதாவது நெருக்கடிக்கு முன்பிருந்த பொருளாதார நிலையை அடைவதற்கு 10 வருட காலம் செல்லும் என்பதாகும். அதற்கு அமைய பெரும்பாலானோரின் கருத்து 2019 பொருளாதார நிலையை அடைவதற்கு 2029 ஆம் ஆண்டுவரை செல்லும் என்பதாகும். 

ஆனால் 2025 இறுதியாகும் போது எங்களுக்கு பொருளாதார நெருக்கடிக்கு முன்பு இருந்த நிலையை அடைவதற்கு முடியுமென நாம் நம்பிக்கை கொண்டுள்ளோம்.

எமது கடன் மறுசீரமைப்பு பணிகள் பெரும்பாலும் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. இலங்கை நிலைபேரான நிதி பாதையின் பக்கம் செலுத்தப்பட்டிருப்பதுடன், உள்நாட்டு மற்றும் சர்வதேச முதலீட்டாளர்களின் நம்பிக்கை மென்மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த அடையப்பெற்ற முன்னேற்றம் காரணமாக, சர்வதேச தரப்படுத்தல் நிறுவனங்ளான Fitch Ratings, Moody’s மற்றும் S&P நிறுவனங்கள் நாட்டின் தரப்படுத்தல்களை முறையே CCC+, Caa1 மற்றும் CCC+/C வரை உயர்த்தியுள்ளன. இப் புதிய தரப்படுத்தல்கள் ஊடாக இலங்கையில் முதலீடு செய்தல் தொடர்பாக நம்பிக்கையை மேலும் எடுத்துக்காட்டுகின்றது.

எமது தேசிய தேவைகளை அடையும் நோக்குடன் சர்வதேச நாணய நிதியத்தின் விஸ்தீரன கடன் வசதிகளின் கீழ் மற்றும் சர்வதேச அபிவிருத்தி பங்குதாரர்களின் பங்குபற்றுதலுடன் எங்களுக்குத் தேவையான பொருளாதார மறுசீரமைப்புகளை மேற்கொண்டு வருகின்றோம். இந் நிகழ்ச்சித்திட்டங்களின் இலக்குகளை கட்டமைக்கப்பட்ட அளவீடுகளையும் நிறைவேற்றிய வண்ணம் முறையாக மேற்கொள்ளப்படுகின்ற மீளாய்வுகளை பூரணப்படுத்துவதற்கும் அதன் பொருளாதார பயன்களைப் பெற்றுக் கொள்வதற்கும் எம்மால் முடிந்துள்ளது.

பேரண்டப் பொருளாதாரத்தின் நிலைபேரான தன்மையை வழமைக்கு கொண்டு வருதல் அரச நிதி முகாமைத்துவத்தைப் பலப்படுத்தல் மற்றும் நீண்டகாலம் தாக்குப்பிடிக்கக்கூடிய தன்மைக்குத் தேவையான அரச நிதி மற்றும் வெளிநாட்டு தாங்கிருப்புகளை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக அரச மற்றும் சர்வதேச அமைப்புகளின் ஒத்துழைப்புடன் உயர் முன்னேற்றம் அடையப்பெற்றுள்ளது.

அதேபோன்று, சமூக பாதுகாப்பும் மனிதவள அபிவிருத்தியும் எமது கொள்கை அணுகு முறையின் அடிப்படை நோக்கமாகும். 

இதற்காக, அஸ்வெசும நிகழ்ச்சித்திட்டத்தை இற்றைப்படுத்தி விரிவாக்குவதன் மூலம், உண்மையிலேயே தகுதியுள்ள குறைந்த வருமானமுடைய குடும்பங்களுக்கு உதவி வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தொடர்ந்தும் குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு அவர்களுக்கான உதவிகள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்காக, அப் பயனாளிகளை 2026 ஆம் வருடத்தில் மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். அதேபோன்று முதியோர்களுக்கும் சிறுநீரக நோயாளிகளுக்குமான கொடுப்பனவுகள் அதிகரிக்கப்பட்டது. பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவும் வகையில் மகாப்பொல புலமைப்பரிசிலும் மாணவர் கொடுப்பனவும் அதிகரிக்கப்பட்டது.

அஸ்வெசும உதவித் தொகை பெறும் பயனாளி குடும்பங்களின் பாடசாலை மாணவர்களுக்கு புத்தகங்களையும் பாடசாலை உபகரணங்களையும் கொள்வனவு செய்வதற்காக கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. இப் பணிகளின் நோக்கம் யாதெனில் பொருளாதார வளர்ச்சியின் பயன்களை உண்மையாகவே தேவையுள்ள மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதாகும்.

சிறந்த தரத்தை உடையதும் வினைத்திறன் மிக்கதுமான சேவைகளை வழங்குவதற்காக அரச துறையை மறுசீரமைப்புச் செய்து நவீனமயப்படுத்துவதற்கான தேவை காணப்படுகின்றது. இதற்காக எமது அர்ப்பணிப்பை எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தினூடாகவே நாம் எடுத்துக் காட்டினோம். இதற்காக அரச ஊழியர்களின் சம்பளம் ஏற்கனவே 3 கட்டங்களில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அரச துறையில் நிலவுகின்ற அத்தியவசிய வெற்றிடங்களை நிரப்புவதற்கு நாம் நடவடிக்கை எடுத்துள்ளோம். அரச துறையை டிஜிட்டல் மயப்படுத்தும் உபாயவழிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. அரச துறையை மீளமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். இதன் நோக்கம் யாதெனில், மக்களுக்கு உண்மையிலேயே சேவையாற்றக்கூடிய வினைத்திறன்மிக்கதும் கவர்ச்சிகரமானதுமான அரச சேவையொன்றை கட்டியெழுப்புவதாகும்.

ஆட்சி மறுசீரமைப்பையும் ஊழலுக்கு எதிரான செயற்பாடுகளையும் துரிதப்படுத்தி, வெளிப்படைத் தன்மை, பொறுப்புக் கூறல் மற்றும் பொது மக்கள் நம்பிக்கையை வென்றெடுப்பதற்கு எம்மால் முடிந்துள்ளது. தனியார்- அரச கூட்டு முயற்சிகள், அரச தொழில் முயற்சிகள், அரச சொத்து முகாமைத்துவம் மற்றும் அரச பெறுகை தொடர்பான புதிய சட்ட வரைபுகள் ஊடாக, காலங்கடந்த சட்ட திட்ட முறைகளை, புதிய சட்ட முறைமை மூலம் மீள் நிறுவுவதே எமது எதிர்பார்ப்பாகும். இதற்குத் தேவையான புதிய சட்ட வரைபுகள் தற்சமயம் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது. அரச நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய எமது டிஜிட்டல் பிரவேசமும் தற்சமயம் பல்வேறு துறைகளில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. தொடர்ந்தும், ஒருங்கிணைந்த திறைசேரி முகாமைத்துவ தகவல் முறைமையை பலப்படுத்துவதற்கும், இலத்திரனியல் பெறுகை முறைமையை நிர்மாணிப்பதன் மூலம் வினைத்திறன் மிக்க வகையில் ஊழல் மற்றும் மோசடி நடவடிக்கைகளுக்கான சந்தர்ப்பங்கள் இல்லாதொழிக்கப்படும்.

“ஊழல் என்பது வறியவர்கள் மீது சுமத்தப்பட்ட வரியொன்றாகும். அதேபோன்று, அது எமது அபிவிருத்தியை பின்னடையச் செய்கின்ற கைவிலங்கொன்றாகும்”. எமது இந்த மறுசீரமைப்பு வெறுமனே வினைத்திறனை அதிகரிப்பதற்காக மட்டுமல்ல அது சமூக நீதியை நிறைவேற்றுவதற்கான முக்கியமான கருவியும் ஒன்றாகும்.

பல்வேறு ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்தப்பட்ட விடயங்களுக்கு அமைய, ஊழலை மட்டுப்படுத்துவதன் மூலம் பொருளாதார அபிவிருத்தியை மேலோங்கச் செய்ய முடியும். சொத்துக்களையும் ஈட்டப்பட்ட செல்வத்தையும் வெளிப்படுத்தும் முறையில் வெளிப்படைத் தன்மை மேலும் மேம்படுத்தப்பட்டுள்ளது. இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்​சாட்டுகளை விசாரணை செய்வதற்கான ஆணைக்குழுவின் வரவு செலவையும், பணியாள் தொகுதியின் சுயாதீனத்தையும் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 2026 ஆம் வருடத்தின் மார்ச் மாதமாகும்போது டிஜிட்டல் முறையில் சொத்துக்களையும் பொறுப்புக்களையும் வெளிப்படுத்தும் முறைமையொன்றை அறிமுகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். 

அதேபோன்று 2026 ஆம் வருடத்தில் நீதித்துறை உத்தியோகத்தர்களுக்காக ஒழுக்கநெறிக் கோவையொன்றை அறிமுகம் செய்வதற்கு நிபுணர்கள் குழு வொன்றை நியமிப்பதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கு மேலதிகமாக அரசியல்வாதிகளுக்கும் உயர்மட்ட உத்தியோகத்தர்களுக்கும் இதுவரை இருந்த வந்த தேவையற்ற சலுகைகளை நீக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. அதற்கமைய நாங்கள் நியாயத்தையும் சமத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய சமூகமொன்றை கட்டியெழுப்புவதை நோக்காகக் கொண்டு பணிகளை முன்னெடுத்து வருகின்றோம்.

ஊழலை தடுப்பதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் மூலம் முதலீட்டுக்கான சிறந்த சூழலொன்றை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை எடுத்துவருகின்றோம். எமது அரசாங்கம் தனியார் துறையின் விரோதியென்றும் முதலீடுகளை அதைரியப்படுத்துவார்கள் என்றும், சொத்துக்களை கைப்பற்றுவார்கள் என்றும் பல்வேறு தரப்பினர்களும் பொய்யான பிரசாரங்களை பரப்பினார்கள். இவையனைத்தும் அடிப்படையற்ற கூற்றுகளும் கருத்துக்களும் என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுவிட்டன. நாங்கள் முதலீடுகளுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கும் வியாபாரம் செய்வதற்கான வசதிகளை உறுதிப்படுத்துவதற்கும் தேவையான சட்டங்களை வகுத்த வண்ணம் ஒழுங்குமுறை பலப்படுத்திய வண்ணம் இருக்கின்றோம்.

முறையற்ற முறைகளூடாக தமது நெருங்கிய நண்பர்களுக்கு வரி விலக்களித்தல் மற்றும் வரிச்சலுகை வழங்கும் கலாசாரத்திற்கு நாங்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளோம். வெளிப்படைத் தன்மையுடன் கூடிய, விதி முறைகளை அடிப்படையாகக் கொண்ட அளவு கோல்களுக்கு அமைய வரிச் சலுகைகளை வழங்குவதற்காக மூலோபாய அபிவிருத்தி கருத்திட்டச் சட்டம் மற்றும் துறைமுக நகரச் சட்டம் ஆகிய இரு சட்டங்களையும் திருத்த உள்ளோம். வரி விலக்களிப்பு செய்வதில் வெளிப்படைத் தன்மையை அதிகரிப்பதற்காக வழங்கப்பட்ட வரி விலக்களிப்பு தொடர்பான பிரகடனமொன்றை ஒரு வருடத்திற்கு இரு தடவைகள் என்றவாறு நிதியமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்படும். அதேபோன்று இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறையை (SVAT) இரத்துச் செய்து, வரி மீளச்செலுத்தும் தொழிற்பாட்டைத் வெளிப்படைத் தன்மையுடனும் வினைத்திறனுடனும் மேற்கொள்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் இது வரி நிர்வாகத்தை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு காரணமாக அமையும்.

நாங்கள் அரச தொழில்முயற்சிகளை வினைத்திறனாக்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். அரச தொழில் முயற்சிகளுக்காக “புதிய அரச தொழில் முயற்சிச்சட்டம்” என்ற சட்டம் அறிமுகம் செய்யப்படவுள்ளதுடன், 2026 ஆம் வருடத்தில் ஆரம்பப் பகுதியில் இச்சட்டம் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது. இதன் மூலம் அரசதொழில் முயற்சிகளின் நோக்கங்களை    தெளிவாக அடையாளங் காணல், வருடாந்தம் கணக்காய்வு செய்யப்பட்ட கணக்குக் கூற்றுகளை வெளியிடல் மற்றும் பொருத்தமான கடன் பெறுகைகளுக்காக மட்டும் மட்டுப்படுத்தல்கள் இடம்பெறும். மேலும், எமது அரச சொத்து கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவம் தொடர்பான ஒழுங்கு முறைப்படுத்தலை பலப்படுத்தவுள்ளோம். 

அரச சொத்து கண்காணிப்பு மற்றும் முகாமைத்துவத்தின் போது தமது பொறுப்புக்களை சரியாக நிறைவேற்றுவதற்குத் தவறும் உத்தியோகத்தர்களுக்கு தண்டப்பணம் விதிப்பதை இலகுபடுத்தும் பொருட்டு நாங்கள் ஏற்கனவே, “தேசிய கணக்காய்வுச் சட்டத்தை” திருத்தியுள்ளோம். அரச காணி முகாமைத்துவத்தையும் பயன்பாட்டையும் மீளாய்வு செய்வதற்காக நாங்கள் விசேட செயலணியொன்றை நியமிக்கவுள்ளோம். அரச சொத்துக்களின் வெளிப்படைத் தன்மை முகாமைத்துவம் மற்றும் நீக்கும் நடைமுறையை மேம்படுத்துவதற்காக 2026 ஆம் வருடத்தில் “அரசசொத்து முகாமைத்துவச் சட்டத்தை” பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எதிர்பார்க்கின்றோம். ஆகுசெலவை அடிப்படையாகக் கொண்டு வலுச்சக்தி விலை நிர்ணயம் தொடர்ந்தும் பேணிச் செல்லப்படும் என்பதுடன் தேவையான துறைகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். ஊழலுக்கு உடந்தையாக இருக்கும் நிறுவன வலையமைப்புகளை செயலிழக்கச் செய்வதற்காக, 2026 சனவரி மாதமாகும் போது செயற்பாட்டு பயனுரிமை ஆவணமொன்றை அறிமுகம் செய்வதனூடாக நிதிசுத்திகரிப்பு எதிர்ப்பு பணிச்சட்டத்தை பலப்படுத்துவதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். மேலும், ஏற்கனவே “குற்றச் செயல்களினால் ஈட்டப்பட்ட வருமானம் தொடர்பான சட்டம்” என்ற சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இச் சட்டத்தை வலுவூட்டுவதற்காக தனியான பொலிஸ் பிரிவொன்று பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஒருவரின் தலைமையில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளது. 

எமது இந்த நோக்கிற்கு சமாந்தரமாக, பாதுகாப்பான, பேணிப்பாதுகாக்கப்பட்ட மற்றும் நியாயமான சமூகமொன்றைக் கட்டியெழுப்புவது எமது நோக்கமாகும். நீண்டகாலமாக, போதைப் பொருளுக்கும் திட்டமிடப்பட்ட குற்றச் செயல்களுக்கும் இரையான எமது பிள்ளைகளை அதிலிருந்து மீட்டெடுக்க வேண்டும். அதற்காக நச்சுப் போதைப் பொருள் வழங்கல் சங்கிலியை உடைத்தெறிதல், கேள்வி வலையமைப்பை பலவீனப்படுத்தல், கல்வி மற்றும் புனர்வாழ்வு நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்தல், தொழில் வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகள் அடங்கிய செயற்றிட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

எமது அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு உதவி ஒத்தாசை வழங்கிய இருதரப்பு மற்றும் பல்தரப்பு பங்குதாரர்களுக்கு, அதேபோன்று இலங்கை மத்திய வங்கியின் பங்களிப்புக்கு நாங்கள் நன்றி தெரிவிக்க விரும்புகின்றோம். இந்த பங்களிப்புகள் நிரந்தரமற்றும் சுபீட்சம் பொருந்திய இலங்கையொன்றை கட்டியெழுப்புவதற்கு உறுதுணையாக அமைந்ததுடன், இந்த தொடர்புகளை தொடர்ந்தும் பலப்படுத்துவதற்கு நாங்கள் ஆர்வமாக உள்ளோம்.

எமது இந்த இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தின் மூலம் முதலாவது வரவு செலவுத்திட்டத்தினூடாக நாங்கள் இட்ட அத்திவாரத்தை தொடர்ந்தும் பலப்படுத்திய வண்ணம் எமது பொருளாதாரத்தில் வேகமான பாய்ச்சலை மேற்கொள்ள நாங்கள் எதிர்பார்க்கின்றோம். வளமான நாடு அழகான வாழ்க்கை எனும் பாதையில் பயணிக்கும் எமது பயணத்தில் சவால்களை வெற்றிகொண்டு, முன்னோக்கிச் செல்வதற்கு அனைத்துத் தரப்பினர்களினதும் பங்களிப்பையும் ஒத்துழைப்பையும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

2. 2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலோபாய நோக்கங்கள்

2.1 நிலைபேறான, சகலருக்கும் பயனளிக்கக்கூடிய பொருளாதார விருத்தி

ஒருசில வருடங்களில் 7 வீதத்தைத் தாண்டிய விருத்தியை அடைந்த வண்ணம் அதன் பயன்களை நாட்டின் சகல பிரதேசங்களுக்கும், சமூகங்களுக்கும் மற்றும் சமூகக் குழுக்களுக்கு இடையில் நியாயமான முறையில் பகிர்ந்து செல்வதை உறுதிப்படுத்துவதே எமது பிரதான உபாயவழி நோக்கமாகும். இதற்காக உற்பத்தித் திறனை அதிகரித்தல், புத்தாக்கங்களை ஊக்குவித்தல், தனியார் துறையை இணைத்துக் கொண்ட முதலீடும் விருத்தியும் என்பன எமது பொருளாதாரத்தை வழிநடாத்தும் பிரதான சக்திகளாக அமையும். வெளிப்படைத் தன்மையுடன் கூடிய, விதி முறைகளை அடிப்படையாகக் கொண்ட நடைமுறைகள் மூலம் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்த்தெடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். அதேபோன்று ஏற்றுமதிகளையும் பெறுமதிசேர்க்கப்பட்ட கைத்தொழில்களையும் பலப்படுத்திய வண்ணம், இலங்கையை உலகளாவிய பெறுமதிசேர் சங்கிலித் தொடருடன் இணைப்பதும் முக்கியமாகும். அரச – தனியார் கூட்டு முயற்சிகளையும் அரசதொழில் முயற்சிகளையும் நவீனமயப்படுத்துவது இம்முயற்சிகளுக்கு தொடர்ந்தும் பலமாக அமையும். அதே போன்று உபாயவழி ரீதியாக உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி திட்டங்களை வினைத்திறனுடனும், வெளிப்படைத் தன்மையுடனும் மற்றும் பொறுப்புக் கூறுதலுடனும் அமுல் செய்வது கட்டாயமாகும்.

2.2 ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் மூலம் உயர் வருமானம்

இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை தொடர்ந்தும் அதிகரிக்கும் நோக்குடன் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தின் (2025-2029) – மூலம் ஏற்றுமதிப் பல்வகைப்படுத்தல், ஏற்றுமதிப் போட்டித் தன்மையை மேம்படுத்தல், உலகளாவிய சங்கிலித் தொடர்புடன் இணைந்து செயற்படுதல் மற்றும் புதிய ஏற்றுமதி சந்தைகளை கைப்பற்றுதல், அதேபோன்று ஏற்கனவே உள்ள சந்தையை விஸ்தரித்தல் முதலான நடவடிக்கைகள் எடுக்கப்படும். இலங்கையின் ஏற்றுமதி வளர்ச்சியை நோக்காகக் கொண்டு தற்சமயம் கைச்சாத்திடப்பட்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களை மீளாய்வு செய்தல் மற்றும் புதிய சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களுக்கு வருதல்போன்ற நடவடிக்கைகளின் பொருட்டு ஏற்கனவே நிபுணர் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. புதிய தீர்வை வரிக் கொள்கையை அறிமுகம் செய்வதற்கும் , புதிய ஏற்றுமதி உற்பத்தி மற்றும் சேவை மேம்பாட்டுக்குத் தேவையான நிதி வசதிகளை வழங்குவதற்கும் தேசிய தனிவர்த்தக கரும பீடத்தை ஆரம்பிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

2.3 கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்தல்

இலங்கையின் கடன் மட்டம் நிலைபேறானதல்லவென சர்வதேச நாணய நிதியம் 2022 ஆம் வருடத்தில் தெரிவித்திருந்தது. இதற்கான பிரதான காரணம், பொறுப்பற்ற வீணான கடன்பெறுகை, பெற்றுக்கொண்ட கடன்களிலிருந்து தேவையான சொத்துக்கள் உருவாக்கப்படாததும், கடன் முகாமைத்துவத்தை முறையான கொள்கைப் பணிச்சட்டத்தில் மேற்கொள்ளாதிருத்தலுமாகும். எவ்வாறாயினும், நாங்கள் இப்போது கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்காக தெளிவான திட்டமொன்றை, குறிப்பாக அரச கடன் முகாமைத்துவ அலுவலகத்தினூடாக வகுத்து வருகின்றோம். முடிவுறும் தருவாயிலுள்ள கடன்மறுசீரமைப்பு தொழிற்பாடு பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டை அடைவதற்கும் எமது தலையீடும் காரணமாக சந்தை மீதுள்ள நம்பிக்கை துரிதமாக விருத்திபெற்று வருகின்றது. அதேபோன்று, இலங்கையின் கடன் தரப்படுத்தல் உயர்வடையச் செய்யப்பட்டுள்ள பின்னணியில், கடன் நிலைபேறு தன்மையை அடையும் திசையை நோக்கி, தெளிவான பாதையூடாக முறையானதும் நிலையானதுமான பாதையில் எமது அரசாங்கம் பயணிக்கின்றது.

மொத்த நிதி தேவையை நடுத்தர கால மொத்த தேசிய உற்பத்தியில் 13 வீதத்திற்கு குறைந்த மட்டத்திலும் வருடாந்த வெளிநாட்டு கடன் சேவையை மொத்த தேசிய உற்பத்தியில் 4.5 வீத்த்தை தாண்டாத மட்டத்தை பேணிச் செல்வது கடன் நிலைபேறு தன்மையை உறுதிப்படுத்துவதற்கான மற்றுமொரு உபாயவழியாகும். அதற்கமைய அரச நிதி நிலவரத்தை பலப்படுத்தும் அதேவேளை மொத்த தேசிய உற்பத்தியின் வீதமொன்றாக அரச கடன் படிப்படியாக குறைந்து செல்வதற்கு ஆரம்பித்துள்ளது.

2032 இல் அடைய வேண்டிய இலக்கான 95 வீதத்தை தற்போதே நெருங்கியிருக்கின்றது. இப்பெறுபேறுகளின் அடிப்படையிலும் எமது கடன் முகாமைத்துவ உபாய வழிகளுக்கு அமையவும், 2032 ஆம் வருடத்தில் கடன் விகிதம் மொத்த தேசிய உற்பத்தியின் வீதமொன்றாக 90 வீதத்திற்கு குறைந்த மட்டத்தில் வைத்திருக்கும் இலக்கை இலகுவாக அடைய முடியுமென்பதே எமது நம்பிக்கையாகும்.

2028 ஆம் வருடத்தில் வெளிநாட்டு கடன்களை செலுத்துவதற்கு முடியாத நிலை தோன்றுமென அடிப்படையற்ற கருத்துக்களை ஒருசில தரப்பினர்கள் சமூகத்திற்கு எடுத்துரைத்த வண்ணம் இருக்கின்றார்கள். ஆனால் உண்மையான நிலை என்ன? நாங்கள் 2024 ஆம் வருடத்தில் 1,674 மில்லியன் அமெரிக்க டொலர்களை கடன் தவணைப் பணமாகவும் வட்டியாகவும் செலுத்தி முடித்துள்ளோம். 2025 செப்டம்பர் மாதம் 30 ஆந் திகதியாகும்போது 1,948 மில்லியன் அமெரிக்க டொலர் செலுத்தி முடிக்கப்பட்டுள்ளது. இவ் வருடத்தின் டிசெம்பர் மாத 31 ஆந் திகதியாகும் போது மேலும் 487மில்லியன் அமெரிக்க டொலரை செலுத்துவதற்கு ஆயத்தமாகவுள்ளோம். அதற்கமைய 2025 ஆம் வருடத்திற்கான மொத்த வெளிநாட்டுக் கடன் சேவை 2024 ஆண்டுடன் ஒப்பிடுகையில் ஐ.அ.டொலர் 761 மில்லியன் அதிகரிப்பாகும்.

2028 ஆம் வருடத்தில் நாங்கள் செலுத்தவேண்டிய வெளிநாட்டு கடன் சேவைகளின் அளவு 3,259 மில்லியன் டொலர் மட்டுமே. அதாவது, 2025 ஆம் வருடத்துடன் ஒப்பிடும் போது இது 824 மில்லியன் டொலர் அதிகரிப்பாகும். இக் கடன்களைச் செலுத்துவதற்கான இயலுமை எமக்கு உள்ளது. எனவே, இவ்வாறான பொய் பிரச்சாரங்களை இந்நாட்டு மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என நம்புகின்றோம்.

மேலும், அரசினால் பெறப்பட்டுள்ள சர்வதேச இறையாணமை முறிகளின் ஒரு பகுதி நல்லாட்சியுடன் தொடர்புபட்ட (Governance-Linked Bonds) முறியாக பெறப்பட்டுள்ளது. அவை 2034 மற்றும் 2035 வருடங்களுக்கிடையில் செலுத்தி முடிக்கப்பட வேட்டியவையாகும். கடன் மறுசீரமைப்பு செயன்முறையிலே இலங்கையினால் அடைந்துகொள்ளப்பட்ட இரண்டு சுட்டிகளின் முன்னேற்றத்தின் அடிப்படையில் கடன் மறுசீரமைப்பின் போது சலுகை வழங்குவதற்கு கடன் வழங்குனர்கள் இணங்கியுள்ளனர்.

அதன்படி, 2026 – 2027 ஆண்டுகளிலே அரச வருமான இலக்கு முறையே மொத்த தேசிய உற்பத்தியில் 15.3 சதவீதம் மற்றும் 15.4 சதவீத்தினை விஞ்சியதாகப் பேணுவதற்கு மற்றும் குறித்த காலப் பகுதியினுள் அரசிரை மூலோபாய அறிக்கையினை வெளியிட வேண்டிக் காணப்பட்டது. அந்த இலக்கினை அடையப்படுமாயின் 2028 ஆண்டிலிருந்து 2035 ஆண்டு வரை செலுத்த வேண்டிய வருடாந்த வட்டி விகிதத்தில் 0.75 சதவீத கழிப்பனவினை வழங்குவதற்கு அக் கடன் வழங்குனர்கள் இணங்கியுள்ளனர்.

அதன்படி, வருடமொன்றுக்கு அ.டொ. 7.9 மில்லியன் கடன் மீள்கொடுப்பனவு மிகுதியொன்று அரசாங்கத்திற்கு கிடைக்கும்.

2.4 உற்பத்திப் பொருளாதாரத்தை பலப்படுத்தல்

எமது பொருளாதாரம் பிரதானமாக இறக்குமதி மீது தங்கியிருக்கின்ற பொருளாதாரம் என்பதால் உலகளாவிய நெருக்கடிகளுக்கு மத்தியில் பொருளாதாரத்திற்கு பாரிய பாதிப்புகள் ஏற்படக்கூடும். அதனால், உற்பத்திப் பொருளாதாரமொன்றை கட்டியெழுப்புவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம். தற் சமயம் நாங்கள் இறக்குமதி செய்கின்ற பொருட்களை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு, எமது சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சியாளர்களை இலக்காகக் கொண்ட மானியங்கள், தேவையான தொழில்நுட்பம் மற்றும் சந்தை வாய்ப்புகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அதேபோன்று பாரிய அளவிலான உற்பத்திகள் சார்பில் தனியார் துறையின் பங்களிப்பை விருத்தி செய்வதற்கும், உள்ளூர் உற்பத்திகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கும் நாங்கள் கவனம் செலுத்துகின்றோம். இதற்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வதற்கும் மனிதவள அபிவிருத்திக்காக அரச – தனியார் கூட்டு முயற்சிகளை உபயோகப்படுத்திக் கொள்வதற்கும் நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

2.5 கிராமிய வறுமையை ஒழித்தல்

கிராமிய வறுமையை ஒழிப்பதாயின் மிகச் சிறிய அலகான கிராமத்தை, வளமான கிராமமாக மாற்றி அமைத்தல் வேண்டும். எமது பொருளாதாரத்தில் தேசிய மட்டத்தில் இடம் பெறுகின்ற விருத்தியின் நன்மைகள், கிராம மக்களுக்கு கிடைக்கக் கூடியவாறு பொருளாதாரத்தை கிராமத்திற்கு கொண்டு செல்லல் வேண்டும். இதற்காக உற்பத்தித் திறனுடைய பொருளாதார நடவடிக்கைகளில் ஈடுபடக்கூடியவாறு கிராம மக்களை வலுவூட்டுவது எமது பிரதான உபாய வழியாகும். இதற்காக, நவீன, நிலைபேறான அதேபோன்று, எவரொருவரும் கைவிடப்படாத அபிவிருத்தி வேலைத்திட்டமொன்று தேசிய மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்படும். இதன்கீழ் பொருளாதாரத்திற்கான சந்தர்ப்பங்களை சுலபமாக்குதல், உட்கட்டமைப்பு வசதி அபிவிருத்தி, உற்பத்திப் பொருளாதார மேம்பாடு, திட்டமிடப்பட்ட நகரமயமாக்கல், கல்வி மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்தல் முதலான நிகழ்ச்சித்திட்டங்கள், நிலைபேறான அபிவிருத்தி நோக்கங்களையும் இலக்கு வைக்கப்பட்ட அபிவிருத்திச் சட்டகத்தின் கீழும் நடைமுறைப்படுத்தப்படும்.

அத்துடன், விசேட பாதுகாப்புப் பெற வேண்டிய தரப்பினர்களை தொடர்ந்தும் பேணிப்பாதுகாப்பதும், பல்வேறு நெருக்கடிகளின் தாக்கத்தினால் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்ட தரப்பினர்களுக்காகவும் பலமான சமூகப் பாதுகாப்பு வேலைத்திட்டமொன்று அமைக்கப்படுதல் வேண்டும். வளமான நாடு அழகான வாழ்க்கை என்பதன் அடிப்படையில் இந் நோக்கங்களை அடையும் நோக்குடனேயே எமது கொள்கைப் பிரகடனம் தயாரிக்கப்பட்டுள்ளது. என்பதை கூறிக்கொள்ள வேண்டும்.

2.6 டிஜிற்றல் மயப்படுத்தலை ஊக்குவித்தல்

டிஜிற்றல் மயமாக்கலானது எமது பொருளாதார வளர்ச்சி மற்றும் மக்களின் வாழ்வை நிலையை மேம்படுத்துவதில் மிக முக்கியமான மூலோபாய பிரவேசமாக அடையாளம் காணப்பட்டுள்ளது. எமது நாட்டில் டிஜிற்றல் பொருளாதாரத்தை ஐ.அ.டொ. 15 பில்லியன் வரை வளர்ச்சியடையச் செய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதேபோல், அரச ஆட்சி மற்றும் சேவைகளை வெளிப்பட​த் தன்மையுடன் மற்றும் வினைத்திறனாக பெற்றுக்கொடுப்பதில் இவ் டிஜிற்றல் மயமாக்களானது மிக முக்கியமான பங்களிப்பு செய்கின்றது. ஆகவே, உறுதியான டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டமைப்பதற்கு அவசியமான நிதி ஆதரவுகளை பெற்றுக்கொடுத்தல் மற்றும் சட்டரீதியான மற்றும் நிறுவக ரீதியாக சூழலை உருவாக்குவதற்கு நாங்கள் நடவடிக்கை மேற்கொள்வோம்.

3. நடுத்தர கால பேரண்டப் பொருளாதாரப் போக்கு

கௌரவ சபாநாயகர் அவர்களே,

ஏற்கனவே நாம் அடைந்துள்ள தொடர்ச்சியான பேரண்டப் பொருளாதார உறுதிப்பாட்டை, பலப்படுத்தப்பட்ட அரச நிர்வாகம் மற்றும் வருமானங்களை அடிப்படையாகக் கொண்ட அரச நிதி ஒருங்கிணைப்பை தொடர்ந்தும் நிலையாகப் பேணிச் செல்வதற்கும் நாங்கள் நடவடிக்கை எடுத்துள்ளோம். எமது மக்களை பலமானதும், நிலைபேறானதும் எல்லோருக்கும் சமமான நன்மைகள் கிடைக்கப்பெறுகின்ற முன்னேற்றத்தை நோக்கி நம்பிக்கையுடன் வழிநடாத்துவதே எமது இலக்காகும். நாங்கள் நடுத்தர கால அடிப்படையில் 7 வீதத்தை தாண்டிய பொருளாதார வளர்ச்சிக்காக நடவடிக்கை மேற்கொள்கின்றோம்.

இந்த இலக்குகளை அடைவதற்காக முதலாவது வருடத்தில் நாங்கள் பலமான அடித்தளத்தை இட்டுள்ளோம். அதற்கமைய; 

·        எமது பொருளாதார வளர்ச்சி 2024 ஆம் வருடத்தின் முதல் அரையாண்டில் காணப்பட்ட 4.6 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் சமமான காலப்பகுதியில் 4.8 வீதம்வரை அதிகரித்தது.

·        வேலையின்மை 2024 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் காணப்பட்ட 4.5 வீதத்திலிருந்து 2025 ஆம் வருடத்தின் முதல் காலாண்டில் 3.8 வீதம் வரை வீழ்ச்சியடைந்தது.

2024 ஆம் வருடத்தில் முதல் 9 மாத காலத்துடன் ஒப்பிடுகையில், 2025 ஆம் வருடத்தில் முதல் 9 மாத காலப்பகுதியில்:

·        எமது பண்டங்கள் ஏற்றுமதி வருமானம் 8.5 பில்லியன் ஐ.அ. டொலரிலிருந்து 9.1 பில்லியன் ஐ.அ. டொலர் வரை அதிகரித்தது.

·        தொழிலாளர் அனுப்பீடுகள் 4.8 பில்லியன் ஐ.அ. டொலரிலிருந்து 5.8 பில்லியன் ஐ.அ. டொலர் வரை அதிகரித்தது

·        சுற்றுலாத்துறை வருமானம் ஈட்டல்கள் 2.3 பில்லியன் ஐ.அ. டொலரிலிருந்து 2.5 பில்லியன் ஐ.அ. டொலர் வரை அதிகரித்தது

·        வருமானங்களும், கொடைகளும் ரூபா 2.9 ரில்லியனிலிருந்து ரூபா 3.8 ரில்லியன் வரை அதிகரித்தது. இது நாங்கள் எதிர்பார்த்த இலக்கையும் தாண்டிச் சென்றுள்ளது.

·        ஆரம்ப மீதி ரூபா 0.8 ரில்லியனிலிருந்து ரூபா 1.5 ரில்லியன் வரை வேகமாக அதிகரித்தது. இதுவும் நாங்கள் எதிர்பார்த்த இலக்கையும் தாண்டிச் சென்றுள்ளது.

2025 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாதமாகும் போது மூலதனச் சந்தையின் செயலாற்றுகை, 2024 ஆம் ஆண்டின் செப்டம்பர் மாத செயலாற்றுகையுடன் ஒப்பிடும்போது:

·        மொத்தப் பங்குச் சந்தை சுட்டி 11,855 அலகிலிருந்து 21,779 அலகு வரை பாரிய முன்னேற்றத்தைக் காட்டியது.

·        S&P SL 20 சுட்டி 3,453 அலகிலிருந்து 6,127 அலகு வரை அதிகரித்தது.

·        சந்தை மூலதனமயமாக்கல் ரூபா 4.4 ரில்லியனிலிருந்து ரூபா 7.8 ரில்லியன் வரை அதிகரித்தது.

·        வெளிநாட்டு கொள்வனவுகள் ரூபா 37 பில்லியனிலிருந்து ரூபா 47 பில்லியன் வரை அதிகரித்தது.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

நாங்கள் நிதிசார் கவனயீனம் காணப்பட்ட யுகத்துக்கு முற்றுப்புள்ளி வைத்து அதை, நுண்ணறிவுடைய சட்டகமொன்றினூடாக மீள்நிறுவியுள்ளோம். இச் சட்டகம் எதிர்கால அதிர்வுகளிலிருந்து எம்மைப் பாதுகாக்கும் என்பதுடன், ஒவ்வொரு பிரசைக்கும், அவர்களது வரி மிறையாகவும் வெளிப்படையுடனும் பொறுப்புடனும் முகாமை செய்யப்படும் என்பதை நாங்கள் அத்தாட்சிப்படுத்துகின்றோம்.

நாங்கள் முறையாகவும் வினைத்திறனுடனும் அரச வருமானத்தை விருத்தி செய்துவருகின்றோம். 2026 ஆம் வருடத்தில் அரச வருமானம் மொத்த தேசிய உற்பத்தியில் 15.3 வீதம் வரை அடையப்பெறும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களம் RAMIS 3.0 உடன் நவீன மயப்படுத்தப்படும். எமது இலக்கு யாதெனில் அரச வருமானத்தில் மொத்த தேசிய உற்பத்தியில் 20 வீதம் வரை நீண்டகால அடிப்படையில் அதிகரித்துக்கொள்வதாகும். முற்போக்குடைய மற்றும் நியாயமான வரி முறையொன்றை உறுதிப்படுத்தியவண்ணம், நேரடி மற்றும் மறைமுக வரிவிகிதத்தை 25:75 விகிதத்திலிருந்து 40:60 விகிதம்வரை படிப்படியாகவும் முறையாகவும் கொண்டுவருவதே எமது நோக்கமாகும்.

நாங்கள் ஆரம்பச் செலவுகளை 13 வீதம் என்ற வரையறைக்குள் பேணிச்சென்று மிகவும் பாதிப்பிற்கு உட்படக்கூடிய ஆட்களுக்காக சமூகப் பாதுகாப்பை பலப்படுத்துவதற்கும், அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்கும் தேவையான அரச முதலீடுகளையும் மொத்த தேசிய உற்பத்தியில் குறைந்த பட்சம் 4 வீதம் என்ற மட்டத்தில் பேணிச் செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

எமது அரசாங்கத்தின் அரச நிதி உபாயவழியாதெனில், ஸ்திரமற்ற தன்மைக்குப் பதிலாக எதிர்வு கூறும் ஆற்றலுடனும், சலுகைக்குப் பதிலாக நியாயத் தன்மையுடனும், குறுகிய கால நன்மைகளுக்குப் பதிலாக நீண்டகால சுபீட்சத்துடனும் மீள்நிறுவுகின்ற பாதையாகும். எல்லோருக்கும் இறைமைமிக்க, சுபீட்சம் நிறைந்த மற்றும் நல்லாட்சி கொண்ட இலங்கை தேசத்தைக் கட்டியெழுப்புவது எமது அடிப்படையாகும்.

நான் இப்போது இவ்வுயரிய பாராளுமன்றத்திற்கு 2026 ஆம் வருடத்திற்கான வரவு செலவுத்திட்ட யோசனைகளை முன் வைக்கின்றேன்.

4. தனியார் துறை மற்றும் முதலீட்டு முதன்மைப் பொருளாதார வளர்ச்சி

4.1 முதலீட்டிற்கு அனுகூலமான சூழலை உருவாக்கல்

கௌரவ சபாநாயகர் அவர்களே,

முதலீடு தொடர்பாக இலங்கையானது தொடர்ந்து பின்பற்றி வந்த முறையற்ற மற்றும் பக்கசார்பான கலாச்சாரமானது தற்போது மாற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வியாபாரத்திற்கு பதிலாக நம்பிக்கை, விருப்பத்திற்கு பதிலாக எதிர்வு கூறக்கூடிய திறமை, சலுகைக்கு பதிலாக பங்குவகிக்கக்கூடிய வகையில் புதியதொரு சூழலை கட்டியெழுப்பி வருகிறோம். இவ்வாறான சூழலிலானது சிறந்த முதலீடுகளை கவர்வதற்கு வழிவகுக்கின்றது. இது எமது நாடு மீண்டும் சுமூக நிலைமைக்கு திருப்புவதற்கு அவசியமான வலுவை வழங்குகின்றது.

Ø உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை மிகவும் சக்தி வாய்ந்த விதிகளுக்கு இணங்க ஊக்குவிப்பு முறைமையை உருவாக்குவதற்கு மூலோபாய அபிவிருத்தி கருத்திட்ட சட்டத்திற்கு மற்றும் கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்திற்கும் தேவையான சீராக்கங்களை முன்மொழிவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இச் சீராக்கங்களினால் நேரடி வெளிநாட்டு முதலீட்டுக்கு அவசியமான செயற்பாடுகளை சீராக்குதல் ஊக்குவிக்கும் முறைமையின் வெளிப்படத் தன்மையை மேம்படுத்துதல் மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் எதிர்பார்க்கும் இணக்கப்பாட்டினை பெற்றுக்கொடுக்கும். இச் சீராக்கல் மூலம் எமது நாட்டிற்கு நேரடி வெளிநாட்டு முதலீடு பாய்ச்சலானது குறிப்பிடும் படியாக அதிகரிக்கும் என நாம் எதிர்பார்க்கின்றோம்.

Ø பொருளாதார வளர்ச்சி, தொழில் வாய்ப்பை உருவாக்குதல் மற்றும் பொருளாதாரத்தில் தாங்கிக்கொள்ளும் சக்தியை அதிகரிப்பதற்கு உதவும் முகமாக இலங்கை பொருளாதார சமூக உட்பட்டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வது மிக முக்கியமானதாகும். அரசுடன் உறுதியான பங்காளர்களாக இணைவதனூடாக தனியார் துறையினர் இவ் உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுப்பதில் முக்கியமானதொரு பங்களிப்பை செய்யக்கூடியதாக உள்ளது. வெளிப்படைத் தன்மையான நீதிச் சட்டகமொன்றின் கீழ் “அரச தனியார் பங்குடைமை (PPP) சட்டம்” தொடர்பான சட்டவாக்கம் செப்தம்பர் மாதத்தில் பொதுமக்கள் கருத்துக்ளைப் பெற்றுக்கொள்வதற்காக பிரசுரிக்கப்பட்டுள்ளதோடு, 2026 ஆரம்பத்தல் இச் சபையின் அனுமதிக்காக முன் வைக்கப்படும்.

Ø முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேலும் உறுதிப்படுத்துவதற்கும், முதலீடுகளை பாதுகாப்பதற்குமாக புதிய “முதலீட்டுப் பாதுகாப்புச் சட்டம்” 2026 ஆண்டு முற்பகுதியில் அங்கீகரிக்கப்படும். 

Ø தற்போது அமுலில் இருக்கும் முதலீட்டு வலையங்களுக்கு அண்டியதாக சேவை வலையங்களாக உதவி வலையங்கள் அபிவிருத்தி செய்யப்படுவதனூடாக பிரதான முதலீட்டு வலையங்களின் செயற்திறனை மேம்படுத்துவதற்கும், பொருளாதார நலன்களை மாகாண மட்டத்தில் விரிவுபடுத்துவதற்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபார பெறுமதி சங்கிலியுடன் ஒன்றிணைப்பதற்குமான சாத்தியம் காணப்படுகின்றது. இதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயிற்சியாளர்களுக்கு புதிய சந்தர்ப்பங்களை உருவாக்குதல், தொழில் வாய்ப்புக்களை மேம்படுத்துதல், கைத்தொழில் மயமாக்களின்பொருளாதார நலன்களை மாகாண மட்டத்தில் விரிவுபடுத்துவற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதன்பொருட்டு ஏற்கனவே ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கப்பட்டதோடு அதற்கு மேலதிகமாக மேலும் ரூபா 1,000 மில்லியன் ஒதுக்குவதற்கும் முன்மொழிகின்றேன்.

Ø தகவல் தொடர்பு தொழில்நுட்பத்துறையிலும், முதலீட்டை அதிகரிப்பதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை மற்றும் முதலீட்டுக்கு சாதகமான சூழலை இதுவரையில் செயற்பாட்டு ரீதியாக உறுதிப்படுத்தப்படாமையினால் இத்துறையின் மீது முதலீட்டாளர்களின் கவர்ச்சியானது சவாலாக காணப்படுகின்றது. கடந்த கால அரசாங்கங்களினால் பாரிய செலவில் ஆரம்பிக்கப்பட்டு பல வருடங்களாக கைவிடப்பட்டுள்ள தொழில்நுட்ப பூங்காக்கள் குருநாகல் மற்றும் காலியின் காணப்படுகின்றன. இதனை நிர்மாணித்த ஒப்பந்தக்காரர்களுக்கு மக்கள் வங்கி மற்றும் தேசிய சேமிப்பு வங்கிகளினால் கடன்கள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன. பல வருடங்களாக வங்கிகளுக்கு திருப்பிச் செலுத்தப்படாத நிலுவையான கடன்களை திருப்பிச் செலுத்துவதற்காக ரூபா 1,500 மில்லியன்கள் இவ் வருடத்தில் திருப்பிச் செலுத்தி இத் திட்டமானது தனியார் துறையின் முதலீட்டுக்காக வாய்ப்பளிக்கப்படும். மேலும், இரண்டு பூங்காக்கள் திகன மற்றும் நுவரெலியா நகரங்களை மையப்படுத்தி இலங்கை முதலீட்டுச் சபையின் கீழ் ஸ்தாபிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

Ø முன்னுரிமை துறைகளில் அல்லது தகைமை பெறும் கருத்திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச முதலீட்டு வரையறையை பூரணப்படுத்தும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு வதிவிட வீசா முறைமையொன்று அறிமுகப்படுத்தப்படும்.

Ø இலங்கை முதலீட்டு சபையின் கீழ் கருத்திட்டங்களுக்கு அனுமதியை பெற்றுக்கொடுக்கும் நடைமுறையானது, இலத்திரனியல் தொழில்நுட்ப முறையின் கீழான பிரத்தியேக கரும பீட (Single Window) பொறிமுறையினூடாக அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இப் பிரத்தியேக கருமபீட பொறிமுறையினூடாக முதலீட்டுச் செயற்பாடுகளானது வினைத்திறனாக, வெளிப்படைத் தன்மையுடன் மற்றும் விரைவாக செயற்படுத்துவதற்கு வழிவகுப்பதோடு முதலீட்டாளர்களுக்கு வியாபார தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அவசியமான நம்பிக்கையை மற்றும் சௌகரிகத்தை பெற்றுக்கொடுக்கும். இதன் பொருட்டு ஏற்கனவே ரூபா 100 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø காணிப் பயன்பாட்டு கொள்கை திட்டமொன்றை தயாரிக்கும் செயற்பாட்டை முறைப்படுத்துதல் மற்றும் முதலீட்டாளர்களுக்கு அவசியான காணிகளை விடுவிப்பதன் வினைத்திறனை மேம்படுத்துவது இன்றியமையாதாகும். இதன் பொருட்டு முதலீட்டுச் சபை போன்ற காணியுடன் தொடர்புபட்ட அனைத்து நிறுவனங்களினதும் வசதிகளை மேம்படுத்துவதற்காக அந் நிறுவனங்களை ஒருங்கிணைத்து காணி தொடர்பான தரவுகளை உள்ளடக்கிய மத்திய இலத்திரனியல் தரவுத் தளத்தை உருவாக்குவதற்கு இவ் வரவு செலவுத் திட்டத்தினூடாக ரூபா 100 மில்லியன் ஒதுக்கத்தினை பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம். அதேபோல், முதலீட்டாளர்களுக்கு அவசியமான காணிகளை விடுவிப்பது சம்பந்தமாக புதிய சட்டவரைவொன்றை அறிமுகப்படுத்துவதற்கும், முதலீட்டின் தன்மைக்கு பொருந்தும் வகையில் காணி மதிப்பீட்டினை தீர்மானிக்கும் பொறிமுறை ஒன்றினை அறிமுகம் செய்வதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது.

Ø எமது முந்திய வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்ட, அரச உடமையான வியாபார முயற்சிகளில் வகைகூறல், வௌிப்படைத் தன்மை மற்றும் நிர்வாகம் மற்றும் இலாபம் ஆகியவற்றை மேம்படுத்தும் நோக்கில் அரச வியாபார முயற்சிகளின் பங்குரிமைகளைக் கொண்ட அரச கம்பனியொன்றை உருவாக்குவதற்கான சட்டவாக்கம் 2026 ஆண்டின் முற்பகுதியில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Ø ஏற்றுமதியை அதிகரிப்பதற்காக ஏற்றுமதி அபிவிருத்திச் சபையினால் அரச மற்றும் தனியார் பங்குபற்றுனர்களின் மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன், தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டமானது தயாரிக்கப்பட்டு வருகின்றது. இத் தேசிய ஏற்றுமதி அபிவிருத்தித் திட்டத்தை அமுல்படுத்துவதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்காக மேலும் ரூபா 250 மில்லியன்களை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் தேசிய ஏற்றுமதி நாமத்தை மேம்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

Ø நாங்கள் பல்வேறு நாடுகள் மற்றும் பிராந்தியங்களுடன் சுதந்திர வியாபார ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதற்கு பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்போம். அதற்காக அமைச்சரவையினால் விசேட திறன்களைக் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதுடன், இக் குழுவினால் தற்போதுள்ள வர்த்த உடன்படிக்கைகள் மீளாய்வு செய்தல் மற்றும் புதிதாக சேர்க்கப்பட வேண்டிய வர்த்தக உடன்படிக்கைகள் தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படும்.

Ø சர்வதேச சந்தைகளில் இலங்கை உற்பத்திகள் மற்றும் சேவைகளை விரிவாக்குவதற்காக ஏற்றுமதியை நோக்காக் கொண்ட தொழில் முயற்சிகள் விசேடமாக சிறிய மற்றும் நடுத்தர வியாபார மற்றும் வளர்ந்து வரும் சேவைத்துறைகளுக்கு வர்த்தக கண்காட்சிகளில் பங்குபற்றுதல், உற்பத்திகளை சான்றுபடுத்துதல், இலத்திரனியல் சந்தைப்படுத்தல் மற்றும் சர்வதேச வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்தல் போன்ற வேலைத்திட்டங்களுக்கு தேவையான நிதியினை ஏற்றுமதி அபிவிருத்திச் சபைக்கு பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 250 மில்லியன் பெற்றுக்கொடுக்கப்படும்.

Ø தேசிய ஒற்றை வர்த்தக கரும பீடம் (Trade National Single Window) / வர்த்தக வசதிகளை மேம்படுத்துதல், சர்வதேச வர்த்தகத்தில் இலங்கையின் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்காக வர்த்தக வசதிகளை மேம்படுத்துவது அத்தியவசியமானாகும். அங்கு தேசிய ஒற்றை வர்த்தக கரும பீடம் உட்பட ஏனைய வசதிகளை அபிவிருத்தி செய்தல், சட்ட விதிகள் இற்றைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், நடைமுறைகளை தரப்படுத்தல், கொடுக்கல் வாங்கல் நடவடிக்கை கிரயத்தை குறைத்தல் மற்றும் தொழில் முயற்சியாளர்களுக்கு உலகளாவிய வர்த்தக சந்தைகளுடன் வினைத்திறனான முறையில் தொடர்புகளை மேற்கொள்வதற்கு அவசியமான திறன்களை பெற்றுக்கொடுப்பது முன்னுரிமையான தேவைப்பாடாகும். அதற்காக தேசிய ஒற்றை வர்த்தக கரும பீட வசதியினை மேம்படுத்துவதற்காக ரூபா 2,500 மில்லியன்களை பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிகின்றேன்.

4.2 இலங்கையின் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை    வலுப்படுத்தவதற்கான ஒன்றிணைந்த வேலைத் திட்டம்

Ø சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சி அபிவிருத்தி தொடர்பில் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கிடையில் வினைத்திறனான தொடர்பினை மேம்படுத்துவதற்காக கைத்தொழில் அபிவிருத்திச் சபை (IDB), தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகாரசபை (NEDA), சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சி அபிவிருத்திப் பிரிவு (SMED) ஆகியவற்றின் செயற்பாடுகளை ஒன்றினணத்து கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் (IDB) விடயப் பரப்பின் கீழ் கொண்டுவருவதற்கு முன்மொழிகின்றேன். கைத்தொழில் வலயங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்து உரிய முறையில் முகாமை செய்வதற்காக 2026 இல் ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 4,000 மில்லியனிற்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சியாளர்கள் மொத்த தேசிய உற்பத்தியில் 52 சதவீதத்திற்கு மேல் பங்களிப்பு செய்கின்ற அதே வேலை மொத்தத் தொழிற்படையில் அரைவாசிக்கு கிட்டிய அளவில் பங்களிப்பு செய்கின்றது. அத் தொழில் முயற்சியாளர்களுக்கான நிதி கிடைப்பனவை மேம்படுத்தும் நோக்கில் உள்ளுர் வங்கிகளினூடாக முதலீடு மற்றும் தொழிற்பாட்டு மூலதன தேவைகளை பூர்த்தி செய்வதற்காக சலுகை வட்டி வீதத்தில் கடன்களை பெற்றுக்கொடுப்பதற்காக அரச ஆதரவுடனான பல கடன் திட்டங்கள் ஏற்கனவே அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Ø சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளுக்கு கடன்களை பெற்றுக்கொடுக்கும் போது உறுவாகின்ற நிச்சயமற்ற தன்மையை குறைப்பதற்காக உருவாக்கப்பட்ட தேசிய கடன் காப்பீட்டு நிறுவனத்தினூடாக பிணையில்லாமல் தொழில் முயற்சியாளர்களுக்கு கடன்களை பெற்றுக்கொடுப்பதாக வழங்கப்பட்ட வாக்குறுதியை எங்களால் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 2025 ஆண்டு இதுவரையில் ரூபா 4,027 மில்லியனிற்கு மேற்பட்ட பிணையில்லாக் கடன்கள் இதுவரையில் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. 2026 ஆண்டில் ரூபா 7,000 மில்லியன் அளவிலான கடன்களுக்கு காப்பீடு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிறுவனத்ததை உருவாக்குவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியினால் கடனுதவியாக ஐ.அ. டொலர் 50 மில்லியன் பெற்றுத்தந்துள்ளது.

Ø வெற்றிகரமாக இயங்கிக்கொண்டிருக்கும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில்முயற்சிகளின் தொழிற்படு மூலதனம் மற்றும் முதலீட்டுத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ரூபா 25 மில்லியன் வரையிலும் பொருளாதார சிக்கல்களுக்கு முகங்கொடுக்கின்ற வியாபாரங்களுக்கு ரூபா 15 மில்லியன் வரையிலும் சலுகை வட்டியில் கடன்களை பெற்றுக்கொடுக்க ரூபா 25,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகளுக்கு ரூபா 50 மில்லியன் வழங்குவதற்காக ரூபா 5,900 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. 

Ø விவசாய பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி செய்தல்

o   புதிய விரிவான கிராமிய கடன் திட்டத்தின் கீழ் 5 சதவீத வட்டித் தள்ளுபடியுடன் ரூபா 3 மில்லியன் வரையிலான விவசாய பயிர்ச் செய்கைக் கடன் பெற்றுக்கொடுப்பதற்கு ரூபா 1,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

o   தொழில் முயற்சியாளர்களுக்காக சலுகை வட்டியில் ரூபா 50 மில்லியன் வரையில் கடன் பெற்றுக்கொடுப்பதற்கு சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் அபிவிருத்தி கடன் திட்டமொன்றை உருவாக்குவதற்கு ரூபா 7,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

o   விவசாய பெறுமதிச் சங்கிலி அபிவிருத்தி செய்வதற்கு சலுவை வட்டி வேலைத் திட்டத்தின் கீழ் ரூபா 50 மில்லியன் வரையில் கடன் வழங்குவதற்காக ரூபா 6,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அடமானக் கடன் திட்டத்தின் கீழ் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலை உரிமையாளர்களுக்கு ரூபா 50 மில்லியன் வரையில் சலுவை வட்டி வீதத்தில் கடன் பெற்றுக்கொள்ளலாம். இதற்காக ரூபா 15,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

o   விவசாயத்துறை கருத்திட்டங்களுக்கு நிதி அடைவினை அதிகரிப்பதற்காக நிலைபேறான விவசாயிகள் கடன் நிதியினை உருவாக்குவதற்கு ரூபா 800 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

Ø இதற்கு மேலதிகமாக இளைஞர் தொழில் முயற்சிக் கடன் திட்டம், நுண்ணிதிக் கடன், மகளிர் தொழில் முயற்சியாளர்களை வலுவூட்டலுக்கான கடன் உட்பட அனைத்து சலுகைக் கடன் முன்மொழிவுத் திட்டங்களுக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மீள் நிதியளிப்புக் கடன், நன்கொடைகள், காப்பீட்டுக் கடன், பிணையற்ற கடன் மற்றும் சலுகை வட்டிக் கடன் போன்ற திட்டங்களை அமுல்படுத்துவதற்காக 2026 ஆண்டில் ரூபா 80,000 மில்லியன் கடன் வழங்குவதற்கு அவசியமான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

Ø முதலீட்டை ஊக்குவித்தல் மற்றும் துறைவாரியான அபிவிருத்தியை உறுதிப்படுத்துவதற்கு தற்போது ஐ.அ. டொலர் 3 மில்லியனிற்கு மேற்பட்ட முதலீடுகளுக்கு வழங்கப்படுகின்ற மூலதனக் கொடுப்பனவு, சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரத்துறை வரை விரிவுபடுத்துவதற்கும் அம் மூலதனக் கொடுப்பனவைப் பெற்றுக்கொள்வதற்கான குறைந்தபட்ச முதலீட்டை ஐ.அ. டொலர் 250,000 தொகை வரை குறைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகின்றது.

5. சுற்றுலா தொழிற்றுறையினை மேம்படுத்துதல்

சுற்றுலாத்துறையின் மூலமான வருமானத்தினை 2030 ஆண்டளவில் ஐ.அ. டொலர் 8 பில்லியன்களாகவும், சுற்றுலாப் பயணிகள் வருகைகளை 4 மில்லியன்கள் வரையிலும் அதிகரிப்பதற்கான இலக்கோடு சுற்றுலாத் துறையில் துரிதமான வளர்ச்சியை எதிர்பார்க்கின்றோம். சுற்றுலாத்துறையின் வளர்ச்சிக்குள்ள பிரதான சவாலானது பல்வேறுபட்ட பங்குபற்றுனர்களிடத்தில் காணப்படும் ஒருங்கிணைப்பு சிக்கலாகும். இச் சிக்கலினை வெற்றிகொள்வதற்கு உற்பத்தித்திறன் மற்றும் வினைத்திறனை அபிவிருத்தி செய்வதற்கு சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நிறுவனங்களை வலுவூட்டுவதற்கு மேலதிகமாக சுற்றுலாக் கைத்தொழிலின் பல்வேறுபட்ட இலக்குகளை அடைந்துகொள்வதற்கு அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல், மனிதவள அபிவிருத்தி மற்றும் ஒன்றிணைந்த சந்தைப்படுத்தல், சுற்றுலா மேம்படுத்தல் நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்வதற்கு தொடர்ச்சியான மூதலீடுகளை மேற்கொள்வது அவசியமாகும்.

Ø இயற்கையை அடிப்படையாகக் கொண்ட மற்றும் மரபுரிமைகளை வெளிப்படுத்தக்கூடிய சுற்றுலாத்தளங்களை அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்துவற்கு முன்மொழிகின்றோம். இந் நடவடிக்கைகளுக்காக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின் நிதியிலிருந்து ரூபா 3,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் கீழ் மேல் மாகாணத்தில் கடல் மற்றும் கரையுடன் தொடர்புபட்ட ஹெமில்டன் கால்வாய், நீர்கொழும்புக் கலப்பு உட்பட நீர் மூலங்களுடன் தொடர்புபட்ட பிரதேசங்களில் மேற்கூறப்பட்ட அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும்.

Ø இதற்கு மேலதிகமாக, ஊவா மாகாணத்தின் பெரும்பாலான உள்ளூர் மற்றும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கிடையில் தற்போதும் கவர்ச்சிக்குட்பட்டுள்ள ஹபுதலை, பெரகல மற்றும் இதல்கஸ்ஹின்ன போன்ற பிரதேசங்களில் காணப்படும் கவர்ச்சியான சுற்றுலாத் தளங்களின் பொது உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்கும் மற்றும் தேவையான பிரபல்யத்தை பெற்றுக்கொடுத்து ஹபுத்தலை பிரதேசத்தை இலங்கையின் இன்னுமொரு பிரதான சுற்றுலாத் தளமாக மாற்றுவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø அரசாங்கத்திற்கு சொந்தமான குறைபயன்பாட்டுடன் கூடிய 900 மேற்பட்ட விடுமுறை விடுதி மற்றும் சுற்றுலா விடுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இவற்றில் பெறும்பாலாவை உயர் சுற்றுலா கவர்ச்சிகரமான பிரதேசங்களில் அமையப்பெற்றுள்ளன. இந்த விடுதிகளை வருமானம் உழைக்கும் அலகுகளாக மாற்றி சுற்றுலாத்துறையின் வளரச்சிக்கு பங்களிப்புச் செய்யக்கூடிய வகையில் தனியார் துறையின் பங்களிப்புடன் அபிவிருத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Ø சுற்றுலாத்துறைக்கு அவசியமான மனிதவளத்தை அபிவிருத்தி செய்தல் – 2030 ஆண்டளவில் சுற்றுலா மற்றும் உபசரிப்புத்துறையில் பல்வேறு பிரிவுகளின் அடிப்படையில் திறன்களைக் கொண்ட 800,000 அதிகமான ஆட்களுக்கான தேவை உருவாகும் என எதிர்வுகூறப்படுகின்றது. காணப்படும் பௌதீக மற்றும் கற்றல் வளங்களானது வரையறுக்கப்பட்டிருப்பதனால் இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினால் (SLITHM) மாத்திரம் இக் கேள்வியினை பூர்த்தி செய்ய முடியாதுள்ளது. இத் தேசிய மட்டத்திலான தொழில்படையின் இடைவெளியை நிரப்புவதற்கு இலங்கை சுற்றுலா மற்றும் ஹோட்டல் முகாமைத்துவ நிறுவனத்தினூடாக நாடு பூராகவும், மூன்றாம் நிலைக்கல்வி மற்றும் தொழில்கல்வி ஆணைக்குழு (TVEC) இனால் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரச மற்றும் தனியார்துறையின் பயிற்சி நிறுவனங்களினூடாக குறுகிய கால தொழிற்பயற்சிநெறிகளான உபசரிப்பு பல்துறை வேலைத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை சுற்றுத்துறை மேம்படுத்தல் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறைபயன்பாட்டு சுற்றுலா அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபா 500 மில்லியனை பயன்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன்.

Ø பேரவாவியை அபிவிருத்தி செய்து அதை கொழும்பு நகர மத்தியில் அமையப்பெற்றுள்ள கவர்ச்சிகரமான ஒரு இடமாக மாற்றுவதற்கும் சுற்றுலா நடவடிக்கைகள் உட்பட சமூக, பொருளாதார மற்றும் சூழல் ஆகிய அனைத்து விடயங்களிலும் இவ்வாவியின் பயன்பாட்டை மேம்படுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்காக இலங்கை சுற்றுத்துறை மேம்படுத்தல் பணியகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள குறைபயன்பாட்டு சுற்றுலா அபிவிருத்தி நிதியிலிருந்து ரூபா 2,500 மில்லியனை பயன்படுத்துவதற்கு முன்மொழிகின்றேன்.

Ø உள்ளூர் விமான போக்குவரத்தை பிரபல்யப்படுத்துவது சுற்றுலாக் கைத்தொழில் வளர்ச்சிக்கு இன்றியமையாததாகும். இதற்காக தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள ஹிங்குரக்கொட விமானத் தளத்தில் அபிவிருத்தி நடவடிக்கைகள் 2026 ஆண்டில் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. சீகிரியா, திருகோணமலை ஆகிய உள்ளூர் விமானத் தளங்களை அபிவிருத்தி செய்தல் மற்றும் யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தில் செயற்பாடு நடவடிக்கைகளை விரிவாக்குதல் ஆகியவற்றுக்கு ரூபா 1,000 மில்லியன் மேலதிக ஒதுக்கத்தை பெற்றுக்கொடுப்பதோடு இவ் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு சிவில் விமான சேவை அதிகாரசபையின் பங்களிப்பும் பெற்றுக்கொள்ளப்படும்.

Ø அதிகரித்துவரும்பயணிகள் மற்றும் பொருட்களை விமான சேவைகள் மூலம் நகர்த்துவதற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்கு வசதியளிப்பதனூடாக இலங்கயை சர்வதேச இடைமாறல் மையமாக (International Transit Hub) உருவாகுவதற்கான ஒரு தனித்துவமான சந்தர்ப்பம் காணப்படுகின்றது. எங்களுடைய மூலோபாயமான அமைவிடமானது கிழக்கு மற்றும் மேற்கிற்கு இணையற்ற அடைவை வழங்குகின்றது.

இத் தூரநோக்கை அடைந்துகொள்வதற்காக நாங்கள் நவீன தொழில்நுட்பங்களைக் கொண்ட விமான நிலைய வசதிகள் மற்றும் போதுமான விமானங்களைக் கொண்ட ஒரு விமானத் தொகுதியை உள்ளடக்கியதாக ஒரு விமான சேவையை அபிவிருத்தி செய்வது இன்றியமையாத்தாகும். இந்த நோக்கத்திற்காக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த பண்டாரநாயக சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப் பணிகளில் அடுத்த வருட முதற் காலாண்டில் மீள ஆரம்பிப்போம். ஶ்ரீ லங்கன் விமான சேவையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளை வெற்றிகரமாக நிறைவு செய்வதற்கான வேலைகள் இடம்பெற்று வருகின்றன.

6. நவீனமயம் மற்றும் டிஜிற்றல் மயமாக்கல்

டிஜிற்றல் பொருளாதார அபிவிருத்தி என்பது அனைவருக்கும் நன்மை பயக்கக்கூடிய பொருளாதார அபிவிருத்தி மற்றும் உலகளாவிய போட்டித் தன்மைக்கு தீர்மானம் மிக்க பாதையாகும். அபிவிருத்திப் பாதையில் இலங்கையானது பல சந்தர்ப்பங்களை தவரவிட்டுள்ளது. எவ்வாறாயினும் டிஜிற்றல் பொருளாதார நலன்களை அடைந்துகொள்வது தவரவிடக்கூடாது. 2026 இல் ரூபா 25,500 மில்லியன்களுக்கு மேலாக அரச முதலீட்டுடன் இலங்கையை டிஜிற்றல் மயமாக்களில் குறிப்பிடும் படியான பங்கொன்றை அடைந்துகொள்வதற்கு சாத்தியம் காணப்படுகின்றது. தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை பெற்றுக்கொடுத்தல், முதலீட்டு செயற்பாடுகளை ஒருங்கமைத்தல் மற்றும் புத்தாக்கங்களுக்கு சார்பான சூழலை உருவாக்குதல் போன்ற காரணிகளின் மூலம் நிலைபேறான டிஜிற்றல் வளர்ச்சிக்கான வழிகாட்டலை பெற்றுக்கொடுக்கும்.

Ø அரச நிறுவனங்களுக்குரிய கட்டணங்களை செலுத்துவதற்கு GovPay முறைமையினை பிரபல்யப்படுத்தல், தேசிய இணையப் பாதுகாப்பு மத்திய நிலையத்தை உருவாக்குதல், ஜனாதிபதி நிதியம், தூதரகங்களினூடாக பிரசைகளுக்கு ஆவணங்கள் பெற்றுக்கொடுக்கப்படும் சேவையினை வினைத்திறனாக்குதல், டிஜிற்றல் மயமாக்கலை துரிதப்படுத்துவதற்காக GovTech நிறுவனத்தை உருவாக்குதல், எதிர் காலத்தில் உருவாக்கப்படவுள்ள டிஜிற்றல் பொருளாதார அதிகாரசபை 5G இற்கான அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுத்தல் போன்ற காரணிகள் டிஜிற்றல் மயமாக்களுக்கான சிறந்த அறிமுகத்தை பெற்றுக்கொடுத்துள்ளது. சகல பிரஜைகளினதும் பங்குபற்றலை பிரதிப்படுத்தும் முகமாக நாடு பூராகவும் அகன்ற அலைவரிசையின் கிடைப்பனவை விரிவாக்கி மற்றும் நேரடி வெளிநாட்டு முதலீட்டை கவர்ந்து புதிய தொழில்முயற்சியாளர்களுக்கு உந்துதலை பெற்றுக்கொடுக்கக்கூடிய சூழலை உருவாக்கி வருகின்றோம். செயற்கை நுண்ணறிவு, க்லொவுட் (cloud) கணினி மற்றும் தரவுத்தளம் உள்ளடங்களாக அடுத்த பரம்பரைக்கு டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளுக்காக ரூபா 3,000 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø தரவு பாதுகாப்பு அதிகாரசபையை அமுல்படுத்துவதற்கு ஏற்ற வகையில் தனியாள் தரவு பாதுகாப்பு சட்டத்தை திருத்தங்களுடன் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மேலும், டிஜிற்றல் பொருளாதார சட்டமொன்றின் மூலம் டிஜிற்றல் பொருளாதார அதிகாரசபை மற்றும் டிஜிற்றல் பொருளாதாரம் தொடர்பான அமைச்சரவை உபகுழு, டிஜிற்றல் பொருளாதார மன்றம் உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø இலங்கை பிரத்தியேக டிஜிற்றல் அடையாளம் (SLUDI), தேசிய தரவு பரிமாற்றம், இலங்கை அரச க்லவுட் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் அரச சேவைகளை பெற்றுக்கொடுப்பதற்கு ஒற்றைக்கூரை (Single Roof Digital Interface) டிஜிற்றல் இடைமுகமொன்றிற்கான மென்பொருள்களை உருவாக்குதல் போன்ற டிஜிற்றல் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு அவசியமான பல நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2026 வருடத்தில் ஆரம்பத்தில் இலங்கை பிரத்தியேக டிஜிற்றல் அடையாளம் (SLUDI) தொடர்பாக மக்களை தெளிவூட்டும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்படும். 2026 மூன்றாவது காலாண்டில் முதலாவது டிஜிற்றல் அடையாள அட்டையை வெளியிடுவதற்காக நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø பௌதீக பண நோட்டுக்களின் பாவனைக்கான நாட்டத்தை குறைத்து டிஜிற்றல் முறைகளினூடாக கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ளும் சமூகமொன்றாக மாற்றுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மாற்றத்திற்கான நோக்கமாவது, கொடுக்கல் வாங்கல்களை இலகுபடுத்துதல், அதற்கான கிரயத்தை குறைத்தல், தவறான பணப் பயன்பாட்டை குறைத்தல் மற்றும் வினைத்திறனை அதிகரித்தல் என்பனவாகும். 2025 முதலாவது காலாண்டில் ரூபா 2,000 பில்லியனிற்கு மேற்பட்ட அரச சேவைகளுக்கான கொடுப்பனவுகளை Lankapay தளத்தினூடாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. பண நோட்டுக்களின் பாவனையற்ற சமூகமொன்றை பிரபல்யப்படுத்துவற்கு அனைத்து அரச கொடுக்கல் வாங்கல்களுக்கும் நிகழ்நிலை கொடுப்பனவு முறைகளினூடாக செலுத்துவதற்கான வசதிகள் செய்து கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம்.

ஆரம்பமாக இச் செயற்பாட்டை ஊக்குவிக்கும் நோக்கில் அரச நிறுவனங்களுக்கான கட்டணங்களை நிகழ்நிலை முறைமையினூடாக செலுத்தும் போது அறவிடப்படும் சேவைக் கட்டணத்தை தள்ளுபடி செய்வதற்கு முன்மொழிகின்றோம். இக் கொடுக்கல் வாங்கல்களுக்கான செலவினை ஈடுசெய்து கொள்வதற்கு மற்றும் கொடுப்பனவுத் தளத்தினை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களை தெளிவு படுத்துவதற்குமாக ரூபா 1,000 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம். மேலும், தேவையான வசதிகளை செய்துகொடுத்தல், பிரச்சார நடவடிக்கைகளுக்காக ரூபா 500 மில்லியன்களை ஒதுக்குவதற்கும் முன்மொழிகின்றோம்.

Ø இதனடிப்படையில், 2026 ஜனவரி 01 முதல் அனைத்து அரச நிறுவனங்களுக்கும் இலத்திரனியல் கொடுப்பனவுகளுக்காக அறவிடப்படும் சேவைக் கட்டணங்களை நீக்குவதற்கான அனுமதி பெற்றுக்கொடுக்கப்படும். மேலும், QR குறியீடு முறைமையினூடான கொடுப்பனவுகளை பிரசித்திப்படுத்துவதற்காக ரூபா 5,000 இற்கு குறைவான பெறுமதியுடைய கொடுப்பனவுகளை QR குறியீட்டினூடாக எவ்வித அறவீடுகளும் இன்றி மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை டிஜிற்றல் பொருளாதார அமைச்சுக்கான செலவுத் தலைப்பினூடாக பெற்றுக்கொடுப்பற்கு முன்மொழிகின்றோம்.

Ø தரவுத் தளங்கள் அமைப்பதற்கான முதலீடுகளை கவர்ந்துகொள்வதற்காக எங்களால் மேற்கொள்ளப்பட வேண்டிய பல முன்னேற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. அவற்றில் தரவுப் பாதுகாப்பு இரகசியத் தன்மை, அந்தரங்கம் மற்றும் டிஜிற்றல் கட்டுப்பாட்டு சட்ட முறைமையை வலுவூட்டி முதலீட்டு நம்பிக்கையை உறுதிப்படுத்துவது அவசியமாகும். அதனை நாம் இப்போதும் செய்து வருகின்றோம். இம் முதலீடுகளை ஊக்குவிப்பதற்காக நிதிச் சலுகைகள், பசுமை மின்சக்தி பாவனைக்கான சலுகை முதற்கட்டத்தில் குறைந்த கட்டத்திலான மின்சாரம், தேவையான காணியினை சலுவை அடிப்படையில் பெற்றுக்கொடுத்தலினூடாக வெளி நாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுக்கு கவர்ச்சியான சூழலை உருவாக்க வேண்டியிருக்கின்றது. இதன் மூலம் இலங்கைக்கான தரவுத்தள மையத்தில் உருவாக்குவதற்காக பிராந்திய மத்தியத்தில் மத்திய நிலையமாக விரிவாக்குவதற்கு உயர்ந்த சாத்தியக்கூறு காணப்படுகின்றது. இதற்காக ஆரம்பமாக 2026 ஆண்டில் ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø பிராந்தியத்தில் இலங்கையானது டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதி செயற்கை நுண்ணறிவுடன் கூடிய புத்தாக்கங்களில் முன்னோடியாக திகழ்வதற்கு அரச தனியார் பங்குடைமை மற்றும் மூலோபாய டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகள் திட்டங்களுக்காக நடுத்தர கால நிதிகளானது அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுக்கப்படும். புத்தாக்கங்களை ஊக்குவித்தல், தேர்ந்தெடுக்கப்பட்ட செயற்கை நுண்ணறிவு கருத்திட்டங்களுக்கு நிதியீட்டம் செய்தல், வெளிநாட்டு பயிற்சி புலமைப் பரிசில்கள் மற்றும் தேசிய மொழி தரவுத்தொகுப்பினை அபிவிருத்தி செய்தல், பல்கலைக்கழக மற்றும் பாடசாலைத்துறைகளில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு செயற்கை நுண்ணறிவு மற்றும் க்லவுட் வசதிகளை பெற்றுக்கொடுப்பதற்காக ரூபா 750 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம். டிஜிற்றல் உட்கட்டமைப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவினால் உந்தப்பட்டு புத்தாக்கத்தில் இலங்கையானது, பிராந்திய தலைமையமாக உருவாகுவதனை இந் நடவடிக்கைகள் துரிதப்படுத்தும்.

Ø அனைத்து பிரசைகளுக்கும் டிஜிற்றல் தொழில்நுட்பத்தின் அணுகளை விரிவுபடுத்துதல், கல்வியுடன் தொடர்புபட்ட அணுகளுக்காக பிரோட் பேண்ட் வவுசர்களை அஸ்வெசும பயனாளிகள் மற்றும் ஏனைய குறைந்த வருமானக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு எதிர்பார்க்கின்றேன். இதன் மூலம் நேரடியாக நிகழ்நிலைக் கல்வி மற்றும் டிஜிற்றல் பொருளாதாரத்துடன் பங்குபற்றச் செய்வதே குறிக்கோளாகும். இதன் மூலம், டிஜிற்றல் எதிர் காலம் ஒன்றை உருவாக்குவதன் மூலம் நலன்களை பெற்றுக்கொள்ளும் சமூகமொன்றை உறுதிப்படுத்த முடியும். இது பாதுகாப்பான இணைய கொள்கைகளுக்கு உறுதியான கண்காணிப்புடன் அமுல்படுத்தப்படும்.

Ø டிஜிற்றல் தொழில்நுட்ப விரிவாக்கலை துரிதப்படுத்துவதற்காக தொலை தொடர்பு கோபுரங்கள் போன்ற டிஜிற்றல் உட்கட்டமைப்பு வசதிகளை கட்டியெழுப்புவதற்கு மிகவும் இலகுவான மற்றும் துரிதமான தேவையான அனுமதிகளை பெற்றுக்கொடுப்பதற்கான நடவடிக்கைகள் உறுதி செய்யப்படும். இந்த டிஜிற்றல் தொழில்நுட்ப விரிவாக்கல் வேலைத் திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய கோபுரங்களுக்குரிய வரி 05 வருட காலங்களுக்கு நிறுத்தி வைப்பதற்கு முடிமொழிகின்றேன்.

Ø முதலீட்டுகளை கவர்ந்துகொள்வதற்காக தொழில் முயற்சிகளை ஆரம்பிப்பதற்கான சூழலின் வளர்ச்சியை (Star-ups ecosystem) துரிதப்படுத்துவதற்காக ரூபா 1,500 மில்லியன் (ஐ.அ. டொலர் 5 மில்லியன்) கொண்ட ஆரம்ப முதலீட்டுக்கு அரச ஆதரவுடன் கூடிய நிதியமொன்றினை 2026 ஆண்டில் ஆரம்பிப்பதற்கு டிஜிற்றல் பொருளாதார அமைச்சின் செலவினத் தலைப்பினூடாக ஏற்பாடுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளன.

Ø ஏற்றமதி மற்றும் தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதை நோக்காகக் கொண்டு முதலீட்டுச் சபையினூடாக “மெய்நிகர் விசேட பொருளாதார வளையமொன்றை (Virtual Special Economic Zones) உருவாக்குவதற்கு முன்மொழிகின்றேன்.

7. ஆராய்ச்சி, அபிவிருத்தி துறையை வலுவூட்டல் மற்றும் பொருளாதார சமூக முன்னேற்றம்

அ​ரசு ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி கொள்கை வரைபு தற்சமயம் தயாரிக்கப்பட்டு முடிக்கப்பட்டுள்ளதுடன் அரசின் ஆராய்ச்சி அபிவிருத்தி தொழிற்பாட்டுக்கு ஏற்புடையதாக, முன்னுரிமைகளை இடம்கண்டு அவற்றுக்கு உரியவாறு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக் கொடுத்து, ஆராய்ச்சிகளை வணிகமயப்படுத்தல்வரை கொண்டு செல்லும் தேசிய வேலைத்திட்டம் புதிய கொள்கையின்கீழ் நடைமுறைப்படுத்தப்படும். இந்த ஒட்டுமொத்த தொழிற்பாடும் மேற்பார்வை செய்யப்படுகின்ற, மத்திய நிருவாக நிறுவனமொன்றாக தேசிய ஆராய்ச்சி, அபிவிருத்தி மற்றும் வணிக நிறுவனமும், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொடர்பான தேசிய பேரவையும் நிறுவப்படும் என்பதுடன் இதற்கான சட்டமூலம் 2026 ஆண்டில் சபைக்கு சமர்ப்பிக்கப்படவுள்ளது.

ஆராய்ச்சிகளை வர்த்தக மயமாக்கல் வரை கொண்டு செல்வதற்கான தேசிய வேலைத்திட்டத்திற்கு ரூபா 1,200 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

8. கிளீன் சிறீலங்கா தொடர்ச்சியான நிகழ்ச்சித் திட்டம்

எமது முந்தைய வரவுசெலவுத் திட்டத்தில், ஒரு வளமான தேசத்தை – ஒரு அழகான வாழ்க்கையை கட்டியெழுப்புவதை இலக்காக கொண்ட கிளீன் சிறீலங்கா, ஒரு சுத்தமான நாடாக எமது நாடு மாறும் என்று முன்மொழியப்பட்டது. கிளீன் சிறீலங்கா கருத்திட்டத்தின் நோக்கங்களானவை, நெறிமுறைக் கொள்கைகளை மேம்படுத்துதல் மற்றும் தூய்மையான பௌதீக சூழல் மற்றும் நாடு முழுவதுமான தார்மீக உறுதிப்பாட்டிற்கு பதிலளித்தல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது. கிளீன் சிறீலங்கா திட்டம் ஒரு புத்தகத்திற்கோ அல்லது ஒரு திட்டத்திற்கோ மட்டுப்படுத்தப்படவில்லை என்பதையும், இந்தத் திட்டம் ஒரு நாளிலோ, ஒரு மாதத்திலோ அல்லது சில ஆண்டுகளில் பூர்த்தி செய்யப்படக்கூடிய ஒரு வீதி வரைபடமோ அல்ல என்பதையும் நாம் மீண்டும் வலியுறுத்துகிறோம். இது ஒரு பாரிய அளவிலான, இடைவிடாத திட்டமாகும், இது தொடர்ந்து முன்னாக்கி செல்லும் என்பதுடன்  இது தொடர்ந்து முன்னோக்கி செல்லல் வேண்டும் என்பதுடன் மேலும் புதிய விடயங்கள் சேர்க்கப்படல் வேண்டும், இன்று நாம் அதை ஒரு யதார்த்தமாக்குகிறோம். கிளீன் சிறீலங்கா திட்டமானது சுற்றுச்சூழலின் அடிப்படையில் மட்டுமன்றி, அனைத்து அம்சங்களிலும் தூய்மையான ஒரு சமூகத்தை கட்டியெழுப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. போதைப்பொருள் அற்ற தூய்மையான நாடு, பாதாள உலகம் அற்ற தூய்மையான நாடு, இலஞ்சம் மற்றும் ஊழல் அற்ற தூய்மையான நாடு, அதிகார வெறி கொண்ட ஊழல் அரசியல்வாதிகள் அற்ற தூய்மையான நாடு, வினைத் திறனற்ற அரச சேவைக்கு பதிலாக வினைத் திறனான அரச சேவையைக் கொண்ட தூய்மையான நாடு, சட்டம் மற்றும் ஒழுங்கை மதிக்கும் தூய்மையான நாடு போன்ற ஒவ்வொரு வகையிலும் தூய்மையான நாட்டை உருவாக்கும் உன்னதமான எதிர்பார்ப்பை யதார்த்தமாக்குவதே இந்தத் தொடர்ச்சியான திட்டத்தின் நோக்கமாகும்.

கிளீன் சிறீலங்கா திட்டத்தை நாம், இந்த நாட்டை ஒரு தரப்படுத்தப்பட்ட மற்றும் அற்புதமான நாடாக மாற்றுவதை இலக்காகக் கொண்டு, கட்சி பேதங்கள் இன்றி அனைவரும் ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு திட்டமாக அறிமுகப்படுத்தினோம். அந்தத் திட்டத்திற்காக ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9.  ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை

போதைப்பொருள் அச்சுறுத்தல் நமது நாடு எதிர்கொள்ளும் மிகவும் கடுமையாதொரு தொற்று என்பதையும், உண்மையான நிலைமையானது நாம் நினைப்பதை விட மிகவும் பயங்கரமானது என்பதையும் நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இந்த போதைப்பொருள் பரவலானது யாதுமறியாத இளம் குழந்தைகளின் பாடசாலைப் பைகளைக் கூட ஆக்கிரமித்து வருகிறது. இது அநேகமாக ஒவ்வொரு வீட்டின் கதவுகளையும் தட்டுகிறது. இளம் தலைமுறையினர் கடுமையான ஒரு துயரத்திற்கு தள்ளப்படுகிறார்கள், மேலும் முழு நாடும் நேரடியாகவும் மறைமுகமாகவும் இந்தப் பேரழிவிற்கு இரையாகவும் பாதிப்பாகவும் மாறி வருகிறது. இந்த நிலைமை சமூகத்தின் அனைத்து மட்டங்களுக்கும் ஒரு ஆபத்தான செய்தியை தருகின்றது. சுத்தமான மற்றும் அழகான நாட்டை உருவாக்க இந்த பயங்கரமான பேரழிவை தீர்க்கமாக முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்று முன்மொழியப்பட்டுள்ளது.போதைப்பொருள், திட்டமிடப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் அரச சேவையில் ஊழல் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட சிலர், அரசியல் ஆர்வத்தால் பிணைக்கப்பட்டுள்ள சங்கிலிகளை ஒவ்வொன்றாக உடைத்து வருகின்றனர். இந்த கடினமான மற்றும் அத்தியாவசியமான பணியானது ஒரு கட்சி அல்லது ஒரு குழுவால் மட்டுமே செய்யப்படக்கூடிய ஒரு தனிமையான போர் அல்ல. இந்த உன்னதமான தேசிய பணிக்கு முழு நாட்டையும் அழைக்கிறோம். அதன்படி, இன்று, முழு சமூக கட்டமைப்பிலிருந்தும் நச்சு போதைப்பொருட்களை அகற்றுவதற்கான ‘ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை ‘ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது எந்த சவாலின் கீழும் நிறுத்தப்படாது., பின்வாங்காது, இறுதிவரை போராடும் ஒரு திட்டமாகும்.

Ø  “ஒரு தேசம் ஒன்றுபட்ட தேசிய நடவடிக்கை” என்ற தூரநோக்கை முன்னெடுத்துச் செல்வதற்கு அடிப்படையான அனைத்து துறைகளையும் உள்ளடக்கிய போதைப்பொருள் கட்டுப்பாட்டு நிகழ்சித்திட்டங்களை செயற்படுத்துவதற்காக ரூபா 1,500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

Ø  பொலன்னறுவை, வெலிகந்த-சேனபுர உள்ளிட்ட 10 இடங்களில், நச்சு போதைப் பொருட்களுக்கு அடிமையானவர்களை புனர்வாழ்வு செய்வதற்காக, புனர்வாழ்வு பணியகத்தின் கீழ் 10 தன்னார்வ புனர்வாழ்வு நிலையங்களை நிறுவுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

Ø  தற்போதுள்ள சிறைச்சாலைகளின் கொள்திறன் 11,000 கைதிகளுக்கு மட்டுமே போதுமானதாக இருந்தாலும், அச்சிறைச்சாலைகளில் தற்போது 35,000 க்கும் மேற்பட்ட கைதிகள் உள்ளனர். தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்கு இணங்க, வினைத்திறனான சிறைச்சாலைச் செயற்பாடுகளுக்கான அவசரத் தேவையை பூர்த்தி செய்வதற்காக, அதாவது அடையாளம் காணப்பட்ட சிறைச்சாலைகளை விரிவுபடுத்துதல் மற்றும் பரிந்துரைக்கப்பட்ட இடங்களுக்கு இடமாற்றம் செய்தல், சிறை உட்கட்டமைப்பை மேம்படுத்துதல் மற்றும் கைதிகளை சமூகத் திட்டங்களுக்கு பரிந்துரைத்தல் மற்றும் திறந்தவெளி சிறைகளில் தடுத்து வைத்தல் போன்ற கருத்திட்டங்களை விரைவாக செயற்படுத்துவதற்காக ரூபா 2,000 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

10. வலதுகுறைந்த சமூகத்திற்கு உதவி செய்தல்

நாடுபூராகவும் சிதறிவாழும் சுமார் 1.6 மில்லியன் சனத்தொகையைக் கொண்ட வலது குறைந்த சமூகம், நாட்டின் ஒட்டுமொத்த சனத்தொகையில் 7 வீதத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்றது. இச்சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கும் தேசிய பிரகடனத்தை அங்கீகரித்த நாடு என்ற வகையில் அச்சமூகத்தின் உரிமைகள் அனைத்தையும் பாதுகாக்கும் பொறுப்பினை அரசு கொண்டுள்ளது.

Ø  அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக சுமார் 140,000 வலது குறைந்த மக்களுக்கு ரூபா 10,000 வீதப்படி உதவித்தொகை வழங்குவதற்காக ரூபா 19,000 மில்லியன் நிதி ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட வலது குறைந்தோர்களுக்கான அணுகுமுறை ஒழுங்கு விதிகளை, தற்காலத்திற்கு ஏற்ற விதத்தில் வகுப்பதை பிரதான பணியாகக் கொண்டு சர்வதேச தரங்களுக்கும் அளவு கோள்களுக்கும் ஏற்ப திருத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø வலது குறைந்தோர்களுக்காக பிரதேச செயலகங்கள், புகையிரத நிலையங்கள், பஸ்தரிப்பு நிலையங்கள், நீதிமன்றங்கள், பொலிஸ் நிலையங்கள் முதலான பொது இடங்களுக்கு செல்வதற்கான வசதிகளை வழங்குதல் என்பவற்றுக்காக வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.

Ø வலது குறைந்தோரை அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான நடைமுறை; அரச சேவையின் 3 சதவீதம் வலது குறைந்தோருக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என உத்தயோகபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளதாயினும் இது முறையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. எனவே, அரச சேவைக்கு மேற்குறிப்பிடப்பட்டவாறு 3 சதவீதத்தை ஆட்சேர்ப்புச் செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

Ø வலது குறைந்தோரின் பங்களிப்பை தேசிய பொருளாதாரத்திற்குப் பெற்றுக் கொள்வதை நோக்காகக்  கொண்டு, தனியார் தொழில்தருநர்களை ஊக்குவித்தல் மற்றும் தொழில் வாய்ப்புகளை விருத்தி செய்தல் எனும் நோக்குடன் தொழில் ஒன்றில் ஈடுபடக்கூடிய மட்டத்தில் இருக்கின்ற வலது குறைந்தோரை தனியார் துறையில் தொழில் ஒன்றில் ஈடுபடுத்திக் கொள்வதாயின், ரூபா 15,000 என்ற உச்ச வரம்பிற்கு கட்டுப்பட்டு ஊழியரின் சம்பளத்தில் 50 சதவீத சம்பள உதவித் தொகை 24 மாதங்கள் வரை அரசாங்கத்​தினால் செலுத்துவதற்கு நாங்கள் பிரேரணை முன்மொழிகின்றோம். இதற்காக ரூபா 500 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø ஒட்டிசம் உள்ளிட்ட வலதுகுறைந்த பிள்ளைகளுக்காக பகல்நேர பேணிப்பாதுகாத்தல் நிலையங்களை அமைக்கும் பணிகள், சுகாதார அமைச்சு மற்றும் சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இப் பணிகளை அடுத்த வருடத்திலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சின்கீழ் ரூபா 100 மில்லியன் நிதியும், சமூக சேவைகள் திணைக்களத்தின் கீழ் ரூபா 447 மில்லியன் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. இப் பணிகளை தொடர்ந்தும் விஸ்தரிப்பதற்கும் பகல்நேர பாதுகாப்பு நிலையங்களை அமைப்பதற்கும், மேலதிகமாக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.

11. கல்வியும் பயிற்சியும்

கௌரவ சபாநாயகர் அவர்களே,

Ø தமது பிள்ளைகளுக்கு கல்வியூட்டுவதற்கு புத்தகங்கள், உபகரணங்கள் மற்றும் காகிதாதிகளுக்கான செலவைக் குறைத்து அவர்களின் கற்கைகளுக்கு தேவையான காகிதாதிகளை ஒவ்வொரு பிள்ளையும் பெற்றுக்கொள்வதை உறுதிசெய்யும் நோக்குடன் 2025 ஆம் ஆண்டில் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட ரூபா 6,000 காகிதாதிகள் கொடுப்பனவுகளை 2026 ஆம் ஆண்டிலும் நாம் தொடர்ந்து வழங்குவோம். இந்நோக்கத்திற்காக அஸ்வெசும நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் ரூபா 9,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Ø கல்வி, அனைத்து பிள்ளைகளினதும் அடிப்படை உரிமையாகக் கருதப்படுவதனால் அனைவரையும் உள்ளடக்கும் கல்வியினூடாக மாற்றுத்திறனுடைய பிள்ளைகளுக்கு கல்வி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும், கல்வியில் மாற்றுத்திறன்கூடிய பிள்ளைகளின் ஈடுபாடு குறைவாகவே காணப்படுகின்றது. மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி பிள்ளையொன்றுக்கு ரூபா 5,000 கொண்ட மாதாந்த்க் கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு இவ்வாண்டின் வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

Ø கடந்த தசாப்தத்தில் பல்கலைக்கழகங்களில் இணைந்து கொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை 43,000 ஆக அதிகரித்துள்ள போதிலும், அவர்களுக்கு போதிய வசதிகள் இன்மையானது பல பிரச்சனைகளைத் தோற்றிவித்துள்ளது. எனவே, மாணவர்களுக்கான விடுதிகள், உணவகங்கள் மற்றும் பொது​ கற்றல் பிரதேசங்கள் போன்ற வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

Ø கடந்த வருடங்களில் புதிய மருத்துவ பீடங்கள் தாபிக்கப்பட்டுள்ள போதிலும் தரமான மருத்துவக் கல்விக்காக பேராசிரியர் பிரிவுகளும் ஆய்வுகூட வசதிகளும் கிடைக்கப்பெறாமையினால் ஏற்பட்ட சிக்கல்களை தீர்ப்பதற்கு சப்பிரகமுவ, மொரட்டுவ, உருகுணை, ஊவா வெல்லஸ்ஸ மற்றும் கிழக்கு பல்கலைக்கழகங்களில் மருத்துவ பீடங்களின் அபிவிருத்திக்காக ரூபா 11,000 மில்லியன் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

Ø இதற்கு மேலதிகமாக, பல்கலைக்கழகங்களிலும் உயர்கல்வி நிறுவனங்களிலும் வசதிகள் மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக ரூபா 11,500 மில்லியன் ஒதுக்கீடு  செய்யப்பட்டுள்ளது.

Ø பல்கலைக்கழக மாணவர்களுக்கு வழங்கப்படும் மகாபொல மற்றும் மாணவ உதவுதொகைக் கொடுப்பனவுகள் எமது முதலாவது வரவு செலவுத்திட்டத்தில் ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்பட்டுள்ளது. உயர்வடைகின்ற வாழ்க்கைச் செலவுடன் ஈடுகொடுப்பதற்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான மாதாந்த மகாபொல மற்றும் மாணவ உதவுதொகை கொடுப்பனவுகளை 2026 இலும் ரூபா 2,500 மூலம் அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றோம். அதற்கமைய, மாதாந்த மகாப்பொல கொடுப்பனவு ரூபா 10,000 ஆகவும் மாணவர் உதவுதொகை கொடுப்பனவு ரூபா 9,000 ஆகவும் அதிகரிக்கப்படும். அதேபோன்று “நிபுணதா சிசுதிரிய கொடுப்பனவு” ரூபா 2,500 இனால் அதிகரிக்கப்படும்.

Ø மாற்றுத் திறனுடன் கூடிய பிள்ளைகளில் மிகவும் குறைந்த சதவீதத்தினரே உயர்கல்வியை தொடர்கின்றனர். மாற்றுத்திறனாளிகளுக்கான மிக குறைந்த விசேட வசதிகளுடைய கல்வி நிறுவனங்களிலேயே அவர்கள் கற்கின்றனர். மாற்றுத்திறனுடன் கூடிய மாணவர்களை உயர்கல்வி நிறுவனங்களில் கற்பதை ஊக்குவிக்கும் நோக்குடன் குறைந்த வருமான குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கு ரூபா 5,000 மாதாந்த கொடுப்பனவை வழங்குவதற்கு, ரூபா 50 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

Ø தேசிய கல்விக் கல்லூரி புலமைப்பரிசில் பெறுநர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை ரூபா 2,500 இனால் அதிகரிப்பதற்கு முன்மொழிவதுடன் தற்போது ஒதுக்கீடுசெய்யப்பட்ட தொகைக்கு மேலதிகமாக இவ்வதிகரித்த கொடுப்பனவுகளை செலுத்துவதற்கு ரூபா 2,750 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

Ø தெரிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகங்களில் விசேடமாக தென்கிழக்கு, யாழ்ப்பாணம் (கிளிநொச்சி), வவுனியா, கிழக்கு, சப்பிரகமுவ பல்கலைக்கழகங்களின் சப்பிரகமுவ பல்கலைக்கழகங்களில் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீடு  செய்யப்படும். நாட்டில் நிதி நெருகடி காரணமாக முறையாகப் பராமரிக்கப்படாத விடுதிகளைப் புனரமைப்பதற்கு இவ்வாண்டு வரவு செலவுத்திட்டத்தில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் பல்கலைக்கழக மாணவர்களுக்கு விடுதி வசதிகள் பெற்றுக்கொடுக்கும் போது பல்கலைக்கழகங்களின் சுற்றுவட்டாரங்களில் காணப்படும் சமூகத்தின் கட்டிட வசதிகளை பயன்படுத்துவதில் கூடிய கவனம் செலுத்தப்படும்.

Ø முன்னெடுக்கப்படுகின்ற கல்வி மறுசீரமைப்புகளின் கீழ் வாழ்க்கைத் தொழிற்கல்வியின் தரத்தை அதிகரிப்பதற்கும் நேர்த்தியான  தொழில் வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் எதிர்பார்க்கப்படுகின்றது. அதற்கு, வாழ்க்கைதொழில் பயிற்சி நிலையங்களின் வசதிகளை மேம்படுத்துதல் விடயக் கற்கைநெறிகளை நவீனமயப்படுத்தல். ஆசிரியர்கள் மற்றும் போதனாசிரியர்களை பயிற்றுவித்தல் போன்ற செயற்பாடுகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும். இந்நோக்கத்திற்காக 09 தொழிற்பயிற்சிக் கல்வி நிலையங்களை சிறப்பு மையங்களாக (Center of Excellence) தரமுயர்த்துவதற்கும் நாடு பூராகவும் 50 பயிற்சி நிலையங்களை தரமுயர்த்துவதற்கும் அவசியமான பணிகள் 2026 இல் தொடங்கப்படும். ரூபா 2,000 மில்லியன் உள்ளடங்கலாக ஒட்டுமொத்த தொழிற்பயிற்சி கல்வியின் மேம்படுத்தலுக்காக வரவு செலவுத்திட்டத்திலிருந்து ரூபா 8,000 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

12. அபிவிருத்தி அடைந்த நாட்டிற்கான ஆரோக்கியமிக்க மக்கள்தொகை

வீழ்ச்சியடைகின்ற பிறப்பு வீதங்கள், அதிகரிக்கின்ற முதியோர் சனத்தொகை, அதிகரிக்கின்ற தொற்றாநோய் பீடிப்பு, ஊட்டச்சத்துப் பிரச்சனைகள், காலநிலை மாற்றங்கள் என்பன ஒட்டுமொத்த மனித சமுதாயத்தினதும் ஆரோக்கியத்தை மோசமாகப் பாதித்துள்ளன. இலவச சுகாதார  சேவைகள் காணப்படுகின்றமைக்கு மத்தியிலும், நீண்ட காலத்திற்கு அவர்களது ஆரோக்கியமான தேவைகளுக்காக குறிப்பிடப்பட்ட தனிப்பட்ட செலவுகளை  ​ மக்கள் சுமக்க வேண்டிய பிரச்சனையொன்றாகக் காணப்படுகின்றது. நவீன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி வரவிருக்கும் ஆண்டுகளில் இப்பிரச்சனைக்கு தீர்வுகளை வழங்கும்.

Ø  ஆரம்ப சுகாதார மற்றும் நலனோம்புகையை நோக்காகக் கொண்ட சேவைகளுக்கு மக்களுக்கான பெறுவழியை அதிகரிக்கும் இலக்குடன் 5000 – 10,000 இடைப்பட்ட மக்களை உள்ளடக்கி “ஆரோக்கியா” நிலையங்களை தாபிப்பதற்கு முன்மொழிகின்றோம். தற்போது பல்வேறு சுகாதார சேவைகளை வழங்குகின்ற அவசியமான உட்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ள மகப்பேற்று மற்றும் பிள்ளைகள் சிகிச்சை நிலையங்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள் போன்ற அமைவிடங்களில் 2026 இல் முன்னோடி கருத்திட்டமாக இவ்வெண்ணக்கருவை நடைமுறைப்படுத்துவதற்கு ரூபா 1,500 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம். அதன் பெறுபேறுகளைப் பரிசீலித்து இந்நிகழ்ச்சித்திட்டம் மாகாண சபைகளின் ஒத்துழைப்புடன் அடுத்த மூன்று ஆண்டுகளில் நாடு முழுவதும் நடை முறைப்படுத்தப்படும்.

Ø  இரண்டாம் நிலை சுகாதாரசேவைகள் 82 தள வைத்தியசாலை (Base Hospitals) களினூடாக வழங்கப்படுகின்றன. வைத்தியசாலைகள் அநேகமானவற்றில் வசதிகள் அண்மைகாலங்களில் அபிவிருத்தி செய்யப்படவில்லை. இவ்வைத்தயசாலைகளை அபிவிருத்தி செய்வதன் மூலம் இரண்டாம் நிலை சுகாதார சேவைகளின் தரத்தினை மேம்படுத்துவதற்கு ஐந்தாண்டு நிகழ்ச்சித்திட்டமொன்றின் முதலாவது ஆண்டனைத் தொடங்குவதற்கு ரூபா 31,000 மில்லியன் நிதி ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

Ø  இலங்கையில் இருதயம் தொடர்பான நோய்கள் (Cardiovascular diseases) குறிப்பிடத்தக்க மட்டத்தில் காணப்பட்டு, அனைத்து இறப்புகளிலும் ஏறத்தாள 40 சதவீதத்திற்கு வகைகூறுவதுடன் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. இலங்கையில் பாரிய மற்றும் மிகவும் முன்னேற்றகரமான இருதய கவனிப்பு நிலையமாக கொழும்பு தேசிய வைத்தியசாலைகளில் இருதயநோய்ப் பிரிவு தொழிற்படுகின்றபோதிலும் மட்டுப்படுத்தப்பட்ட இடவசதி மற்றும் வசதிகள் காரணமாக அதிகரிக்கின்ற எண்ணிக்கையிலான நோயாளர்களுக்கு இடமளிப்பதற்கு தவறியுள்ளது. இதன் காரணமாக மக்கள் நீண்ட காலங்களுக்கு காத்திருப்பு பட்டியல்களுக்கு இடம்பெற வேண்டி அல்லது தனியார் துறையிலிருந்து சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு அதிகளவான பணத்தை செலவிடுவதற்கு தள்ளப்பட்டுள்ளனர். இப்பிரச்சனைக்கான தீர்வாக ரூபா 12,000 மில்லியன் செலவில் அதிக இடவசதி மற்றும் நவீன உபகரணங்களுடன் கூடிய 16 மாடி கொண்ட தேசிய இருதய பிரிவொன்றை தாபிப்பதற்குத் தேவையான தொடக்கப் பணியினை ஆரம்பிப்பதற்கு ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Ø  தலசீமியா நோயாளர்களின் பாரியளவிலான பங்கினர் உடலியல் கோளாறு மற்றும் தீவிர இரத்தச்சோகை போன்றவற்றிலிருந்து வருந்துகின்றனர். அதிகரித்தளவிலான நோயாளர்கள் நாளாந்த இரும்பு அகற்றுதல் சிகிச்சை உள்ளடங்கலாக வாழ்வு முழுவதுமான இரத்தமேற்றல் அல்லது வேறு சிகிச்சைகளை வேண்டுகின்றனர். இதன் விளைவாக இந்நோயாளர்கள் மாத்திரமின்றி அவர்களது குடும்பங்களும் தீவிரமான உளவியல், சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்நிலையில், குறைந்த வருமான தலசீமியா நோயாளர்களாக ரூபா 500 தொடக்கம் ரூபா 5,000 வரையான வீச்சில் வேறுபடுகின்ற தொகைகளை மாகாண சபைகள் கொடுப்பனவு செய்கின்றன. மாகாண சபைகளால் கொடுப்பனவு செய்யப்படுகின்ற தொகைக்கு பதிலாக மருத்துவ பரிந்துரையின் அடிப்படையில் குறைந்த வருமானம் பெறும் தலசீமியா நோயாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரூபா 10,000 கொண்ட மாதாந்த கொடுப்பனவொன்றை வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றோம்.

Ø  தரவுகளின் அடிப்படையில் மக்களின் சுகாதார நிலைமைகளை புரிந்துகொள்வதற்கும் ஒட்டுமொத்த சுகாதார சேவைகளை மேம்படுத்துவதற்கும், குடித்தொகை மற்றும் சுகாதார ஆய்வுத் தகவல்கள் (DHS) மிக முக்கியமானவையாகும். ஒவ்வொரு 05 ஆண்டுகளுக்கும் நாடாத்தப்படுவதற்கு முன்மொழியப்பட்ட இவ்வாய்வு 2016 ஆண்டு தொடக்கம் நடாத்தப்பட்டிருக்கவில்லை. நிலைபெறத்தக்க அபவிருத்திக் குறைகாட்டிகள் மற்றும் உலகளாவிய சுகாதார உள்ளடக்கச் சுட்டி என்பன தொடர்பில் தேசிய சுகாதாரப் பெறுபேறுகளை அறிக்கையிடுவதற்காக இத்தகவல்கள் முக்கியமாக விளங்குகின்றன. அதற்கமைய இவ்வாய்வினை நடாத்துவதற்கு ரூபா 570 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Ø  பிராந்திய சனத்தொகைக்கும் நோய்க் கட்டுப்பாட்டை மேம்படுத்துவதற்கும், மருத்துவ நிருவாக வினைத்திறனிற்கும் நாம் தொடர்ச்சியாக மருத்துவ சேவைகளை வழங்குவதற்கு எண்ணுகின்றோம். அதற்கமைய தம்புள்ள மற்றும் தெனியாய பிராந்திய வைத்தியசாலைகளை இலகுவாக சென்றடையக்கூடிய, பாதுகாப்பான, மிகவும் இடவசதியுடன் கூடிய பொருத்தமான அமைவிடங்களுக்கு இடமாற்றுவதற்கு ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

13. நிறைபெறத்தக்க மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய அபிவிருத்தி

மக்களின் உண்மையான அபிவிருத்தித் தேவைகளையும் வாய்ப்புக்களையும் இனங்காண்பதற்கு ஒவ்வொரு கிராம சேவையாளர் பிரிவிலும் சமூக அபிவிருத்திச் சபைகள் நிறுவப்படும். சமூக அபிவிருத்திச் சபைகளினால் இனங்காணப்பட்ட அபிவிருத்தித் தேவைகளுக்கு அமைவாக அனைத்து அரசாங்க அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களையும் திட்டமிடுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நோக்கிலும் சுபீட்சமிக்க கிராமத்தையும் பாதுகாப்பான வாழ்வையும் உருவாக்கும் பொறுப்பு இச்சமூக அபிவிருத்திச் சபைகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக அபிவிருத்தியின் உண்மையான உரிமையாளராக மக்களை ஆக்குவதை நோக்கி நாம் பணியாற்றுகின்றோம்.

அதற்கமைய வறுமையினை ஒழிப்பதற்கான தேசிய பிரச்சாரத்தின் கீழ் நாடு முழுவதும், ஒருங்கிணைக்கப்பட்ட கிராமிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நடைமுறைப்படுத்தும் பொருட்டு பிரஜாசக்தி நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூபா 4,250 மில்லியன் ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 20,750 மில்லியன் ஒதுக்கீடுசெய்து மொத்த ஒதுக்கீட்டை ரூபா 25,000 மில்லியனாக அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

14. தோட்டத் தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல்

தோட்டத் தொழிலாளர்கள் அவர்களது சேவைகளுடன் ஒப்பிடத்தக்க நியாயமான நாளாந்த சம்பளமொன்றை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடாகும். ரூபா 1,350 கொண்ட தற்போதைய நாளாந்த குறைந்தபட்ச சம்பளம் 2026 ஜனவரியில் இருந்து தொடக்கம் ரூபா 1,550 ஆக அதிகரிப்பதற்கு முன்மொழிகின்றேன். இவ் ரூபா 1,5​50 தொகை சம்பளத்திற்கு மேலதிகமாக வேலைக்கு சமுகமளிப்பதை நாளாந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவாக ரூபா 20​​0 தொகையினை அரசாங்கத்தினால் பெற்றுக்கொடுப்பதற்கு முன்மொழிகின்றோம். அதற்காக ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

15. பிரதேச அபிவிருத்தி

நாட்டின் அனைத்து பிரசைகளையும் விசேடமாக, கிராமிய சமூகத்தை நாட்டின் அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டங்களில் முனைப்புடன் ஈடுபடுத்துவதற்கு அரசாங்கம் எதிர்ப்பார்க்கின்றது. குறைவாக விருத்தியடைந்த பிரதேசங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூக வாழ்வை வலுப்படுத்துவதற்கும் முன்னுரிமை வழங்கப்படும். தேசிய அபிவிருத்தி வெற்றி பெறுவதற்கு நிருவாக வினைத்திறன், சமூக நலனோம்புகை, மாகாண மற்றும் பிராந்திய மட்டங்களில் வீதிகள் மற்றும் வலுப்படுத்தப்பட்ட பொருளாதார உறவுகள் உள்ளடங்கலாக உட்கட்டமைப்பு என்பவற்றை மேம்படுத்துவது அத்தியவசியமானதாக விளங்குகின்றது. இந்நோக்கத்திற்காக மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டை விட அதிக நிதியங்களை நாம் ஒதுக்கீடு செய்கின்றோம்.

Ø பிராந்திய நிருவாக கட்டிடத் தொகுதிகளில் உட்கட்டமைப்பு அபிவிருத்தி மீது விசேட கவனம் செலுத்தப்படும். நீண்ட காலத் தேவையொன்றாக விளங்குகின்ற ஊவா மாகாண சபையின் இரண்டாம் கட்டத்திற்கான புதிய நிருவாக கட்டிடத் தொகுதியொன்றை நிர்மாணிப்பதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

Ø மாநாடுகள், கலாசார மற்றும் பொழுதுபோக்குச் செயற்பாடுகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் போன்ற பொதுச் செயற்பாடுகளுக்காக மொனறாகலை மற்றும் அம்பாறை நகரங்களில் பொருத்தமான கேட்போர்கூட வசதிகள் இல்லாமை சமூக ஈடுபாட்டினை தடைபடுத்துகின்றது என்பது அவதானத்தில் கொள்ளப்பட்டுள்ளது. ஆகையினால், கேட்போர்கூட வசதிகளை உள்ளடக்குகின்ற கட்டிடத்தொகுதி நிர்மாணத்தின் பூர்வாங்க பணிகளுக்காக தொடர்புடைய மாகாண சபைகளுக்காக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழியப்படுகின்றது.

Ø கிழக்கு மாகாணத்தில் பகுதியளவில் நிறைவு செய்யப்பட்ட மற்றும் நிந்தவூர் நகரசபைக் கட்டிடத்தில் இடைநிறுத்தப்பட்ட நிர்மாண வேலைகளை உரிய சாத்தியவள ஆய்வின் பின்பு நிறைவுசெய்வதற்கு ரூபா 300 மில்லியன் வழங்குவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

Ø கிராமிய சமூகங்களுக்காக நாளாந்தப் பயணம், வர்த்தகம், பெறுவழிக்கான சேவைகளை மேம்படுத்துவதற்கு முன்னர் தொடங்கப்பட்டு இடைநிறுத்தப்பட்ட வீதிகள் மற்றும் பாலங்களின் நிர்மாணம் மீள தொடங்கப்பட்டு முக்கிய சந்திகள் விரிவுபடுத்தப்படும். அதற்கமைய கிராமிய வீதிகளுக்காக ரூபா 24,000 மில்லியனும், கிராமிய பாலங்களுக்காக ரூபா 2,500 மில்லியனும் ஒதுக்கப்பட்டுள்ளது.

16. முதியோர் பொருளாதாரத்தில் முதலிடுதல்

இலங்கை இளம் சனத்தொகையினை விட 60 மற்றும் அதற்கு மேற்பட்ட சனத்தொகை விரைவாக வளர்ச்சியடைவதைக் கொண்ட பங்குடன் கூடிய துரிதமான குடித்தொகை மாறுதலுக்கு உட்பட்டு வருகின்றது. சமூகத்தில், உற்சாகமிக்க பங்குதாரர்களாக அவர்களை ஆக்குவதற்கு கொள்கையொன்றை வகுப்பதற்காக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு ரூபா 10 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

17. மகளிர் வலுவூட்டல்: போசணை, பாதுகாப்பு மற்றும் பொருளாதார வாய்ப்புகள்

2026 இல் கற்பிணித் தாய்மார்கள், பாலூட்டும் தாய்மார்கள் போன்றோருக்கு திரிபோசா நிகழ்ச்சித்திட்டம் மற்றும் மாதாந்த ஊட்டச்சத்து உதவி ஊடாக அதிகரித்த ஆதரவு வழங்கப்பட்டு வலுப்படுத்தப்பட்ட பொது சுகாதார வலையமைப்பூடாக பரம்பலை விரிவாக்குவதற்கு மற்றும் வினியோகங்களை உறுதிப்படுத்துவதற்கும் எதிர்பார்கின்றோம்.

நாட்டின் தொழிற்படைக்கு பெண் சமூகத்தின் பங்களிப்பு மிக முக்கியமானதாகும். எனினும், பெண் தொழிற்படை பங்களிப்பு ஏரத்தாள 32 சதவீதமாக குறைந்த மட்டத்திலேயே காணப்படுகின்றது. பிரதேச செயலக மட்டத்தில் நாடு முழுவதும் பெண் தொழில் முயற்சியாளர்களால் முன்னெடுக்கப்படுகின்ற சுயதொழில், வீட்டுக் கைத்தொழில்களை தரமுயர்த்துவதற்கு இவ் வரவுசெலவுத் திட்டம் ரூபா 240 மில்லியனை ஒதுக்கீடு செய்கின்றது. இதன் கீழ் புதிய வியாபாரங்களை தொடங்குவதற்கும், சுயதொழில் செயற்பாடுகளை வலுப்படுத்துவதற்கும் பெண் தொழில்முயற்சியாளர்களுக்கு உதவி வழங்குவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன் கீழ் பெண்களின் நலனோம்புகையை நோக்கமாக கொண்ட நிகழ்ச்சித்திட்டத்திற்காக மேலதிக ரூபா 200 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்படுவதற்கு முன்மொழியப்பட்டுள்ளது.

18.  வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையர்களுக்கான சலுகைகள்

எமது நாட்டிற்கான அதிகூடிய திரண்ட அண்ணியச் செலாவணி மூலமானது வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்காக சென்றுள்ள இலங்கையர்களால் அனுப்பப்படும் மாற்றல்களாகும். இவர்களால் எமது நாட்டின் அபிவிருத்திக்கு அளிக்கப்படுகின்ற பங்களிப்புக்கு அங்கீகாரமளிப்பதற்காக வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு சலுகை வட்டியில் வீட்டுக் கடன் திட்டமொன்றை அறிமுகப்படுத்தப்படும். அது வட்டி மீளளிப்பிற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நிதியத்தினை பயன்படுத்தி வட்டியை மீளளிப்புச் செய்ய முன்மொழிகின்றேன்.

அதேபோல், வெளிநாட்டில் வேலை பார்க்கும் இலங்கையர்களுக்கு பங்களிப்பு ஓய்வூதிய முறைமையொன்றை அறிமுகம் செய்யப்படும். ஆரம்ப நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொண்டு இதனை 2026 வருடத்தினுள் அமுல்படுத்துவதற்கு அவசியமான நடவடிக்கைகளை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது.

இத் திட்டத்தினை அமுல்படுத்துவதற்காக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தின் நிதியத்திலிருந்து ரூபா 2,000 மில்லியனை ஆரம்ப கட்டத்தில் ஒதுக்கப்படும்.

19. மனித-யானை மோதலைக் குறைத்தல்

வருடம் முழுவதிலும் மனித-யானை மோதலினால் மனித உயிர்கள் 80 பேர் அளவிலும் யானைகள் 260 இற்கு அதிகமாகவும் நாட்டிற்கு இழப்பு ஏற்படுகின்றன. அவற்றில் பெரும்பாலான சம்பவங்கள் அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இடம்பெற்றுள்ளன. இலங்கையில் மனித-யானை மோதல் கிராமிய பொருளாதாரத்திற்கு போலவே தேசிய பொருளாதாரத்திற்கும் கடுமையான அச்சுருத்தலை ஏற்படுத்துகி்ன்றது.​

Ø வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்தின் செயற்திறனை அதிகரிப்பதற்குத் தேவையான 294 வாகனங்கள் மற்றும் தொடர்பாடல் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வதற்காக அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Ø கட்டாயத் தேவை காணப்படுவதாக இனங்காணப்பட்ட பிரதேசங்களிலுமுள்ள மின்வேலிகளினது நிர்மாண வேலை பூர்த்தி செய்வதற்காக மேலதிகமாக ரூபா 300 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம். இவற்றில் ஏற்கனவே நிர்மாணிக்கப்பட்டு உடைந்து விழுந்த, பாழடைந்த, நிர்மாண வேலை பகுதியளவு பூர்த்தி செய்யப்பட்ட அல்லது நிர்மாணிப்பதற்கு திட்டமிடப்பட்டவையும் உள்ளடங்கும்.

Ø யானை வேலி கண்காணிப்பு மற்றும் மனித-யானை மோதலினை குறைப்பதற்காக விசேட பயிற்சி வழங்கப்பட்ட சிவில் பாதுகாப்பு சேவை அலுவலர்கள் 5,000 பேரினை வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு நிரந்தர அடிப்படையில் இணைத்துக்கொள்வதற்கு முன்மொழிகின்றோம்.

Ø மின் வேலி கண்காணிப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக சேர்த்துக்கொள்ளப்பட்ட சிவில் பாதுகாப்பு ஊழியர்களுக்கு உணவுக் கொடுப்பனவு மற்றும் உபகரணங்கள் பராமரிப்புக்காக எரிபொருள் கொடுப்பனவாக ரூபா 375 மில்லியன் ஒதுக்கப்படும்.

Ø யானைகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு புல் நிலங்கள் மற்றும் நீர் மூலங்களின் முகாமைத்துவத்திற்காக ரூபா 80 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

Ø மனித-யானை முரண்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பணிகளுக்கும் மின்வேலி நிர்மாணப் பணிகளை நிறைவு செய்வதற்கும் வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றோம்.

Ø மனித-யானை முரண்பாடுகளை தனிப்பதற்கு மின்வேலி அமைத்தலுக்கு மேலதிகமாக நீண்ட கால, ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகளைக் காண்பதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூபா 10 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றோம்.

20. நாடகம், அரங்கேற்றல் கலை மற்றும் இலக்கிய மேம்பாடு

இலங்கையின் கலாசார பல்வகைத் தன்மை, நல்லிணக்கம் மற்றும் சகல பிரசைகளையும் உள்ளடக்கிய தேசிய அடையாளத்தை முன்கொண்டு செல்வதற்காக அர்த்தமுள்ள மேடையொன்றை நாம் உருவாக்கியுள்ளோம். மரபுரிமை மற்றும் பல்வகைத் தன்மையினை மதிக்கின்ற, கருணைமிக்க சமூகமொன்றினை கட்டியெழுப்புவது தொடர்பான கல்வி, கலாசாரம் மற்றும் சமூகங்களுக்கிடையிலான கலந்துரையாடல் என்பவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் அரசாங்கத்தின் கொள்கை கட்டமைப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

கலாசாரத்தினை வளப்படுத்துகின்ற துறையாக நாடகம், அரங்கேற்றல் மற்றும் இலக்கிய மேம்பாட்டிற்காக ஏற்கனவே செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக ரூபா 50 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நான் முன்மொழிகின்றோம்.

21. ஊடகத்துறை மேம்பாடு

Ø அரச ஊடக நிறுவனங்களின் தவறான முகாமைகளின் காரணமாக அவற்றின் நிருவாகக் கட்டமைப்பு செயலிழந்து பணியாளர்களுக்கான சம்பளங்களை பெற்றுக்கொடுப்பதில் அசௌகரிய நிலையை அடைந்துள்ளது. அவற்றில் நாளாந்த செயற்பாட்டுக்காக அடிக்கடி அரச நிதியினை வேண்டி நிற்கின்ற சூழலை உருவாக்கியுள்ளது.

Ø இந் நிறுவனங்களின் பிரதான பதவிகளுக்கு இத்துறையில் நிபுணத்துவம் பெற்றவர்களை நியமித்து அந் நிறுவனங்களை மீண்டும் கட்டியெழுப்பும் முயற்சிகள் ஆரம்பித்துள்ளது. இந் நிறுவனங்கள் மீண்டும் சுமுக நிலைக்கும் திரும்பும் வரை அரசாங்கத்தின் ஆதரவு அவசியம் என்பதை ஏற்றுக்கொள்கின்றோம். ஆகவே, 2026 வரவு செலவுத் திட்டமூடாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் மற்றும் சுயாதீன தொலைக்காட்சிச் சேவை ஆகிய நிறுவனங்களின் செயற்பாடு மற்றும் அத்தியவசிய மூலதன செலவுகளுக்கு அரசாங்கத்தின் உதவியை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø நவீன தொழில்நுட்ப முன்னேற்றத்தோடு ஊடகத்துறையில் ஏற்பட்டுள்ள விருத்திக்கு பொருந்தும் வகையில் ஊடகவியலாளர்களின் திறன் அபிவிருத்திக்கு அவசியமான உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்கு உயர் கல்வி புலமைப் பரிசில்களை வழங்குவதற்கு மற்றும் ஊடகவாகத்திற்கு அவசியமான தொழில்நுட்ப பிரவேசத்திற்கான உதவிகளை பெற்றுக்கொடுப்பற்கும் ரூபா 100 மில்லியன் ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

22. விளையாட்டுக் கலாச்சாரத்தை உருவாக்குதல்

விளையாட்டுக் கலாச்சாரத்தை விருத்திசெய்தலானது, சமூகத்தில் ஆரோக்கியமான, ஒற்றுமையான மற்றும் “பலமான குடிமகன் – வெற்றிகரமான மக்களை” உருவாக்குகிறது. எனவே, விளையாட்டு வசதிகளுக்கான வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் மூலம் நமது குழந்தைகள் மற்றும் இளைஞர்களிடையே விளையாட்டு கலாச்சாரத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 1,800 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக மேலும் ரூபா 800 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிகின்றோம்.

சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், இரண்டாம் மட்ட விளையாட்டுக் குழுக்கள், சர்வதேச விளையாட்டுப் போட்டிகள், தேசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் உயர் திறன் கொண்ட விளையாட்டு அணிகளில் பங்கேற்கும் சுமார் 4,000 விளையாட்டு வீரர்களுக்கு வசதிகளை வழங்குவதற்காக ரூபா 1,163 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

விளையாட்டு உட்கட்டமைப்பு மேம்பாட்டின் கீழ், மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விளையாட்டரங்குகளை மேம்படுத்துவதற்காக இவ்வருட வரவுசெலவுத் திட்டத்தில் ரூபா 225 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், கல்முனை விளையாட்டரங்கினை நிறைவு செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விளையாட்டுக் கட்டிடத் தொகுதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 150 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

23. பொருளாதார சுயாதீனம் மற்றும் உணவுப் பாதுகாப்பு

23.1 விவசாய மற்றும் கால்நடைத் துறை

கௌரவ சபாநாயகர் அவர்களே,

Ø நெல்லுக்கான உத்தரவாத விலையை நிர்ணயிக்கும் போது நன்கு உலர்ந்த நெல்லுக்கு அதிக விலை வழங்கப்படுவதால், நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் உலர்த்தும் இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட விவசாய நிறுவனங்கள் அல்லது கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றோம். “உற்பத்திக் கூட்டுறவுச் சங்கங்களை உருவாக்குதல் மற்றும் இளம் தொழில்முனைவோரை உருவாக்குதல்” நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் ஒதுக்கீடுசெய்யப்பட்ட நிதி ஏற்பாடுகளுக்கு மேலதிகமாக இக்கருத்திட்டத்தை நிர்வகிப்பதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம்.

Ø பெரிய வெங்காயம், உருளைக் கிழங்கு மற்றும் சோளம் உட்பட உணவுப் பயிர் உற்பத்தியில் ஏற்படும் விலைத் தளம்பலை குறைப்பதற்காக கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தினூடாக வழங்கப்படும் சேவைக்கான பொறிமுறையை உறுதிப்படுத்துவதற்கு மற்றும் களஞ்சியப்படுத்தல் வசதிகளை மேம்படுத்துவதற்கு ரூபா 1,000 மில்லியனை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø ரூபா 500 மில்லியனுக்கும் அதிக செலவில் நிர்மாணிக்கட்டப்பட்டு, பல்வேறு தொழில்நுட்ப காரணங்களினால் செயற்படாதிருக்கும் தம்புள்ளை குளிரூட்டல் களஞ்சியசாலை, விவசாய பொருட்களுக்கான களஞ்சியமாகத் திறம்பட பயன்படுத்தப்படுதல் வேண்டும். இக்களஞ்சியமானது, சுமார் 5,000 மெட்ரிக் தொன் கொள்ளளவு கொண்டதாகும். இக் களஞ்சியத்தினைப் பயன்படுத்துவதற்கு இடையூறாக இருக்கும் கட்டுமானப் பணிகளை நிறைவுசெய்யவும், சூரிய சக்தி மின் முறைமையினை நிறுவவும் இந்த வரவுசெலவுத்திட்டத்தில் ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகிறேன். இந்த குளிரூட்டல் களஞ்சியத்தை செயற்படுத்தவும் முகாமை செய்வதற்கும் மிகப் பொருத்தமான வழிமுறைகளின்பால் கவனம் செலுத்தப்படல் வேண்டும்.

Ø புதிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, குறிப்பாக காலநிலைக்கேற்ற நீர்ப்பாசன தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாத்தளை, கண்டி மற்றும் உலர் வலயத்தில் சாத்தியமான இடங்களில் காணியினை ஒருங்கிணைப்பதன் மூலமும் உள்ளூர் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்துகிறது. இந்நோக்கத்திற்காக, அரசாங்கம் அடையாளம் காணப்பட்ட 400 நீர்ப்பாசன முறைமைகளுக்கு நடுத்தர கால வரவுசெலவுத்திட்ட கட்டமைப்பிற்குள் ரூபா 4,000 மில்லியனை வழங்கவும், அதில் 100 நீர்ப்பாசன முறைமைகளை 2026 ஆண்டில் அமுல்படுத்துவதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறோம்.

Ø தற்போதைய உள்நாட்டு பால் உற்பத்தி நாட்டின் பால் தேவையில் சுமார் 40 சதவீதத்தை பூர்த்தி செய்ய போதுமானதுடன், பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களை இறக்குமதி செய்வதற்கு ஆண்டுதோறும் கணிசமானளவு அந்நிய செலாவணி செலவிடப்படுகிறது. நாம் பாலில் தன்னிறைவடைவதற்கு, ஆண்டுதோறும் சுமார் 1,200 மில்லியன் லீற்றர் பால் உற்பத்தி செய்யப்படுதல் வேண்டும். 2030 இல் உள்நாட்டு பால் தேவையில் 75 சதவீதத்தை பூர்த்தி செய்யும் இலக்கை அடையும் வகையில் தேசிய பாலுற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சித்திட்டத்திற்காக, ஒவ்வொரு கால்நடை வைத்தியப் பிரிவையும் அடிப்படையாகக் கொண்டு விவசாயிகளை ஒழுங்கமைப்பதன் மூலம் கறவைப் பசுக்களின் இனப்பெருக்கம், ஊட்டச்சத்து மற்றும் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கான திட்டமொன்றினைச் செயற்படுத்த எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக, கால்நடை வைத்தியப் பிரிவுகளின் திறனை அடிப்படையாகக் கொண்டு, விவசாயிகளை ஒழுங்கமைத்து உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரிக்க நாம் முன்மொழிகிறோம். “சிறு மற்றும் நடுத்தர அளவிலான கால்நடை அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின்” கீழ் இந்தத் திட்டத்தின் சாத்தியவள ஆய்வு உள்ளிட்ட ஆரம்பப் பணிகளுக்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்க நாம் முன்மொழிகிறோம்.

Ø தேசிய கால்நடை உற்பத்தியினை அதிகரிப்பதற்காக கால்நடைத் துறையில் உயர்தர இனப்பெருக்க விலங்குகளின் எண்ணிக்கையை அதிகரிப்பது உள்ளூர் விலங்கு உற்பத்தியை அதிகரிப்பதற்கான அடிப்படைத் தேவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், குறிப்பாக கறவைப் பசுக்கள் மற்றும் பன்றி வளர்ப்புத் துறைகளில் இது முக்கியமானதாகும். எனவே, இந்த வரவுசெலவுத்திட்டத்தில், உயர்தர கறவை மாடுகள் மற்றும் பன்றி இனங்களின் இனப்பெருக்க அலகுகளை மேம்படுத்துவதற்கும், தேசிய கால்நடை அபிவிருத்திச் சபைக்குச் சொந்தமான தேர்ந்தெடுக்கப்பட்ட பண்ணைகளில் ஊட்டச்சத்துமிக்க புற்களை வளர்ப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதுடன், இது முறையான ஆய்வுக்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்ட வழிமுறையொன்றின் மூலம் மேற்கொள்ளப்படும். இதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய நான் முன்மொழிகிறேன்.

Ø மில்கோ (பிரைவட்) லிமிடெட்டின் படல்கம பால் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளை மீண்டும் தொடங்குவது மிகவும் முக்கியமாகும். 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படல்கம பால் தொழிற்சாலை செயற்பாடுகள் முடங்கியுள்ளதுடன், அதற்காக ஏற்கனவே சுமார் ரூபா 18,000 மில்லியன் மக்கள் பணம் செலவிடப்பட்டுள்ளது. 2022 முதல் கைவிடப்பட்டுள்ள இக்கருத்திட்டத்தினை எதிர்காலத்தில் தேசிய பொருளாதாரத்திற்கு பயனுள்ள வகையில் பங்களிப்பதற்கு அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தின்படி உள்ளூர் பால் உற்பத்தியை அதிகரித்தல் மற்றும் பால் பதப்படுத்தலினை உயர் தரத்தில் மேற்கொள்ளல் என்பவற்றுக்காகப் பயன்படுத்தப்படும். அதன்படி, தொழிற்சாலையின் மீதமுள்ள பணிகளை நிறைவுசெய்யத் தேவையான அடிப்படைப் பணிகளுக்கு, குறிப்பாக இயந்திரங்கள் மற்றும் கட்டிடங்களைத் திருத்தி உற்பத்தியைத் தொடங்குவதற்கு ரூபா 3,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்ய முன்மொழியப்பட்டுள்ளது.

படல்கம பால் தொழிற்சாலையின் பணிகளை விரைவில் நிறைவுசெய்து, தற்போதைய நாரஹேன்பிட்டியவிலுள்ள பால் தொழிற்சாலையை இந்த இடத்திற்கு மாற்ற நாங்கள் முன்மொழிகிறோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே, இந்தப் பால் தொழிற்சாலையின் அபிவிருத்திக்காக நிதி ஒதுக்கீடுசெய்யும் அதே வேளை, இது தொடர்பாக ஏற்பட்டுள்ள ஊழல் மற்றும் பொது நிதி வீண்விரயம் குறித்து விசாரணை நடத்தவும் நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

23.2 தெங்குச் செய்கையை அபிவிருத்தி செய்தல்

Ø இலங்கையின் வருடாந்த தெங்கு உற்பத்தி சுமார் 2,800 – 3,000 மில்லியன் தேங்காய்கள் என்பதுடன் இதில் சுமார் 70 வீதம் வீட்டு நுகர்வுக்காகவும் மீதி தெங்குசார் உற்பத்திக் கைத்தொழில்களுக்காகவும் பயன்படுத்தப் படுகின்றது. எவ்வாறாயினும், தற்போதைய வருடாந்த தெங்கு உற்பத்தி வீட்டு நுகர்வுக்கு போதுமாக இருந்த போதிலும், இது கைத்தொழில் கேள்விக்கு ஏற்ற வழங்கலை நிறைவு செய்வதற்கு போதுமானதல்ல.

அதனால், தெங்கு உற்பத்தியை அதிகரிக்கும் நீண்டகால உபாயவழியாக, தெங்கு ஆராய்ச்சி நிறுவனத்தின் பரிந்துரையின் அடிப்படையில் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள வடக்கு தெங்கு முக்கோண வலயத்தில் தெங்குச் செய்கையை தொடர்ந்தும் விஸ்தரிக்கும் பொருட்டு ரூபா 600 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்மொழிகின்றோம்.

Ø வர்த்தக நோக்கு கொண்ட தெங்குச் செய்கையில் தெங்குத் தோட்ட உரிமையாளர்கள் உரப்பாவணையையும் ஈரப்பதனைப் பாதுகாப்பதற்கான முறைகளையும் ஓரளவிற்கேனும் வெற்றிகரமாக பின்பற்றிய போதிலும், 05 ஏக்கருக்கும் குறைந்த தென்னந்தோட்ட உரிமையாளர்கள் இதில் கவனம் செலுத்துவது குறைவாகவே காணப்படுகின்றன. தற்சமயம் தெங்குச் செய்கைச் சபையினால் செய்கை பண்ணப்பட்டுள்ள சுமார் 4,000 ஏக்கர் தென்னந்தோட்டம் அடங்கலாக மண்வள மற்றும் ஈரப்பதனைப் பாதுகாப்பதற்கான உரைகளை பாவிக்கும் நிகழ்ச்சித்திட்டமொன்றை அமுல் செய்த போதிலும், தெங்குச் செய்கையின் எதிர்பார்க்கப்பட்ட இலக்குகளை அடைய வேண்டுமெனில், இந்த முறை தொடர்ந்தும் விஸ்தரிக்கப்பட வேண்டியுள்ளது.

எனவே, தெங்குச் செய்கைத் துறையில் நடுத்தர கால இலக்குகளை அடைவதன் ஊடாக எதிர்பார்க்கப்பட்ட ஏற்றுமதி இலக்குகளை அடையும்பொருட்டு ஏற்கனவே தெங்குச் செய்கை பண்ணப்பட்ட போது சுமார் 447,000 ஏக்கர் பரப்புடைய 05 ஏக்கரிலும் குறைந்த தென்னந்தோட்ட உரிமையாளர்களை ஊக்குவிக்கும் பொருட்டு முறையான நிகழ்ச்சித்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 2,500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைக்கின்றேன்.

24. கடற்றொழில்

24.1 மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி

Ø பாதுகாப்பானதும் தரமானதுமான மீன்பிடி படகுகளை இயக்குவதற்குத் தேவையான உதவிகளை வழங்குதல், வினைத்திறனைக் கூட்டுதல் மற்றும் விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை கட்டுப்படுத்தல் ஆகிய விடயங்கள் மீது கவனம் செலுத்திய வண்ணம், பேருவளை, அம்பலாங்கொடை, குடாவெல்ல, நில்வெல்ல உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மீன்பிடித் துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை புனரமைத்தல் மற்றும் மேம்படுத்தல் என்பவற்றுக்காக ரூபா 300 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைக்கின்றேன்.

மேலும், மீன்பிடித் துறைமுகங்களின் அத்தியவசிய உட்கட்டமைப்பு வசதிகளை தொடர்ந்தும் மேம்படுத்துவதற்காக, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு பிரேரணை முன்வைக்கின்றேன்.

24.2 மீனவர்களின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு நவீனதொழில்நுட்பத்தை பயன்படுத்தல்

Ø மேம்படுத்தப்பட்ட சேவைகளை வழங்குதல், பாதுகாப்பான கடற்பயணங்களை உறுதிப்படுத்தல் மற்றும் துறைமுகங்களில் காணப்படுகின்ற நெரிசல்களை குறைத்தல் என்பவற்றை இலக்காகக் கொண்டு வாழைச்சேனை மீன்பிடித்துறைமுகத்தை மேம்படுத்துவதற்காக ரூபா 350 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

Ø மீனவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக மீனவர்களுக்கு உயிர்ப்பாதுகாப்பு அங்கிகளை பெற்றுக் கொடுப்பதற்காக ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம். மீன்கள் அதிகளவில் நடமாடும் இடங்களை இலகுவாக அடையாளம் காண்பதற்கு உலகின் பல்வேறு நாடுகள் நவீன தொழில்நுட்பத்தினைப் பயன்படுத்துகின்றனர். அத்தொழில்நுட்பங்களை எமது மீனவர்களுக்கும் பெற்றுக் கொடுப்பதானது இக்கைத்தொழிலின் முன்னேற்றத்திற்கு காரணமாக அமையும்.

24.3 மீன் விளைச்சலை அதிகரித்தல்

Ø விளைச்சலுக்குப் பிந்திய சேதங்களை குறைப்பதனூடாக தரமானதும் போதியதுமான மீண் விளைச்சலை பெற்றுக்கொள்வதன் மூலம் மீனவ சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்காக துறைமுகங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø இதற்கமைய, செய்மதி தொழில்நுட்பத்தை பயன்படுத்தி மீன்கள் நடமாடும் இடங்களை இனங்காண்பதற்காகவும் உரிய தகவல்களை மீனவர்களுக்கிடையில் வினைத்திறனுடன் தொடர்பாடல் மேற்கொள்ளும் முறையொன்றை வகுப்பதற்காகவும் ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø மீன் முட்டைகளின் வழங்கலை அதிகரிப்பதற்கும், தரத்தில் சிறந்த நன்னீர் மீன்களை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பதற்கும் நீரியல்வாழ் அபிவிருத்தி நிலையங்களை மேம்படுத்துவதற்கும் ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

24.4 கடல்சார் பொருளாதார மேம்பாடு

Ø  இலங்கையின் கடல்சார் பொருளாதாரம் தேசிய சுபீட்சத்திற்கும் நிலைபேறான அபிவிருத்திக்கும் முக்கிய பங்காற்றுகின்றது. இந்து சமுத்திரத்தில் உபாயரீதியான அமைவிடத்தில் இலங்கை அமைந்திருத்தல், நிலைபேறான பொருளாதார அபிவிருத்திக்கான எமது சமுத்திர மற்றும் கடலோரம் சார்ந்த வளங்களை பயன்படுத்துவதற்கு முக்கியமான சந்தர்ப்பம் கிட்டியிருப்பதுடன் நீலப் பொருளாதார முதலீட்டுக்கான பிராந்திய மையமொன்றாகவும் தோன்றுவதற்கு உறுதுணையாக அமைகின்றது.

Ø சமுத்திர மற்றும் கடலோரம்சார் மீன்பிடிக் கைத்தொழில், சமுத்திர நீரியல்வாழ் மீன் இனங்களின் இனப்பெருக்கம், சுற்றாடல்சார் சுற்றுலாத்துறை, சுழியோடுதலுடன் தொடர்புடைய செயற்பாடுகள், பிரத்தியேக பொருளாதார வலயத்தின் (EEZ) சமுத்திர உயிரியல் தொழில்நுட்பம், கடலடி வளங்களின் அபிவிருத்தி செய்தல் மூலமாக  அடையக் கூடிய பொருளாதார பயன்கள் தொடர்பாக மிகவும் விரிவான ஆய்வொன்றைச் மேறகொள்வதற்கு ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

25. நீர்ப்பாசனக் கைத்தொழிலும் நீர்வழங்கலும்

25.1 நீர்ப்பாசனம்

Ø நீர்ப்பாசனத்துறையை மேம்படுத்துவதற்காக ரூபா 91,700 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள கருத்திட்டங்களை மீண்டும் ஆரம்பிப்பதன் மூலம் உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்தல், பிராந்திய அபிவிருத்தி, தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தல் போன்ற அரசாங்கத்தின் முக்கிய நோக்கங்களை அடைவதற்கு நாங்கள் எதிர்பார்க்கின்றோம்.

Ø அதற்கமைய, முந்தெனி ஆறு கருத்திட்டத்தின் முதற்கட்ட வேலைகளை ஆரம்பித்து கருத்திட்டத்தின் நிர்மாணப் பணிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு இவ் வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 50 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.

Ø அதேபோன்று தல்பிட்டிகல நீர்த்தேக்க கருத்திட்டம் மற்றும் கும்புக்கன் ஓயா நீர்த்தேக்க கருத்திட்டம் ஆகிய கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்காக தேவையான நிதியைப் பெற்றுக் கொள்வதற்காக அபிவிருத்தி தரப்புகளுடன் நாங்கள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பதற்கு எதிர்பார்க்கின்றோம்.

Ø அதேபோன்று, வடக்கு மாகாணத்தின் யோதவாவியுடன் இணைந்த காணிகளில் விவசாயத்துறைக்கு ஈடுபடுத்தல், ஏற்கனவே உள்ள காணிகளின் உற்பத்தி விளைவுப் பெருக்கத்தை அதிகரித்தல், அதேபோன்று குடிநீர்த் தேவைகளைப் பூர்த்தி செய்தல் மற்றும் மன்னார் மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கு தீர்வாக தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள பஹல மல்வத்து ஓயா பல்நோக்கு அபிவிருத்தி கருத்திட்டம். முதலான கருத்திட்டங்களை துரிதப்படுத்துவதற்காக ரூபா 5,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.

Ø அணைக்கட்டுகள் மற்றும் வாவிகளை புனரமைத்தல்: சேனாநாயக்க சமுத்திரத்தின் வாண் கதவுகளை புனரமைக்கும் பணிகளை துரிதமாக ஆரம்பித்தல் உள்ளிட்ட கல்ஓயா, இராஜாங்கனய ஓயா, ஹுறுலு வாவி, மின்னேரியா வாவி உள்ளிட்ட வாவிகள் மற்றும் அணைக்கட்டுகளின் புனரமைப்பு பணிகளுக்காக ரூபா 6,500 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது.

Ø சிறிய குளங்கள், வாய்க்கால்கள், அருவித்தொடர் முறைமையை மேம்படுத்துதல் மற்றும் ஏனைய புனரமைப்பு நடவடிக்கைகளுக்காக ரூபா 8,350 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் 650 குளங்கள் மற்றும் 350 கிலோமீற்றர் வாய்க்கால்கள் புனரமைப்புச் செய்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

25.2 நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்தல்

Ø நகர வெள்ளப்பெருக்கை கட்டுப்படுத்துவதற்கு நிலைபேறான தீர்வொன்றுக்கான தேவை இனங்காணப்பட்டிருப்பதுடன், இதற்காக குறுகியகால, மத்தியகால அதேபோன்று நீண்டகால வேலைத்திட்டங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக வெள்ளப்பெருக்கு காரணமாக அவதியுறும் கொழும்பு, கம்பஹா, காலி, அம்பாறை, மன்னார், புத்தளம் ஆகிய நகரங்கள் சார்ந்ததாக ஏற்படுகின்ற வெள்ளப்பெருக்கு அச்சுறுத்தலுக்கு துரித தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க வேண்டியுள்ளது. இதற்காக குறுகியகால மற்றும் நடுத்தர தீர்வொன்றாக நீர்ப்பாசன திணைக்களம், நகர அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களுடன் இணைந்து ஒருங்கிணைந்த திட்டமொன்றை வகுத்து அதனை மத்தியகால வரவு செலவுத்திட்ட பணிச்சட்டத்தினுள் இருந்துகொண்டு அமுல் செய்வதற்கு யோசனை முன்வைக்கப்படுகின்றது. இத்திட்டத்தை தயாரிப்பதற்கும் அமுல் செய்வதற்கும் இவ் வரவுசெலவுத் திட்டத்தின் மூலம் ரூபா 250 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø வெள்ளப்பெருக்கை முகாமை செய்வதற்கு முறையான திட்டமொன்று இல்லாது இருப்பதன் காரணமாக இரத்தினபுரி, களுத்துறை மற்றும் மாத்தறை பிரதேசங்களைச் சேர்ந்த மக்கள் பெரும் அசௌகரியத்திற்கும் சிரமங்களுக்கும் ஆளாகின்றனர். எனவே, கிங்கங்கை மற்றும் களுகங்கை ஆகிய நதிகளின் வெள்ளப்பெருக்கை முகாமை செய்வது தொடர்பாக முறையான சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொள்வதற்கான தேவை எழுந்துள்ளது. உத்தேச இவ்வேலைத் திட்டத்தின் மூலம் வளவ கங்கைக்கு மேலதிக நீரை அனுப்புவதற்கு மேலதிகமாக தற்சமயம் இரத்தினபுரி மற்றும் களுத்தறை மாவட்டங்களில் காணப்படுகின்ற வெள்ளப்பெருக்கு பிரச்சனைக்கும் பொருத்தமான தீர்வொன்றைப் பெற்றுக் கொடுப்பதற்கும் முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø மாத்தறை நில்வளா கங்கைக்கு குறுக்காக 2022 ஆம் வருடத்தில் முடிக்கப்பட்ட உவர்நீர் தடுப்பு காரணமாக தற்சமயம் பல்வேறு தரப்பட்ட சிக்கல்களும் பிரச்சனைகளும் எழுந்துள்ளன. இது இப் பிரதேசத்தில் வாழும் மக்களின் வாழ்வாதாரங்களுக்கும் அதேபோன்று கமத்தொழிலில் ஈடுபட்டுள்ள மக்களுக்கும் பாரிய தாக்கத்தை செலுத்தியுள்ளது. இது சம்பந்தமாக ஏற்கனவே ஆய்வொன்று ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. எனவே, அந்த ஆய்வின் மூலம் கண்டறியப்படுகின்ற தீர்வுகளை அமுல் செய்வதற்கு ரூபா 1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது. அதேபோல் இவ் வெள்ள அனர்த்த்தின் காரணமாக பயிர்ச்செய்கைக்கு ஏற்பட்ட சேதங்கள் மற்றும் விவசாயம் செய்வதற்கு முடியாமல் போன வயல்களுக்கு நட்டஈடு வழங்குவதற்காக ரூபா 1,200 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø களுகங்கை கலிமுகம் சார்ந்த கடலரிப்பை தடுத்தல், களப்பு தடைப்படுதல் மற்றும் அடித்துச் செல்லப்படுகின்ற பொருட்கள் தேங்கி நிற்பதனால் தடைப்பட்டிருந்த மீனவ கைத்தொழிலை வழமைக்கு கொண்டு வருவதற்கும் களுத்துறை கடற்கரை சார்ந்த சுற்றுலா கைத்தொழிலை மேம்படுத்துவதற்கும் பிரச்சனைகளுக்கு துரிதமானதும், நடைமுறைச் சாத்தியமானது, நிரந்தரமானதுமான தீர்வுகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு அவதானத்தை கட்டுப்படுத்துவதற்காக கிரான் பாலத்தையும், பொண்டுக்கள் சேனை பாலத்தையும் நிர்மாணிப்பதற்குத் தேவையான ஆரம்ப கட்ட ஆய்வுகளை மேற்கொள்ளும் பொருட்டு ரூபா 500 மில்லியன் நிதியை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சுக்கு ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

25. குடிநீர் வழங்கலை மேம்படுத்தல்

குடிநீர் வழங்கல் மூலம் இதுவரை குடிநீர்த் தேவையில் 65% வீதம் மாத்திரமே பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. சுத்தமான குடிநீரைப் பெற்றுக் கொள்வதற்கான வழிகள் காணப்படாமை மக்கள் எதிர்நோக்கும் முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. புதிய நீர்வழங்கல் திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன், தறபோது முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கருத்திட்டங்கள் துரிதமாக பூர்த்தி செய்யப்படும். கம்பஹா, களுத்துறை, அநுராதபுரம், கண்டி,யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் குருணாகல் முதலான மாவட்டங்களை உள்ளடக்கியதாக சமுதாய நீர்வழங்கல் கருத்திட்டமாக குடிநீர் வழங்கல் கருத்திட்டங்களை செயற்படுத்துவதற்கு ரூபா 85,700 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், தனியார்துறையுடன் இணைந்து, குடிநீர் வழங்கலுக்குத் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளைச் செயற்படுத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

Ø கொழும்பு மாவட்டத்தில் நகர குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதற்கு அம்பத்தலேயில் புதிய நீர்வழங்கல் முறைமையொன்றை நிர்மாணிப்பதற்கும், கொலொன்னாவை மற்றும் நுகேகொடை – ஜுபிலிகணு ஆகிய பிரதேசங்கள் உட்படுமாறு புதிய நீர்வழங்கல் முறையை இற்றைப்படுத்தி புதிய நீர் வழங்கலை மேற்கொள்வதற்கும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் நீர்ப்பற்றாக்குறை காரணமாக அவதியுறும் மக்களின் குடிநீர் தேவையைப பூர்த்தி செய்வதற்கும், உற்பத்திப் பொருளாதாரத்தை இலக்காகக் கொண்ட கைத்தொழிலினை மேம்படுத்துவதற்கும் புதிய நீர் வழங்கல் கருத்திட்டமொன்றை லுணுகம்வெஹெர பிரதேசத்தில் நிர்மாணிப்பதற்கும் ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

Ø அம்பாந்தோட்டை அபிவிருத்திக்கு 2040 ஆம் வருடமாகும் போது நாளாந்த நீர்த்தேவை சுமார் 300,000 கன மீற்றர்களாக இருக்குமென மதிப்பிடப்பட்டுள்ளது. தற்சமயம் இப் பிரதேசத்தின் நாளாந்த நீர்வழங்கல் சுமார் 90,000 கனமீற்றர் என்பதுடன், இந்த நீர்த்தேவை லுணுகம்வெஹெர, வளவகங்கை, கிரிந்தி ஓயா, கச்சிகல் ஆறு, கிரம ஓயா, ஊறுபொக்க ஓயா ஆகிய நீர் மூலங்களிலிருந்து பெற்றுக் கொள்ளப்படுகின்றது. தற்சமயம் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆரம்ப கட்ட ஆய்வுகளுக்கமைய இந்த நீர்மூலங்கள் சார்ந்ததாக ஏதேனும் முதலீடொன்றைச் செய்து அபிவிருத்தி செய்வதனூடாக நாளொன்றுக்கு சுமார் 100,000 கனமீற்றர் நீரை துரிதமாகப் பெற்றுக்கொள்ள முடியுமென்பதுடன், இது எதிர்வரும் காலங்களில் எழக்கூடிய நீர்த்தேவையை பூர்த்தி செய்வதற்கு உறுதுணையாக அமையும். எனவே, இது சம்பந்தமாக பூரண சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொண்டு அபிவிருத்தி தேவைகளை துரிதமாக இனங்கண்டு அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

26. நிலைபேறான உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி

26.1 பொதுப் போக்குவரத்து

தற்போதைய பொதுப் போக்குவரத்துத் துறை பல்வேறு பிரச்சனைகளுக்கு முகங்கொடுத்திருக்கிறது. ஒட்டுமொத்த போக்குவரத்து முறைமையில் காணப்படுகின்ற வினைத்திறனின்மை, போதிய வசதிகள் காணப்படாமை, போக்குவரத்து முறைமையில் காணப்படுகின்ற பாதுகாப்பற்ற தன்மை முதலான காரணிகள் பயணிகள் தொடர்ந்தும் பொதுப் போக்குவரத்திலிருந்து தூரமாவதற்கு காரணமாக அமைந்துள்ளது. “பொதுமக்கள் போக்குவரத்துச் சேவை – வினைத்திறன் மிக்க பயணமுடிவு” என்ற அரசாங்கத்தின் நீண்டகால நோக்கை அடைவதற்கு வினைத்திறன் மிக்கதும் நிலைபேறானதுமான பயணிகள் போக்குவரத்து முறைமையொன்றை ஏற்படுத்துவதே தற்போதய அரசாங்கத்தின் முதன்மை எதிர்பார்ப்பாகும். இதற்காக இவ்வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ரூபா 67,200 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது. இதன் கீழ் பிரதானமாக பின்வரும் கருத்திட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படும்.

Ø பொதுப் போக்குவரத்துத் துறையை பலப்படுத்தும் பொருட்டு தூர பயணச் சேவைகளுக்காக 600 பஸ் வண்டிகள் இலங்கைப் போக்குவரத்து சபை மூலம் போக்குவரத்துக்கு ஈடுபடுத்தப்படவுள்ளது. இதன் ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்கு ரூபா 3,600 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø அதேபோன்று, 307 இலங்கை போக்குவரத்து சபை பஸ் வண்டிகளின் பழுதடைந்த எஞ்சின்களை மீள் நிறுவுவதற்காக அடுத்த வருடத்திற்கு ரூபா 2,062 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது. 

Ø இலங்கை போக்குவரத்துச் சபை டிப்போ மற்றும் வேலைத் தலங்களுக்குத் தேவையான கருவிகள், இயந்திரோபகரணங்கள் மற்றும் உபகரணங்களைப் பெற்றுக்கொள்வற்காக ரூபா 790 மில்லியன் நிதி ஒதுக்கப்படுகின்றது என்பதையும் இவ்விடத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்.

Ø இலங்கை புகையிரதச் சேவையை தொடர்ந்தும் வினைத்திறன் மிக்கதும் மக்கள் நேசம் கொண்டதுமான சேவையொன்றாக மாற்றுவதை நோக்காகக் கொண்டு இலங்கை புகையிரதத் திணைக்களத்திற்கு புதிய 05 எஞ்சின் தொகுதிகளை பெற்றுக் கொள்வதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகளுக்கு ரூபா 3,300 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், புகையிரதப் பயணிகளுக்கு இலத்திரனியல் பயணச்சீட்டுகளை விநியோகித்தல் உள்ளிட்ட புகையிரதச் சேவையை டிஜிற்றல் மயப்படுத்தும் ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

·        மேலும், நாட்டில் ஒரு சில வீதிகளில் ஓடும் பஸ் வண்டிகளுக்கு போதிய வருமானம் கிடைக்காமை காரணமாக தனியார்துறை போக்குவரத்து சேவைகளை வழங்குவோர் தமது பஸ் வண்டிகளை அவ் வீதிகளில் செலுத்துவதை மட்டுப்படுத்துகின்றார்கள் என்பது தெரிகின்றது. இதன் காரணமாக அக்கிராமப்புற பிரதேசங்களில் உள்ள பயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். எனவே, அவ்வீதிகளை முறையாக இனங்கண்டு, நிலைபேறான போக்குவரத்து சேவையொன்றை வழங்குவதற்கு பொருத்தமான வேலைத்திட்டமொன்றை வகுப்பதற்கு யோசனை முன்வைக்கப்படுவதுடன், இடைக்காலத் தீர்வொன்றாக ரூபா 2,000 மில்லியன் மேலதிக நிதியை 2026 ஆம் வருடத்திற்காக ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றோம். 

26.2 வீதி அபிவிருத்தி

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து பெரும்பாலான வீதி அபிவிருத்தி கருத்திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டன. இதன் காரணமாக பல்வேறு பிரச்சனைகளை எதிர்நோக்க நேரிட்டது. அக்கருத்திட்டங்களில் காணப்படுகின்ற பிரச்சனைகளுக்குத் தீர்வுகண்டு மீண்டும் அவ்வீதி அபிவிருத்திக் கருத்திட்டங்களை ஆரம்பிப்பதற்கு நாங்கள் நடவடிக்கை எடுத்தோம். ஒட்டுமொத்த வீதி அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கும் 2026 ஆம் வருடத்திற்கு ரூபா 342,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில் பின்வரும் கருத்திட்டங்கள் அடங்கும்.

Ø மத்திய அதிவேகப் பாதையின் முதலாம் கட்டம்

இடைநிறுத்தப்பட்டிருந்த அதிவேக வீதிகளுள், குறிப்பாக மத்திய அதிவேக வீதியின் கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியை நிர்மாணிப்பதற்காக தேவையான நிதி வசதிகளைப் பெற்றுக் கொள்ளும் பொருட்டு தற்சமயம் தீர்மானத்திற்கு வந்துள்ளதுடன், கடவத்தை – மீரிகமை வீதிப் பகுதியின் அபிவிருத்திப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 66,150 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø மத்திய அதிவேகப் பாதையின் மூன்றாம் கட்டம்

மத்திய அதிவேக வீதியின் பொத்துஹெர தொடக்கம் கலகெதர வரையிலான மூன்றாம் கட்டத்தின் பொத்துஹெர தொடக்கம் றம்புக்கனை வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளை 2027 வருடத்தின் முதல் காலாண்டில் பூர்த்தி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூபா 10,500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், மூன்றாம் கட்டத்தின் றம்புக்கனை தொடக்கம் கலகெதர வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகளுக்கு அரச நிதியை ஈடுபடுத்துவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டு, உள்ளூர் நிதியின் கீழ் இதனை ஆரம்பிப்பதற்கு யோசனை முன்வைக்கின்றோம். இதற்காக, வீதி அபிவிருத்தி அதிகார சபை பெற்றுள்ள கடன் தொகையில் அடுத்தடுத்த ஆண்டுகளில் செலுத்தவேண்டிய கடன் தொகையில் ஒரு பகுதி இவ்வருடத்தில் செலுத்தி முடிக்கப்பட்டதன் காரணமாக, அடுத்த வருடத்தில் மீதமாகும் நிதியையும் மேலும் மேலதிக நிதிகளும் அடங்கலாக ரூபா 20,000 மில்லியன் நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

Ø கட்டுகஸ்தோட்டை – கலகெதர வீதிப் பகுதி

அத்துடன், கட்டுகஸ்தோட்டை தொடக்கம் கலகெதர வகையிலான வீதிப் பகுதியையும் விஸ்தரிப்பதற்கு தேவையான ஆய்வுகளை அடுத்த வருடம் ஆரம்பிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதேபோன்று கண்டி பல்நோக்கு போக்குவரத்து மத்திய நிலையத்தை நிர்மாணிப்பதற்கு சமாந்தரமாக கண்டி நகருக்கு பிரவேசிப்பதற்கான ஒரு சில வீதிகளை விஸ்தரிப்பதற்கும் மேம்படுத்துவதற்கும் இம்முறை வரவுசெலவுத்திட்டத்தின் மூலம் நிதி ஒதுக்கப்பட்டிருப்பதுடன், இதன் மூலம் கண்டி நகரில் காணப்படுகின்ற வாகன நெரிசலை ஓரளவிற்கேனும் குறைப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. 

Ø குருநாகல் – தம்புள்ளை உத்தேச அதிவேகப் பாதை

குருநாகல் தொடக்கம் தம்புள்ளை வரையிலான உத்தேச அதிவேக வீதிக்கான காணி எடுத்துக் கொள்ளல் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இக் காணி கையகப்படுத்தல் பணிகளை பூர்த்தி செய்யும் பொருட்டு ரூபா 1,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹத்துடுவை தொடக்கம் இங்கிரிய வரையிலான முதலாம் கட்டம்

ருவன்புர அதிவேக நெடுஞ்சாலையின் கஹத்துடுவை தொடக்கம் இங்கிரிய வரையிலான 25 கி.மீ. வீதிப் பகுதியின் நிர்மாணப் பணிகள் அங்கும் இங்கும் சீரற்ற விதத்தில் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து இந்நிர்மாணப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு பகுதியளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்மாணப் பணிகள் காரணமாக பிரதேச மக்கள் பாரிய பொருளாதார, சமூக மற்றும் சுற்றாடல் பிரச்சனைகளை எதிர்நோக்குகின்றனர். எனவே, இவ்வீதிப் பகுதிக்காக 2018 ஆம் வருடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சாத்தியவள ஆய்வை மீண்டும் மீளாய்விற்குட்படுத்தி அதன் மூலம் கிடைக்கப்பெறுகின்ற தகவல்களை பகுப்பாய்வு செய்ததன் பின், கஹத்துடுவை தொடக்கம் இங்கிரிய வரையிலான தற்போதுள்ள பிரவேச வீதியை அபிவிருத்தி செய்வது தொடர்பில் தொடர்ந்தும் கவனத்திற்கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், இவ்வதிவேக வீதியின் காணி கையகப்படுத்தும் பணிகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதுடன், இதற்காக ரூபா 1,500 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

Ø உயர்த்தப்பட்ட துறைமுக நுழைவு அதிவேக வீதியிலிருந்து மரைன் டிரைவ் (Marine Drive) நீடிப்பு (கட்டம் 2) வரை இணைப்பு வீதியை நிர்மாணிப்பது தொடர்பான சாத்தியவள ஆய்வை மேற்கொள்ளல்

கொழும்பு துறைமுகத்திற்கும், துறைமுக நகரத்திற்கும் இடையில் வீதி இணைப்பை ஏற்படுத்துவதை நோக்காகக் கொண்டு உயர்த்தப்பட்ட அதிவேக வீதி நிர்மாணக் கருத்திட்டத்தின் கீழ் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருவதுடன், இவ்வதிவேக வீதி தேசிய வீதி முறைமையுடன் இணைக்கப்படுவதைத் தொடர்ந்து கொழும்பு காலிமுகத்திடல் சார்ந்ததாக லோட்டஸ் சுற்றுவட்டம் பிரதேசத்திலும் அண்டிய பிரதேசங்களிலும் வாகன நெரிசல் கட்டுப்படுத்தப்படுமென எதிர்பார்க்கப்படுகின்றது. வாகன நெரிசலை குறைக்கும் உபாயவழியாக நிர்மாணிக்கப்படும் உயர்த்தப்பட்ட துறைமுக நுழைவு அதிவேக வீதியின் துறைமுக நகர முடிவு எல்லையிலிருந்து மரைன் டிரைவ் வரை இணைப்பு வீதியொன்றை நிர்மாணிப்பது தொடர்பில் சாத்தியவள ஆய்வொன்றை மேற்கொள்வதற்கு ரூபா 330 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

26.3 வீதி விபத்துக்களைக் குறைப்பதற்காக பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்தல்

அண்மைக்காலமாக வீதி விபத்துகள் துரிதமாக அதிகரித்து வருவதுடன், அவற்றுள் பெரும் எண்ணிக்கையிலான வீதி விபத்துக்கள் உயிராபத்தை ஏற்படுத்தக் கூடியவை என்பது அவதானிக்கப்படுகின்றது. இலங்கை பொலிஸ் வீதி விபத்துக்கள் அறிக்கைக்க​ அமைய 2024 ஆம் வருடத்தில் 24,589 வீதி விபத்துக்கள் அறிக்கையிடப்பட்டுள்ளன. இதில் 2,262 உயிராபத்து விபத்துக்கள் ஆகும். இவ் விபத்துக்கள் காரணமாக 2,368 உயிர்கள் இழக்கப்பட்டுள்ளன. இவ் வீதி விபத்துக்கள் பொதுமக்களுக்கு மோசமான பாதிப்புக்களை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்தமாக நோக்கும் போது தேசத்திற்கு குறிப்பிடத்தக்க பொருளாதார நட்டங்களையும் ஏற்படுத்துகின்றன. 

வீதிகளுக்காக பாதுகாப்பு மூலோபாயங்களை உட்சேர்த்தல், பாதுகாக்கப்பட்ட வீதிப் பகுதிகளை மேம்படுத்தல் உள்ளிட்ட வீதிப் பாதுகாப்புடன் தொடர்புடைய உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்யும் நோக்குடன் பரந்த அளவிலான வீதிப் பாதுகாப்பு வேலைத் திட்டமொன்றை அமுல் செய்வதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக, மேலும், ரூபா 1,000 மில்லியன் நிதியை ஒதுக்குவதற்கு முன்மொழிகின்றோம்.

27. எரிசக்தித் துறை 

27.1 பசுமை சக்தி​​

​கௌரவ சபாநாயகர்​  அவர்களே,

கடந்த ஆண்டு செப்டெம்பரில் எமது அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததிலிருந்து, எமது நுகர்வோருக்கு சிறந்த விலையை உறுதிசெய்யும் நோக்கில், அரசாங்க பெறுகைக்காக போட்டி விலைமனுக்கோரலை அறிமுகப்படுத்த நாம் தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். இம்முயற்சியின் வெற்றியினை அண்மையில் மின்சாரத் கருத்திட்டங்களை வழங்கியதில் தெளிவாகக் அவதானிக்க முடிந்தது. முன்னைய ஆட்சியாளர்கள் மூலம் காற்றாலை மின் பிறப்பாக்க துணை மின்நிலையத்தின் 500 மெகாவாட் கருத்திட்டத்திற்கு​ கிலோவொற் மணிக்கு அ.டொ 8.26 சதம் என்ற வீதத்தில் உற்பத்தி​ செய்வதற்கு முறையான பெறுகைச் செயன்முறை இன்றி இரண்டு விலைமனுக்கோரல்கள் அளிக்கப்பட்டிருந்தன.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

அண்மையில், அதாவது 2025 ஒக்டோபர் 28 அன்று முள்ளிக்குளத்தில் இரு மின் உற்பத்திக் கருத்திட்டங்களுக்கான இரண்டு விலைமனுக்கோரல்களுக்கு அழைப்பு விடுத்த அதேவேளை, அதன் மூலம் அடையப்பெற்ற சிறந்த பெறுபேறுகளை​ இச்சபைக்குச் சமர்ப்பிப்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன். அதற்கமைய, கட்டம் 1 இற்கான 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கு, ஒரு அலகிற்கு அ.டொ 3.96 சதம் விலையிலும், கட்டம் 2 இற்கான 50 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்திற்கு, அ.டொ 3.77 சதம் விலையிலும் விலைமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதற்கு மேலதிகமாக, மன்னார் கட்டம் 1 இன் விரிவாக்க கருத்திட்டம், அதாவது 50 மெகாவாட் கருத்திட்டம், அலகொன்றிற்கு அ.டொ 4.65 சதம் என்ற கவர்ச்சிகரமான விலையில் வழங்கப்பட்டிருந்தது.

27.2 மக்களை மையப்படுத்திய எரிசக்தி மாற்றம்

தேசிய பொருளாதாரத்தையும் மக்களின் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்தும் நோக்கில், மக்களை மையப்படுத்திய எரிசக்தி மாற்றத்தை (People – Centric Energy Transition) நோக்கிய ஒரு முக்கிய படிமுறையாக, இலங்கை மின்சாரச் சட்டம் திருத்தப்பட்டதுடன் உற்பத்தி, கடத்தல், விநியோகம் மற்றும் கட்டமைப்பு நிர்வாகம் ஆகிய தொழிற்பாடுகளை கையாள்வதற்கு வெவ்வேறான நான்கு முழுமையாக அரசுக்குச் சொந்தமான கம்பனிகள் நிறுவப்பட்டன.

இலங்கை மின்சார​ சபை வெளியிட்ட 2025-2044, நீண்டகால மின் உற்பத்தித் திட்டத்திற்கமைய , அடுத்த பத்தாண்டுகளில் மின்சாரத்திற்கான தேவை சுமார் 60% அதிகரிக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

மின்சாரத்தை எவ்வாறு உற்பத்தி செய்வது என்பது குறித்து பல தசாப்தங்களாக நாம் வாதிட்டு வருகிறோம். திட்டங்கள் காலாவதியானன; பெறுகைகள் முறையாக இடம்பெறவில்லை; நிர்மாணப் பணிகள் தாமதமடைந்தன. உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் பெரும்பாலும் ஒளியூட்டுவதற்கும், மின்விசிறிப் பாவனைக்கும் மற்றும் குளிரூட்டிகளுக்காகவும் மாத்திரம் கவனம் செலுத்தப்பட்டது, ஆனாலும் இது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் என்று வாதிடலாம் என்றாலும், பொருளாதார நோக்கங்களுக்காக மின்சார நுகர்வைப் பயன்படுத்துவதில் உள்ள பின்னடைவு அப்படியே காணப்பட்டன.

நாம் இப்பொழுது மின்சாரத்தைப் பயன்படுத்தி, தேசிய பொருளாதாரத்தை புத்துயிர் பெ​றச்செய்வதற்கு புதிய துறைகளை நோக்கிச் செல்ல கவனம் செலுத்துகிறோம்; அதாவது,

1. தரவு முறைமை நிலையங்கள் (Data Centres)

2. போக்குவரத்து மின்னூட்டல் (Transport Electrification)

3. பசுமை ஐதரசன் (Green Hydrogen)

4. பசுமை அமோனியா (Green Ammonia)

போன்ற புதிய பொருளாதார வாய்ப்புகளை இலக்காகக் கொண்டு மின்சார நுகர்வை மேம்படுத்துவது அவசியமாகும். இதற்காக, நவீன திறன் தொழில்நுட்பம் மூலம் மின்சார கடத்தல் மற்றும் விநியோக கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும்.

இப்பணியை மேம்படுத்துவதற்காக, எரிசக்தி, டிஜிற்றல் மற்றும் போக்குவரத்து என்பவற்றுக்கான ஒருங்கிணைந்த பொருளாதார அபிவிருத்தி கட்டமைப்பு (Integrated Economy Development Framework) நிறுவப்படும்.

இதற்குத் தேவையான சட்டக் கட்டமைப்பை உருவாக்கும் நோக்கத்துடன், எரிசக்தி நிலைமாற்றச் சட்டம் (Energy Transition Act) அடுத்த ஆண்டுக்குள் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கின்றோம்.

28.  குறைப்பயன்பாடுடைய கட்டடங்கள் மற்றும் கட்டமைப்புகளை உற்பத்தித்திறன்மிக்கதாகப் பயன்படுத்​தல்

பல்வேறு அரச நிறுவனங்களால் நிர்மாணிக்கப்பட்டு தற்போது கைவிடப்பட்டுள்ள அல்லது பகுதியளவு முடிக்கப்பட்டு முறையாகப் பயன்படுத்தப்படாமல் 2,700 இக்கும் மேற்பட்ட கட்டடங்கள் இருக்கின்றமை தெரிய வந்துள்ளது. கல்விசார் கட்டடங்கள், மருத்துவமனைகள், ஆடைத் தொழிற்சாலைகள், தொழிற்பயிற்சி நிலையங்கள், சமூக அரங்குகள், சேவை மையங்கள் மற்றும் பல்நோக்கு கட்டடங்கள், களஞ்சியசாலைகள், கலா​சார நிலையங்கள் மற்றும் ஏனைய கட்டடங்கள் என அவை அடையாளம் காணப்பட்டுள்ளன.

அரசாங்க-தனியார் பங்குடமை மூலம், இப்பயன்படுத்தப்படாத கட்டடங்கள் அல்லது கட்டமைப்புகள் போன்றவற்றை மேம்படுத்தி ஹோட்டல்கள், வணிக மையங்கள், தொழிற்சாலைகள் அல்லது வேறு நோக்கங்களுக்காக வருமானம் ஈட்டும் திட்டங்களுக்காக பயன்படுத்துதல் தொடர்பாக ஆராய்ந்து, அதற்கமைய, இவ்வளங்களை உற்பத்திறன்மிக்கதாக பயன்படுத்துவதற்கு தேவையான திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

அதற்கமைய, கடந்த காலத்தில் சரியான சாத்தியவள ஆய்வுகள் இன்றி அதிக செலவில் நிர்மாணிக்கப்பட்ட இக்கட்டமைப்புகள், அவை வீணடிக்கப்படாது, அழிவடையாதிருக்க பொருத்தமான பயன்பாட்டிற்கு கொண்டு வருவதன் ஊடாக இம்முதலிடுகளுக்கு பெறுமதி சேர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

29. வழங்கல் சங்கிலியை மேம்படுத்தல்

29.1 துறைமுகங்களில் கொள்கலன் தொழிற்பாடுகளை மேம்படுத்த உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல்

இலங்கை அதன் கேந்திர முக்கியத்துவம் மிக்க அமைவிடத்தைப் பயன்படுத்தி துறைமுக வழங்கல் சேவையில் (Port Logistics) பிராந்தியத்தில் முன்னோடியாக  விளங்குவதற்கு குறிப்பிடத்தக்க வாய்ப்புக்களை கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கியின் உதவியுடன் மேற்கு கொள்கலன் முனையம் கட்டம் 2 திட்டம், உலக வங்கி உதவியுடன் உத்தேச துறைமுக வழங்கல் சேவை மையங்கள் (Port Logistics Centers) என்பவற்றுக்கான சாத்தியவள ஆய்வுகள் மற்றும் முன்மொழியப்பட்ட கொழும்பு வடக்கு துறைமுக அபிவிருத்தி கருத்திட்டம் உள்ளடங்கலாக முக்கிய அபிவிருத்தி முயற்சிகள் ஊடாக, எதிர்வரும் ஆண்டில் கொழும்பு துறைமுகத்தின் இயளளவை மேம்படுத்தி, தொழிற்பாட்டுத் வினைத்திறனை மேம்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, கெரவலப்பிட்டி சுங்க உறுதிப்படுத்தல் மையம் மற்றும் புளூமெண்டல் வர்த்தக வசதி மையம் ஆகியவை நிறுவப்படும்.

இலங்கையின் துறைமுகங்களை பிராந்தியத்தில் முன்னணி வழங்கல் சேவை அமைவிடமாக நிறுவுவதற்கு தேவையான உட்கட்டமைப்பு அபிவிருத்திற்கு மேலதிகமாக, இதில் தங்குதடையற்ற மற்றும் வினைதிறன்மிக்க துறைமுக தொழிற்பாடுகளை உறுதிசெய்யும் பொருட்டு ஒருங்கிணைந்த தரவு முகாமைத்துவ முறைமையான துறைமுக சமூக முறைமையை (Port Community System) செயற்படுத்துவது உள்ளடங்கலாக துறைமுக தொழிற்பாடுகளின் டிஜிற்றல்மயமாக்கல் மற்றும் தானியங்குமயமாக்கல் மேம்படுத்தப்படும்.

29.2  விமான நிலைய தொழிற்பாடுகளை மிகவும் வினைதிறன்மிக்கதாக்க உட்கட்டமைப்பு வசதிகளை அபிவிருத்தி செய்தல் (விமானச் சரக்கு மையம்)

பொருளாதார மந்தநிலை மற்றும் ஏனைய காரணிகளால் ​இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமான நிலைய அபிவிருத்தியின் இரண்டாம் கட்ட கட்டுமானம் 2026 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் ஆரம்பிக்கப்படும். யப்பானின் ஜய்கா (JICA) நிறுவனம் ஏற்கனவே இதற்கான நிதி வசதிகளை வழங்க இணங்கியுள்ளது.

ஸ்ரீலங்கன் ஏயார்லைன் நிறுவனத்தின் சரக்கு முனையம் மற்றும் சரக்கு கையாளும் வசதியின் விரிவாக்கம் உள்ளடங்கலாக தொடர்ச்சியான வளர்ச்சி நடவடிக்கைகளுடன், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் விமான சரக்குகளுக்கான பிராந்திய மையமாக தோற்றம்பெறுதை நோக்கி நகருகின்றது.

எனினும், விசேடமாக குளிர்பதனச் சங்கிலி முறைமையில் (Cold Chain System) குறைபாடு, போதிய களஞ்சியக் கொள்ளளவு இன்மை மற்றும் காலாவதியான முறைமை என்பன காரணமாக விமான சரக்கு துறையின் முழுத் திறனையும் அடைவதில் உள்ள சவால்களை சமாளிப்பதற்கு விமான சரக்குப் பிரிவை முழுமையான உள்ளார்ந்த ஆற்றலை பயன்படுத்துவதற்கும் அதேபோன்று தொழிற்பாட்டுத் வினைத்திறன் மற்றும் நிதியியல் உறுதிப்பாட்டை உறுதிசெய்வதறகும் அரசாங்க தனியார் பங்குடமை முறை ஊடாக (PPP) புதிதாக கட்டப்பட்ட சரக்கு முனையத்தில் விமான சரக்குகளைக் கையாளத் தேவையான குளிர்பதன களஞ்​சியசாலை போன்ற மேம்பட்ட வசதிகளை வழங்குவதற்கு முன்மொழிகின்றோம்.

30. நகர அபிவிருத்திக்கான புதிய அணுகுமுறை

Ø  முறையான ஆய்வு மற்றும் திட்டமிடல் இன்றி, முன்னுரிமையளிக்காது, முறைசாரா முறையில் நகர அபிவிருத்தித் கருதிட்டங்கள் நடைமுப்படுத்தப்பட்டுள்ள அதேவேளை, இதனூடாக எதிர்பார்த்த பயன்களை அடைய முடியாமல் போனது. எனவே, 2026 முதல், நகர அபிவிருத்திச் செயன்முறை முறையான திட்டத்திற்கமையவும், சரியான ஆய்வுகளுடனும் மேற்கொள்ளப்படும். வினைதிறன்மிக்க, நிலைபேறான, சுற்றுலா மற்றும் முதலீடு என்பவற்றை ஈர்ப்பதனுடன் இணைந்த நகர அமைப்பை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படும். யாழ்ப்பாணம், எஹெலியகொடை, மட்டக்களப்பு, சிலாபம், மாத்தறை உள்ளடங்கலாக தீவு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 10 நகரங்களின் சாத்திய வளங்களை அடையாளங்காணும் ஆரம்ப பணிக்காக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்ட அதேவேளை தேவை மற்றும் முன்னேற்றத்திற்கு ஏற்ப வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

Ø  மாத்தளை நகருக்குள் நுழையும் போது தற்போதுள்ள நெரிசலைக் குறைக்க, பாதைகளின் எண்ணிக்கையை 4 பாதைகளாக விரிவுபடுத்தவும், தேவையான காணிகளை கையகப்படுத்தவும், நகரத் திட்டத்தைத் தயாரிக்கவும் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும். ஹட்டன் நகரில் நிலவும் அதிக போக்குவரத்து நெரிசலுக்கு பொருத்தமான தீர்வுகளை வழங்குவதற்கு 2026 ஆம் ஆண்டில் அவசியமான நகரத் திட்டம் தயாரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்ற அதேவேளை, அங்கு தற்போதுள்ள போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு குறுகியகால துரித தீர்வை வழங்கவும் முன்மொழியப்பட்டுள்ளது. இதற்காக, இவ்வாண்டு வரவுசெலவு திட்டத்திலிருந்து ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம்.

Ø  இரத்தினபுரி நகரம் தொடர்பில் விசேட கவனம் செலுத்தி, பழைய நகரத்தில் அமைந்துள்ள அரசாங்க உத்தியோகபூர்வ வதிவிடங்களை புதிய நகரப் பகுதிக்கு இடம்மாற்ற முன்மொழியப்பட்டுள்ளது. நீண்டகால வதிவிட தேவைகளை பூர்த்திசெய்வதற்கு இதுபோன்ற இடமாற்றம் பயனுள்ளதாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். இதற்காக, நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் இவ்வாண்டு வரவுசெலவு திட்டத்திலிருந்து ரூபா 500 மில்லியன் நிதியை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம்.

30.1 உள்ளூராட்சி நிறுவனங்களுக்கான கழிவு முகாமைத்துவ வசதிகள்

நகரமயமாக்கல் முன்னேற்றமடைவதன் மூலம் முறையான கழிவு முகாமைத்துவம் உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு ஒரு சவாலாக மாறியுள்ளது. திண்மக்கழிவுகளை முறையற்ற விதத்தில் அகற்றுவதால், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பாதிப்புகள், விலங்குகளுக்கு இன்னல்கள் மற்றும் பொதுமக்கள் முறைப்பாடுகள் போன்ற பிரச்சினைகள் மென்மேலும் தீவிரமடைந்து வருகின்றன.

இப்பிரச்சினைக்கு தீர்வுகாணும் விதத்தில், 2026 வரவுசெலவுத் திட்டத்தில், சூழல் நேயமிக்க, செலவுச் சிக்கனமான மற்றும் சுகாதாரமான திண்மக்கழிவகற்றல் வாகனங்கள் (compactor), டராக்டர்கள், பெட்டிகள் போன்ற உபகரணங்ளை உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு வழங்க நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன். 2025 இல் மீதமான மூலதனச் செலவு மூலம் ரூபா 8,000 மில்லியன் ஒதுக்கீட்டில் 700 இயந்திர உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான பெறுகைச் செயன்முறை ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.

அதற்கமைய, திண்மக்கழிவுகளை முறையாக அகற்றுவதற்கும், பராமரிப்பதற்கும் வாகனங்கள் மற்றும் உபகரணங்களை வழங்குவதற்காக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கீழ் திண்மக்கழிவு முகாமைத்துவத்தை செயல்படுத்துவதற்காக, ரூபா 900 மில்லியன் நிதி ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

30.2 உள்ளூராட்சி நிறுவனங்களின் செலவுகளைத் தீர்த்தல் (பிரதேச அபிவிருத்தி)

உள்ளூராட்சி நிறுவனங்கள் சுயாதீன அதிகாரங்களைக் கொண்ட நிறுவனங்களாகும், ஆனால், அவை சம்பளம் செலுத்துவதற்கும் கூட பொது திறைசேரியை சார்ந்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பொதுத் திறைசேறியிலிருந்து சம்பளம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை வழங்கும்போது, மதிப்பீட்டில் இருந்து 20% மற்றும் 40% வீதத்தைக் கழிப்பதன் மூலம் தற்போதுள்ள ஏற்பாடுகளை வழங்கும் முறைக்கு பதிலாக ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்த முன்மொழிகின்றோம்.

அதற்கமைய, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் ஊடாக அண்மையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில், உள்ளூராட்சி நிறுவனங்களின் வருமானம் மற்றும் உண்மையான செலவினங்களைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு உள்ளூராட்சி நிறுவனத்திற்கும் அரசாங்க பங்களிப்பை வழங்கும் முறையான வழிமுறையை ஆரம்பிப்பதற்கு முன்மொழிகின்றோம்.

இவ்வாறு செய்வதன் மூலம், எந்தவொரு உள்ளூராட்சி நிறுவனத்திலும் வரவுசெலவு பற்றாக்குறை ஏற்பட்டால், அதை ஈடுசெய்ய மூலதனச் செலவினங்களுக்கு ஒதுக்கீடுகள் வழங்கப்படும்.

2026 வரவுசெலவுத் திட்டத்தின் மூலம், உள்ளூராட்சி நிறுவனங்களை வலுப்படுத்துதல், உள்ளூராட்சி நிறுவனங்களின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் வருமானம் ஈட்டல் நிகழ்ச்சித்திட்டத்திற்கு ரூபா 2,500 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

30.3 தெரு நாய்களின் பாதுகாப்பு செல்லப் பிராணிகளை அடக்கம் செய்தல்/ தகனம் செய்தல் சேவைகள் மற்றும் வசதிகளை அறிமுகப்படுத்தல்

நகர மற்றும் புறநகரப் பிரதேசங்களில் வாழ்க்கை முறை மாற்றம் பெற்றுள்ளதைத் தொடர்ந்து, செல்லப் பிராணிகளை வளர்க்கும் போக்கு வேகமாக வளர்ந்துவருகிறது. இதனுடன், செல்லப்பிராணிகள் இறக்கும் போது அவற்றை அடக்கம்செய்தல் அல்லது தகனம்செய்தல் ஒரு பிரச்சனையாக மாறியுள்ளது. எனவே, கௌரவமானதும் சூழல் நேசம் கொண்டதுமான பொறுப்புவாய்ந்த மாற்றுவழிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.

அதேபோன்று, நகர்ப்புறங்களில் பரவலாகக் காணப்படும் தெரு நாய்கள் மற்றும் செல்லப் பிராணிகளைப் பராமரிப்பதற்கான முறையொன்றை உள்ளூராட்சி அதிகாரசபைகளுடன் இணைந்து உருவாக்குவதன் மீது கவனம்​ செலுத்தப்பட்டுள்ளது

இத்தேவையை நிவர்த்தி செய்வதற்காக, செல்லப்பிராணிகளை அடக்கம்செய்தல், தகனம் செய்தல் மற்றும் தெரு நாய்களை பராமரிப்பதற்கான சேவைகளை வழங்குவதை ஊக்குவிக்கும் நோக்கில் கெஸ்வை மற்றும் பிலியந்தலை உள்ளூராட்சி அதிகார​சபைகளில் முன்னோடித் கருதிட்டமொன்றை செயற்படுத்த ரூபா 100 மில்லியன் நிதியை ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம்.

​31. சகலருக்கும் பாதுகாப்பான உறைவிடம்

ஒவ்வொரு குடிமகனினதும் ஆவல் “தலைக்கொரு நிழல்; மனதிற்கு ஆறுதல்” என்பதாகும். பாகுபாடின்றி ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்வதற்கு உகந்த வாழ்விடமொன்று இருப்பது அடிப்படை மனித உரிமையாகும். வீடொன்றிற்காக தமது வாழ்நாள் முழுதும் அளவிலா துயரம் அனுபவிக்கும், பெருமூச்சு விடும் மனிதர்கள் இந்நாட்டில் உள்ளனர். எமது நாட்டு மக்களின் வாழ்வுக்கு ஆறுதலைக் கொண்டுவரும் எனும் எதிர்பார்ப்புடன் நாம் வீடொன்றுக்கான கனவை நனவாக்கும் செயற்பாட்டினை ஆரம்பிக்கின்றோம்.

வீட்டுப் பிரச்சினை எழுவதற்கு பல காரணிகள் தாக்கம் செலுத்துகின்றன. அவற்றுள் வறுமை, போதிய வருமானமின்மை, காணிப் பற்றாக்குறை, கட்டுமானச் செலவினம் அதிகரித்தல், குடிபெயர்வு, முறையற்ற நகரமயமாக்கல், இடம்பெயர்வு மற்றும் இயற்கை அனர்த்தம் முதலான பல்வேறு காரணிகள் காணப்படுகின்றன. இவ்வாறான வீட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் சகல தரப்பினர்களையும் உள்ளடக்கியதாக புதிய அணுகுமுறைக்கு அமைய, வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டமொன்றினை 2026 ஆண்டிலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கின்றோம். அவ்வேலைத் திட்டத்தின் கீழ், தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடுகள் அடங்கலாக 27,000 புதிய வீடுகளின் கட்டுமானப் பணிகளைப் பூர்த்தி செய்வதற்கு எதிர்பார்க்கின்றோம்.

31.1 குறைந்த வருமானம் பெறுபவர்களின் மற்றும் நகரமயமாக்கல் மூலம் ஏற்படும் வீட்டுவசதிப் பிரச்சினைகளைத் தீர்த்தல்

Ø  குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் வீட்டுவசதிப் பிரச்சினைகளுக்கு தீர்வாக, அடுத்த ஆண்டு முதல் “தமக்கெனதோர் இல்லம் – அழகான வாழ்க்கை” வீட்டுவசதி நிகழ்ச்சிதிட்டம் கட்டம் கட்டமாக நடைமுறைபடுத்தபடும், மேலும், அதன் கீழ் நடுத்தரக் காலத்தில் 70,000 வீடுகளைக் நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது. இந்நோக்கத்திற்காக, 2026 இல் 10,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 7,200 மில்லியனுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 3,000 மில்லியன்களை ஒதுக்கீடு செய்ய முன்மொழிகின்றோம்.

Ø  கொழும்பு மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் ‘நகர்ப்புறத் தோட்டங்கள்’ என அல்லது குறைந்த வசதிகளைக் கொண்ட நகர்ப்புற குடியிருப்புகளாக அடையாளங் காணப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்காக நடைமுறைபடுத்தபடும் நகரபுத்துயிரளிப்பு கருத்திட்டத்தின் கீழ், அப்பிள் வத்த, மாதம்பிட்டிய, பெர்குசன் மாவத்தை, ஒபேசேகரபுர, ஸ்டேடியம்கம, கொலம்பகே மாவத்தை மற்றும் டொரிங்ரன் பிளேஸ் ஆகிய இடங்களில் வீடுகளை நிர்மாணிப்பதற்காக 2026 வருடத்திற்கு ரூபா 15,000 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது..

Ø  சீன அரசாங்கத்தின் உதவியுடன் மொறட்டுவை, பேலியகொடை, தெமட்டகொடை, மகறகமை மற்றும் கொட்டாவை ஆகிய இடங்களில் சுமார் 1,996 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுவரும் அதேவேளை, அதற்காக ஏற்கனவே ரூபா 6,500 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அவ்வீடுகளுள் ஊடகவியலாளர்கள் மற்றும் கலைஞர்களுக்காகவும் வீடுகள் வழங்கப்படும்.

Ø  அரசாங்கத்தால் நிர்மாணிக்கப்பட்ட பழைய அடுக்குமாடி வீடமைப்பு கட்டட தொகுதிகளின் நிலைமை மிகவும் கவலைக்குரியதாக உள்ள அதேவேளை அவற்றைப் புனரமைப்பதற்கு ரூபா 1,180 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

Ø  களனிப் பள்ளத்தாக்கு புகையிரதப் பாதை அபிவிருத்திக்குத் தடையாகவுள்ள சட்டவிரோத குடியிருப்பாளர்களை வேறு பொருத்தமான இடங்களில் குடியமர்த்துவதற்காக ரூபா 840 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது.

31.2 மலையக மக்களுக்கு வீடுகளைப் பெற்றுக்கொடுத்தல்

இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் மத்திய, ஊவா, சபிரகமுவா, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் வசிக்கும் மலையக தோட்டத் தொழிலாளர் சமூகத்தின் வீட்டுவசதி மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக 2,000 வீடுகளை நிர்மாணிப்பதற்காக ரூபா 4,290 மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் வடக்கு மற்றும் தென் மாகாணங்களில் தற்போது நிர்மாணிக்கப்பட்டு வரும் 943 வீடுகளின் நிர்மாணப் பணிகளை நிறைவுசெய்வதற்கு ரூபா 1,305 மில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

 31.3 இயற்கை அனர்த்தங்களால் இடம்பெயர்ந்த மக்களுக்கு வீடுகளை வழங்குதல்

மண்சரிவு மற்றும் வேறு சுற்றுச்சூழல் காரணங்களால் பாதிக்கப்படக்கூடிய பிரதேசங்களில் வசிக்கும் சுமார் 9,000 கிராமப்புற மற்றும் தோட்டப்புற குடும்ப அலகுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இக்குடும்ப அலகுகளுக்காக அடுத்த 3 வருடங்களில் பாதுகாப்பான வீடுகளை பெற்றுக்கொடுப்பது அத்தியாவசியமாகும். இவ்வாண்டில் 1,200 குடும்பங்களுக்காக வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள ரூபா 1,000 மில்லியனுக்கு மேலதிகமாக ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகிறோம்.

31.4 உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்களுக்கு வீடுகளை வழங்குதல்

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போர் காரணமாக எந்தவொரு வீடும் அற்ற குடும்பங்களுக்காக 2,500 வீடுகளை நிர்மாணிப்பதற்கு தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ரூபா 3,850 மில்லியன் ஒதுக்கீடு, ரூபா 5,000 மில்லியனாக அதிகரிக்கப்படும்.

31.5 மீள்சமூகமயமாக்கல் மற்றும் சிறுவர் பாதுகாப்புக்கான வீட்டு உதவி

2025 வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக விசேட நிகழ்ச்சிதிட்டத்தை அறிமுகப்படுத்தி, சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வளர்க்கப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கு நிலையான மற்றும் பாதுகாப்பான வீட்டைக் நிர்மாணிப்பதற்கு மானியம் வழங்குவதன் மூலம் அவர்களின் வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்ப தேவையான சக்தியையளிப்பதற்கு நாம் புதிய பயணத்தைத் ஆரம்பித்து வைத்தோம். இம்முயற்சியை மேலும் வலுப்படுத்துவதுடன் தமது வாழ்க்கையின் எந்தக் கட்டத்திலும் சிறுவர் பராமரிப்பு நிலையங்களில் வசித்து சமூகமயமாக்கப்பட்ட மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையால் அடையாளம் காணப்பட்டுள்ள ஆபத்தில் உள்ள சிறுவர்களின் குடும்பங்களுக்கு காணியை கொள்வனவு செய்து வீடொன்றை நிர்மாணிப்பதற்கு, தமக்கு உரித்தான காணியில் வீடொன்றை நிர்மாணிப்பதற்கு அல்லது ஏற்கனவே உள்ள வீடுகளைப் புனரமைப்பதற்கு ரூபா 2 மில்லியன் நிதி ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறேன். அதற்கமைய, ரூபா 2,000 மில்லியன் நிதி ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம்.

32. அரசாங்க சேவையை நவீனமயப்படுத்துதல்

எமது நாடு பொருளாதார, சமூக மற்றும் கலாசார அடிப்படையில் எதிர்கால வெற்றிகளை அடைவதற்காக சக்திவாய்ந்த அரச சேவையொன்று தேவையென்பதை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். எனினும், தற்காலத்தில் பொதுமக்கள் சேவை வழங்கலுக்கு அரச சேவைக்காக ஒப்பீட்டளவில் அதிக செலவினம் மேற்கொள்ளப்படுகின்றது. அரசியல்மயமான அரச ஆட்சேர்ப்புகள், தமது பணிகள் நிறைவுற்ற நிறுவனங்கள், ஒரே செயற்பாட்டிற்கு தாபிக்கப்பட்டுள்ள பல்வேறு நிறுவனங்கள் இதற்கு ஏதுவாக அமைந்துள்ளன. எமது அரசாங்கத்தினால் வழங்கப்பட வேண்டிய அத்தியாவசிய சேவைகளை முறையான மதிப்பீட்டிற்கு உட்படுத்தி, பணிகள் நிறைவுற்ற அரச நிறுவனங்களை மூடுவதற்கும், ஒரே பணியை மேற்கொள்ளும் பல்வேறு அரச நிறுவனங்களை ஒன்றிணைப்பதற்கும், காலங் கடந்த இலக்குகளை புதிய இலக்குகளுக்கு அமைய மறுசீரமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கின்றோம். அவ்வாறான எந்தவொரு வணிக, ஒழுங்குமுறைப்படுத்தும் அல்லது நிர்வாக செயற்பாடு நடைபெறாத 33 நிறுவனங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. மேலும், வணிகமல்லாத, தாபித்தலின் ஆரம்ப இலக்கிலிருந்து விலகிய மற்றும் தற்போதைய சூழ்நிலைக்குப் பொருந்தாத நிறுவனங்கள் அடையாளங் காணப்பட்டுள்ள அதே வேளை, அவற்றையும் மூடுவதற்கு தயார்படுத்துகின்றோம்.

மேற்படி அரச தொழில்முயற்சிகள் தேசிய பொருளாதாரத்திற்கு அல்லது சேவை வழங்கலுக்கு எந்தவொரு பங்களிப்பும் அற்ற அதே வேளை, அவற்றின் நிதி அறிக்கைகளை தேடிக்கொள்வது மிகவும் கடிமான அதே வேளை, தீர்க்கப்படாத பொறுப்புகள், மற்றும் சொத்துக்களின் உரித்து தொடர்பாக நிலவும் சட்டச் சிக்கல்கள் காரணமாக இது சம்பந்தமாக இறுதி முடிவு எடுக்கப்பட்டிருக்கவில்லை. இச் சிக்கல்களை தீர்த்துக் கொண்டு, அச் செயற்பாடுகளை துரிதப்படுத்துதவதற்காக நிதி அமைச்சின் கீழ் ஓர் அலகு ஏற்கனவே தாபிக்கப்பட்டுள்ளது.

அரசுக்குச் சொந்தமான வணிகமல்லாத நிறுவனங்கள் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகளை அடிப்படையா​கக் கொண்டு, 21 நிறுவனங்களை மறுசீரமைப்பதற்கும், ஆய்வுத்துறையில் உள்ள 14 நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய மட்டத்தில் நிறுவனமொன்றை தாபிப்பதற்கும், ஏற்கனவே வணிக வடிவில் செயற்படாத 09 நிறுவனங்களை நிதி சுயாதீனத்துடனான நிறுவனங்களாக நிலைமாற்றுவதற்கும், தாபிக்கப்பட்டதற்கான நோக்கம் தற்காலத்திற்கு தேவையற்றதன் அடிப்படையில் 13 நிறுவனங்களை ஒழிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்.

32.1 அரச சேவைக்கான ஆட்சேர்ப்பினை முறைப்படுத்தல்

பல வருடங்களாக அரச சேவை வெற்றிடங்களுக்கு முறையான விதத்தில் ஆட்சேர்ப்புச் செய்யப்படாமையினால், அரச சேவை பொறிமுறை முழுவதுமாக ஸ்தம்பிதமடைந்துள்ளது. இதனால், பிரதமரின் தலைமையில் தாபிக்கப்பட்டுள்ள அரச சேவைக்கு ஆட்சேர்ப்புச் செய்வதற்கான செயன்முறையை மீளாய்வு செய்தல் மற்றும் பதவியணி முகாமைக்கான குழுவினூடாக மேற்கொள்ளப்பட்ட முறையான ஆய்வின் பின்னர் சுமார் 75,000 பேரை உரிய முறையின் கீழ் ஆட்சேர்ப்புச் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய அரச சேவையை முன்னெடுத்துச் செல்வதற்காக இருக்க வேண்டிய தொழில்நுட்ப, சட்ட அமுலாக்கல், வருவாய் அதிகாரிகள் போன்ற பதவிகள் இதில் அடங்கும். அதே போன்று, இனிவரும் காலங்களில் அரச துறையில் சகல ஆட்சேர்ப்புகள், பதவியுயர்வுகள் உள்ளிட்ட செயற்பாடுகள் அரசியல் தலையீடின்றி உரிய பரீட்சை மற்றும் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் மட்டுமே மேற்கொள்வதன் மூலம், இளைஞர், யுவதிகளுக்கு சமமான வாய்ப்புகள் வழங்கப்படும்.

32.2 அரசாங்க நிறுவனங்களில் டிஜிற்றல் பெறுவழியை மேம்படுத்தல்

நேரடியாக பொதுச் சேவைகளை வழங்கும் அரசாங்க நிறுவனங்களின் சிக்கலான நடைமுறைகளை எளிமைப்படுத்தி (Business Process Reengineering) டிஜிற்றல் முறைகளின் கீழ் அவ் வசதிகள் விரைவாக வழங்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்காக, அரசாங்கத்தால் ஏற்கனவே தயாரிக்கப்பட்ட டிஜிற்றல் மயமாக்கல் நிகழ்ச்சித் திட்டத்திற்கு (Digital Blue Print) இணங்கும் வகையில் உள்ளீடுகளுக்காக தற்போது ஒதுக்கப்பட்டுள்ள ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமாக மேலும் ரூபா 1,000 மில்லியன் ஒதுக்கீடு செய்ய முன்மொழிகிறோம்.

32.3  அரசாங்க நிறுவனங்களுக்கு தேவையான வாகனங்கள்/ உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு இயந்திரோபகரணங்களை பெற்றுக்கொடுத்தல்

அரசாங்கத்திற்குச் சொந்தமான தற்போதுள்ள வாகனங்கள் மற்றும் உபகரணங்கள் போதுமானதாக இன்மை, தற்போதுள்ள பெரும்பாலான வாகனங்கள் மற்றும் இயந்திரோபகரணங்கள் பழமையானவை முதலான காரணிகள் காரணமாக அவற்றை பழுதுபார்ப்பதற்காக அதிக செலவுகளை ஏற்க நேரிட்டுள்ளது. இந்நிலைமை அரசாங்கத்தால் எதிர்பார்க்கப்படும் அபிவிருத்தி நடவடிக்கைகளைத் தொடர்வதற்கு தடையாக அமைந்துள்ளது. இந்நிலைமையைக் கருத்திற் கொண்டு, அரச நிறுவனங்களுக்கு அத்தியாவசிய வாகனங்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிக்காலத்தின் இறுதியில் அவற்றைத் திருப்பிப் பெறும் அடிப்படையில் வழங்கப்படும் வாகனங்கள் மற்றும் இயந்திரோபகரணங்களை கொள்வனவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ள அதேவேளை இதற்காக ஆரம்பத்தில் ரூபா 12,500 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம்.

32.4  அரசாங்க நிறுவனங்களில் நிலுவையில் உள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளைத் தீர்ப்பனவுசெய்தல்

பல அரசாங்க தொழில்முயற்சிகளுக்கு பணியாளர்ளை ஆட்சேர்ப்புச் செய்யும்போது அரசியல் ஆதரவை கருத்திற்கொண்டு வேலைவாய்ப்பு வழங்கும் இடங்களாகவும் முறையான முகாமைத்துவ அல்லது நிதி ஒழுக்கம் இல்லாமல் செயற்பட்டதால் பல அரசாங்க நிறுவனங்கள் மக்களுக்கு பெரும் சுமையாக மாறி, வங்கிகளுக்கு கடன்பட்டு, ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதி மற்றும் வரிகளை செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

1. வரையறுக்கப்பட்ட இலங்கை சீனி (தனியார்) நிறுவனம்

2. மக்கள் தோட்ட அபிவிருத்தி சபை

3. இலங்கை அரச பெருந்தோட்ட கூட்டுத்தாபனம்

4. இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம்

5. இலங்கை கடற்றொழில் கூட்டுத்தாபனம்

6. தேசிய கால்நடை அபிவிருத்தி சபை

7. வரையறுக்கப்பட்ட எல்கடுவ பெருந்தோட்டக் கூட்டுத்தாபனம்

8. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம்

9. நோர்த் சீ நிறுவனம்

10. சிலோன் செரமிக்ஸ் கூட்டுத்தாபனம்

ஆகிய 10 அரசு தொழில்முயற்சிகளில் நிலுவையாக உள்ள ஊழியர் சேமலாப நிதியம், ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதியம், பணிக்கொடை போன்ற நியதிச்சட்ட கொடுப்பனவுகள் மற்றும் வரிகளின் நிலுவைத் தொகையைத் தீர்ப்பனவு செய்வதற்கு ரூபா 11,000 மில்லியன் தேவைப்படுகிறது.

இவ்வாறு செலுத்தப்படாத நியதிச்சட்டக் கொடுப்பனவுகளை, கட்டம் கட்டமாக செலுத்த முன்மொழியும் அதேவேளை, 2026 ஆம் ஆண்டிற்கு ரூபா 5,000 மில்லியன் ஒதுக்கீடுசெய்ய முன்மொழிகின்றோம். இதன் மூலம் இந்நிறுவனங்களின் தற்போதுள்ள ஊழியர்களின் ஊழியர் சேமலாப நிதிய, ஊழியர் நம்பிக்கை பொறுப்பு நிதிய நிலுவை, அதேபோன்று ஓய்வுபெற்ற ஊழியர்களின் பணிக்கொடைகளை செலுத்துதலை உறுதிசெய்வதற்கும், அவற்றின் ஐந்தொகைப் பொறுப்புகளை மறுசீரமைப்பதற்கும் எதிர்பார்க்கின்றோம்.

32.5 அரசின் மூலம் அரசாங்க தொழில்முயற்சிகள் தொடர்பாக வழங்கப்பட்ட திறைசேறி உத்தரவாதங்கள் மற்றும் பிணைய கடிதங்ளை விடுவித்தல்

அரசுக்குச் சொந்தமான தொழில்முயற்சிகள், கடன்களைப் பெற்றுக்கொள்வதற்கு திறைசேறி உத்தரவாதங்கள் அல்லது பிணைய கடிதங்கள் அரசாங்க வங்கிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. நீண்ட காலமாக நட்டம் ஏற்படுதல் மற்றும் நிதி நெருக்கடி காரணமாக, இத்தொழிற்முயற்சிகளுக்கு இக்கடன்களை திருப்பிச் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 31.12.2026 வரை செயற்பாடற்ற நிலையில் இருக்கும் இப்பொறுப்புகள் அவசரத் தேவையாக கருதி இவ் ஆண்டில் தீர்க்கப்படும்.

32.6 சிரேஷ்ட பிரசைகள் கணக்குகளுக்காக வழங்கப்படும் வட்டிக்காக அரசாங்க பங்களிப்பு நிதி செலுத்துதல்

சிரேஷ்ட பிரசைகளின் சேமிப்புகளுக்கு சுமார் 15 சதவீத மேலதிக வட்டி வீதம் வழங்கப்பட்டிருந்த போதிலும், 2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் அதற்காக வங்கிகளுக்கு செலுத்த வேண்டியிருந்தும், இதுவரை செலுத்தப்படாத நிலுவைத் தொகை செலுத்தித் தீர்க்கப்படும். இதற்காக அரசினால் ஏற்க வேண்டிய வட்டியில் (அரச பங்களிப்பு) செலுத்தப்படாதுள்ள ரூபா 10,000 மில்லியன் 2025 ஆம் ஆண்டில் ஏற்கனவே செலுத்தப்பட்டுள்ள அதேவேளை, எஞ்சிய ரூபா 45,700 மில்லியன் நிலுவைத் தொகையை இவ்வாண்டிலேயே முழுமையாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

33. அரச துறையில் சம்பளம் மற்றும் ஓய்வூதியம்

33.1 சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை தாபித்தல்

சம்பளம் மற்றும் ஓய்வூதிய கொள்கைகளை நிலைபேறாக நிர்வகிப்பது எமது பொறுப்பாகும். பல ஆண்டுகளாக எழுந்துள்ள சம்பள முரண்பாடுகளையும் அரசாங்க நிதி முகாமைத்துவம் என்பவற்றிலுள்ள சவால்களையும் கருத்திற் கொண்டு, அரசாங்க ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியம் பெறுபவர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதற்காக சம்பளம் மற்றும் ஓய்வூதிய ஆணைக்குழுவை தாபிப்போம்.

33.2 பங்களிப்பு ஓய்வூதிய நன்மைகளுக்கான உரிமை தொடர்பான நியமனக் கடிதத்தில் உள்ள நிபந்தனைகளை திருத்துதல்

2016.01.01 அன்று அல்லது அதன் பின்னர் அரசாங்க சேவையில் ஆட்சேர்க்கப்பட்ட அனைத்து அரசாங்க அலுவர்களுக்கும் வழங்கப்பட்ட நியமனக் கடிதங்களில் பங்களிப்பு ஓய்வூதிய கொடுப்பனவு நன்மைகளுக்கான உரிமை தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், அத்தகைய அலுவலர் ஒருவர் ஓய்வுபெற்றால், தற்போதுள்ள ஓய்வூதிய முறைமைக்கு புறம்பாக கருத்திற்கொள்வது நடைமுறைச் சாத்தியமற்றது. ஓய்வூதிய கொடுப்பனவு உரிமைகள் தொடர்பான பிரிவு நியமனக் கடிதங்களிலிருந்து நீக்கப்பட்டு, தற்போதுள்ள ஓய்வூதிய கொடுப்பனவு முறைமைக்கான அவர்களது உரிமை உறுதிப்படுத்தப்படும்.

33.3 அரச துறை சம்பள உயர்வின் இரண்டாம் கட்டம்

2025 ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட சம்பள திருத்தங்களுக்கு அமைய, இரண்டாம் கட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ரூபா 110 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கமைய, இச் சம்பளங்களை அனைத்து அரச ஊழியர்களுக்கும் 2026 சனவரி தொடக்கம் செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

33.4 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வுபெற்றவர்களுக்கான ஓய்வூதிய முரண்பாடுகளை தீர்ப்பதற்கான இரண்டாம் கட்டம்

ஓய்வூதிய திருத்தத்தின் இரண்டாம் கட்டத்தில், 2020 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியங்கள் 2019 ஆம் ஆண்டின் சம்பள கட்டமைப்பின் அடிப்படையில் திருத்தம் செய்யப்படும். இத் திருத்தப்பட்ட ஓய்வூதியத்தை 2026 ஜூலை மாதம் முதல் செலுத்துவதற்கு ரூபா 20,000 மில்லியன் ஏற்கனவே ​ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

33.5 சலுகை வட்டி விகிதத்தில் அரச ஊழியர்களுக்கு வீடமைப்பு மற்றும் ஆதனக் கடன்களை வழங்குதல்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஆதனக் கடன் திட்டத்தினை ரூபா 50 இலட்சம் வரை வழங்குவதற்கான​ புதியதொரு கட்டமைப்பின் கீழ் நடைமுறைபடுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது. இவ்விடயத்தில், ஆரம்ப ரூபா 30 இலட்சம் வரை 4 சதவீத வட்டிச் சலுகையிலும், ரூபா 30 இலட்சத்திலிருந்து ரூபா 50 இலட்சம் வரை 2 சதவீத வட்டிச் சலுகையிலும் கடன்களை வழங்குவதற்கு ரூபா 500 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகிறோம்.

33.6 அக்ரஹார திட்டத்தின் கீழ் சுகாதார நலக் காப்பீட்டெல்லை விரிவாக்கல்

அரச ஊழியர்களுக்கான தற்போது நடைமுறையிலுள்ள அக்ரஹார காப்புறுதி திட்டத்தின் கீழ் அரச ஊழியர்கள் சில சலுகைகளைப் பெற்றுக் கொண்ட போதிலும், குறைந்தபட்ச ஊழியர் பங்களிப்புத் தொகையாக ரூபா 125 இருப்பதன் காரணமாக, ஊழியர்களுக்கு வழங்கப்படும் நலன்கள் நிலையான அளவில் இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, ரூபா 125 பங்களிப்புத் தொகையை மேலும் 75 ரூபாவினாலும், மாதாந்த பங்களிப்புத் தொகையான ரூபா 300 மற்றும் ரூபா 600 ஆகியவற்றை மேலும் 150 ரூபாவினாலும் அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

33.7 பண்டிகை முற்பணத்தை அதிகரித்தல்

அரச ஊழியர்களுக்கு வழங்கப்படும் பண்டிகை முற்பணமான ரூபா 10,000 இனை ரூபா 15,000 ஆக அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகிறோம்.

33.8 இடர் கடன் முற்பணம்

அரச ஊழியர்களின் சம்பள உயர்வுக்​கேற்ப,  4.2 சதவீத வட்டி அடிப்படையில் பெற்றுக் கொள்ளக் கூடிய இடர் கடன் முற்பணத் தொகையை, ரூபா 250,000 இலிருந்து ரூபா 400,000 வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இம்முற்பணங்கள் குறுகிய காலத்திற்குள் இடையூறின்றி பெற்றுக் கொள்ளக்கூடியதாக, அரச ஊழியர்களின் முற்பணக் கணக்கு வரையறைக்கென ரூபா 10,000 மில்லியன்   ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

33.9 கஷ்டப் பிரதேச  சேவையிலுள்ள ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் மற்றும் அதிபர் கொடுப்பனவுகளில்  அதிகரிப்பு

கஷ்டப்பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவுகள் 20 ஆண்டுகளாக அதிகரிக்கப்படாதிருப்பதனால், அத்தகைய ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் இக் கொடுப்பனவை 1,500 ரூபாவால் அதிகரிப்பதற்கு நாம் முன்மொழிகிறோம்.

கல்வி இலக்குகளை அடைவதில் அதிபர்களின் நிர்வாகப் பொறுப்புகள் மற்றும் பொறுப்புகூறலை அங்கீகரிக்கும் வகையில், அதிபர் பதவியில் பணியாற்றும் அதிபர்களுக்கு வழங்கப்படும் அதிபர் கொடுப்பனவை 1,500 ரூபாவால்  அதிகரிக்கவும் கல்வி இலக்குகளை அடைவதை அதிகரிப்பதற்காக ரூபா 1,000 மில்லியனை ஒதுக்கீடுசெய்யவும் நாம் முன்மொழிகிறோம்.

33.10 பாதுகாப்பற்ற புகையிரத கடவைக் காப்பாளர்களின் கொடுப்பனவை அதிகரித்தல்

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் அடிக்கடி ஏற்படும் விபத்துக்கள் காரணமாக வருடாந்தம் குறிப்பிடத்தக்க தொகையிலான உயிரிழப்புகள் ஏற்படும் அதேவேளை அவற்றினால் நிரந்தர அங்கவீனத்திற்கு ஆளாகின்றவர்களும் குறிப்பிடத்தக்க அளவினராகும். இந்நிலைமைக்கு தீர்வாக தற்போது சுமார் 1,000 கடவைக் காப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தற்போது எட்டு மணி நேர கடமை நேரத்திற்கு வழங்கப்படும் மாதத்திற்கு ரூபா 7,500 குறைந்தபட்ச கொடுப்பனவை ரூபா 15,000 வரை அதிகரித்து வழங்குவதற்கு ரூபா 250 மில்லியனை ஒதுக்கீடு செய்வதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

33.11 தற்காலிக, அமைய, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட பணியாளர்களுக்கு முறையான நிரந்தர நியமனம் வழங்குதல்

முன்னைய அரசாங்கம் மூலம் தற்காலிக, அமைய, மாற்று, ஒப்பந்த மற்றும் சலுகை அடிப்படையில் ஆட்சேர்க்கப்பட்ட பணியாளர்களுக்கு முறையான நிரந்தர நியமனம் இதுவரையிலும் வழங்காத காரணத்தால், குறைந்த சம்பளம் பெற்று தமது கடமையை செய்யும் சுமார் 9,800 பணியாளர்கள் அரசாங்க துறையிலுள்ள பல்வேறு நிறுவனங்களில் இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு சந்தர்ப்பங்களில் இப்பணியாளர்களின் ஒரு பகுதியினருக்கு மட்டுமே நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டிருந்தாலும், இப்பணியாளர்களுக்கு அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

நீண்ட காலமாக ஒழுங்கற்ற முறையில் அரசாங்க சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்யப்படுவது எமது அரசாங்கத்தின் கீழ் நடைபெறாது என உறுதிப்படுத்துகின்ற அதேவேளை ஏற்கனவே பணிக்கமர்த்தப்பட்டு முறையான சேவை அந்தஸ்து வழங்கப்படாத இப் பணியாளர்களின் சேவையினை நிரந்தரமாக்க வேண்டிய அவசியத்தை நாம் ஏற்றுக்கொள்கிறோம். ஆகையால், பொது நிர்வாக சுற்றறிக்கை 25/2014 மற்றும் பொது நிர்வாக சுற்றறிக்கை 29/2019 என்வற்றின கீழ் தகைமைகளை பூர்த்தி செய்து, தற்போது பல்வேறு நிறுவனங்களில் 6 மாதங்களுக்கும் மேலாக பணியாற்றும் அனைத்து பணியாளர்களுக்கும் நிரந்தர நியமனங்களை வழங்க நாம் முன்மொழிகிறோம்.

34. அரசிறை  ஒழுக்கமும் பேரண்டப் பொருளாதார உறுதிப்பாடும்

34.1 வருமான வழிமுறைகளும் உள்நாட்டு வருமானத் திரட்டலும் (Domestic Revenue Mobilization)

2024 இன் 44 ம் இலக்க பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டத்தினை  முழுமையாக நடைமுறைப்படுத்தும் அதேவேளை, எமது அரசாங்கம் வெளிப்படை தன்மை, நியாயம் மற்றும் நிருவாக வினைத்திறன் என்பவற்றின் அடிப்படையில் நவீன வரி முறைமை ஒன்றை கட்டியெழுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம். சர்தேச அளவுகோள்களுக்கு இசைவாக நடுத்தர காலத்தில் வரி வருவாயை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15 சதவீதத்தினை விஞ்சுதல் மற்றும் தொடர்ந்து பேணு முக்கிய சமூக முதலீடுகளுக்கான அவசியமான அரசிறை ஏற்பாட்டை உறுதிப்படுத்தல் முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்தல் மற்றும் எனது நிதியியற் சந்தையை விரிவுபடுத்துவது எமது இலக்காகும்.

34.2 அரசாங்க வரி வருமானத்தை சேகரித்தலில் முன்னேற்றம்

எமது அரசாங்கம் பதவிக்கு வந்தபோது வருவாய் சேகரிப்பு குறைந்த மட்டத்தில் இருந்தது. வரியுடன் இணங்கி ஒழுகுதல் மோசமாக இருந்ததுடன் ஒட்டுமொத்த முறைமையிலும் பொது மக்கள் நம்பிக்கை சீர்குலைந்திருந்தது. ஒரு வருடத்திற்குள் வருமான சேகரிப்பில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தினை அடைந்துள்ளோம் என்பதை அறிவிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

அதற்கமைய மானியங்கள் உள்ளடங்கலாக அரசாங்க வருமானம் 2024 இன் முதல் ஒன்பது மாதங்களில் ரூபா 2,900 பில்லியன் என்ற அதேவேளை 2025 இன் அதேகாலப்பகுதியில் ரூபா 3,800 பில்லியனாக அதிகரித்துள்ளது. இதற்காகப் பங்களித்த அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் எமது நன்றியினை தெரிவிக்க விரும்புகின்றோம்.  

இலகுபடுத்தப்பட்ட பெறுமதிசேர் வரி முறைமை 2025 ஒக்டோபர் 01 தொடக்கம் இல்லாதொழிக்கப்பட்டதுடன் வரி இணக்கப்பாடு மற்றும் தவறான பயன்பாட்டைக் குறைப்பதற்கும் அனுமதிக்கப்பட்ட மீளளிப்பு செயன்முறையொன்றுக்கு  மாற்றம் செய்யப்பட்டது. பதிவு செய்யப்பட்ட வரி செலுத்துநர்களின் எண்ணிக்கை 2025 செப்டம்பர் 30 அன்றுள்ளவாறு 2024 உடன் ஒப்பிடுகையில் 3 இலட்சத்தினால் அதிகரித்துள்ளது.

வருவாய் சேகரிப்பதை வலுப்படுத்துவதற்கான எமது அணுகுமுறை பிரசைகளுக்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான சமூக ஒப்பந்தத்தை பிரதிபலிப்பதுடன், பகிரப்பட்ட  பொறுப்புக்களின் கோட்பாட்டுடன் இணைந்து காணப்படுகின்றது. வரி செலவினங்களை சீரமைக்கின்ற, வருமான வரிகளை வலுப்படுத்துகின்ற, பெறுமதி சேர் வரி மற்றும் மதுவரியின் வினைத்திறனை மேம்படுத்துகின்ற அத்துடன் இலகுபடுத்தப்பட்ட நடைமுறைகள் மற்றும் டிஜிட்டலுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்டமைப்புகள் ஊடாக முறைசார் துறையினை விரிவுபடுத்துகின்ற அனைத்தையும் உள்ளடக்கிய மறுசீரமைப்பு நிகழ்ச்சிநிரல் ஒன்றை நாம் நடைமுறைப்படுத்துகின்றோம். செலவின வினைத்திறன், பொறுப்புக்கூறல் மற்றும் பொதுமக்கள் நம்பிக்கை என்பவற்றை மேம்படுத்துவதற்கான பரந்த நிறுவனசார் மறுசீரமைப்புகளுடன் இவ் வழிமுறைகள் அணிசேர்ந்திருக்க வேண்டும்.

35. வருமான முன்மொழிவுகள் -2026

35.1 இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீது பெறுமதி சேர்வரி மற்றும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டை விதித்தல்

உள்ளூர் உற்பத்திகளானது பெறுமதி சேர் வரிக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுக்கும் உட்படுத்தப்படும் அதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் 01 கிலோ கிராமுக்கு முறையே ரூபா 150 மற்றும் ரூபா 275 என விசேட பண்ட அறவீட்டுக்கு உட்படுத்தப்படுகின்றன. சமமான போட்டி நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் தேங்காய் எண்ணெய் மற்றும் பாம் எண்ணெய் மீதான விசேட பண்ட அறவீட்டை நீக்கி, அதற்குப் பதிலாக பெறுமதிசேர் வரி உட்பட பொதுவான வரிக் கட்டமைப்பை விதிப்பதற்கும் முன்மொழிகின்றோம். இம் முன்மொழிவு 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுகின்றது.

35.2 பெறுமதி சேர் வரிக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுக்கும் உட்படுகின்ற பதிவு எல்லையைக் குறைத்தல்

வரி அடித்தளத்தை விஸ்தரிப்பதற்காக பெறுமதி சேர் வரிக்கும் சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டுக்கும் பதிவுசெய்வதற்கான வருடாந்த புரள்வு எல்லையை 2026 ஏப்ரல் முதலாம் திகதியிலிருந்து அமுலுக்கு வரும்வகையில் ரூபா 60 மில்லியனிலிருந்து ரூபா 36 மில்லியன் வரை குறைப்பதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

35.3 இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்கி பெறுமதி சேர் வரியை விதித்தல்

உள்ளூர் துணி உற்பத்திகள் பெறுமதிசேர் வரிக்கு உட்படுவதுடன், இறக்குமதி செய்யப்படுகின்ற துணிகள் பெறுமதிசேர் வரியிலிருந்து விலக்களிக்கப்பட்டுள்ள போதிலும், கிலோ கிராமிற்கு 100 ரூபா செஸ் வரி அறவிடப்படுகின்றது. சமமான போட்டிமிகு நிலையை உறுதிப்படுத்துவதற்கு இறக்குமதி செய்யப்படும் துணி மீதான செஸ் வரியை நீக்குவதற்கும் அதற்குப் பதிலாக பெறுமதி சேர் வரியை விதிப்பதற்கும் முன்மொழியப்படுகின்றது. இது 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து அமுலுக்கு வரும் வகையில் முன்மொழியப்படுன்றது.

35.4 வாகனங்கள் மீது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை விதித்தல்

வாகனங்கள் விற்பனையின் போது அறவிடப்படும் சமூக பாதுகாப்பு பங்களிப்பு அறவீடு முறையாக அறவிடப்படுவதில்லை என்பது அவதானிக்கப்படுகின்றது. எனவே, வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் சந்தர்ப்பத்தில் அல்லது உற்பத்தி மற்றும் விற்னையின் போது சமூகப் பாதுகாப்பு பங்களிப்பு அறவீட்டினை சேகரித்து, விற்பனைக்குப் பின்னான சந்தர்ப்பத்தில் இந்த வரியை விலக்களிக்க முன்மொழிகின்றேன். இதனை 2026 ஏப்ரல் மாதத்திலிருந்து நடைமுறைப்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

35.5 தேசிய தீர்வைக் கொள்கையை நடைமுறைப்படுத்தல்

தற்சமயம் நடைமுறையிலுள்ள 0%, 15%, 20% என்ற தீர்வை வரி விகிதங்களை, 2026 ஏப்ரல் மாதம் முதல் அமுலுக்கு வருமாறு தீர்வை விகிதங்களை 0%, 10%, 20%, 30% என்றவாறு தேசிய தீர்வை கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்கு நாங்கள் முன்மொழிகின்றோம். தீர்வை வரி அல்லாத இறக்குமதி வரிகளை படிமுறையாக நீக்குவது மேற்படி வரி விகிதங்களை மாற்றுவதன் இலக்காகும். அரசாங்கத்தின் வருமானத்தின் மீது குறைந்த தாக்கத்துடன் தீர்வை அல்லாத இறக்குமதி வரிகளை நீக்குவதற்காக, காலச்சட்டகமொன்றுக்கு அமைய திட்டமிட்டு நடைமுறைப்படுத்த முன்மொழிகின்றோம்.

35.6 வரிக் கணக்காய்வுச் செயன்முறையை மேம்படுத்தல் 

வரி நிர்வாகத்தின் வெளிப்படைத்தன்மை, வினைத்திறன் மற்றும் நியாயத்தன்மை என்பவற்றை விருத்தி செய்வதற்காக, அரசாங்கம் 2026 சனவரி மாதத்திலிருந்து சமர்ப்பிக்கப்பட்ட விபரத்திரட்டிற்கு உகந்த வகையில் நவீன வரி கணக்காய்வு சட்டகமொன்று அறிமுகம் செய்யப்படும். இச் சீர்திருத்தங்கள் கணக்காய்வு நடைமுறையை முறைப்படுத்துவதுடன், வரி செலுத்துவோர் மற்றும் உத்தியோகத்தர்களுக்கிடையில் சட்டரீதியற்ற பிணைப்புகளைக் குறைக்கும் அதேவேளை இதன் மூலம் தற்றுணிவு மற்றும் ஊழலுக்கான சந்தர்ப்பங்கள் மட்டுப்படுத்தப்படுகின்றது. புதிய முறையின் கீழ், கணக்காய்வு வழக்குகளை தெரிவு செய்தல் இடர் முகாமைத்துவ அலகினால் முன்னெடுக்கப்படுகின்ற வெளிப்படைத் தன்மையுடன் கூடிய இடர் மதிப்பீடுகள் மீது அடிப்படையாக அமைவதுடன், தேவையானபோது உள்நாட்டு இறைவரி ஆணையாளர் நாயகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவொன்றினால் அவை மீளாய்வுக்கு உட்படுத்தப்படும். உரிய வரி நியதிச் சட்ட திருத்தங்கள் ஊடாக அமுல் செய்யப்பட்ட இந்த மாற்றங்கள், இலங்கையின் நிலைபேறான பொருளாதார வளர்ச்சியை நோக்கிய பயணத்திற்கு உதவும் வெளிப்படைத் தன்மையுடன் கூடிய, சட்டத்தை அடிப்படையாகக் கொண்ட மற்றும் நம்பிக்கையான வருமான நிருவாக முறைமையொன்றை நிறுவுவதற்கான அரசாங்கத்தின் பொறுப்புக் கூறுதலை எடுத்துக்காட்டுகின்றது.

35.7 காலத்தின் தேவைக்குப் பொருத்தமானவாறு வரிச் சட்டகத்தை இற்றைப்படுத்தல்

தொலைத்தொடர்புச் சேவைகள் வழங்கல் மீது அறவிடப்படும் தொலைத் தொடர்பாடல் வரியைச் செலுத்தும் போது, தொலைத்தொடர்பாடல் சேவை நறுவனங்களினால் ஏற்க நேரிட்ட ஏதேனும் அறவிட முடியாக் கடன் அதில் அடங்கக் கூடாது. அதேபோன்று, மீளஅறவிடப்பட்ட ஏதேனும் அறவிடமுடியாக் கடன் குறித்த மாதத்திற்கான வரியைச் செலுத்தும்போது உள்ளடக்கப்படுதல் வேண்டும். இதற்குரிய திருத்தங்களை அறிமுகப்படுத்துவதற்கும் தொலைத்தொடர்பு வரி சம்பந்தமான அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட மாற்றங்களை இற்றைப்படுத்துவதற்கும் 2011 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க தொலைத் தொடர்பு வரிச் சட்டத்தை திருத்துவதற்கு முன்மொழியப்படுகின்றது.

நிதி தூய்தாக்குதலினைத் தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலை தடுப்பதற்குமான சட்டகம் (AML/CFT Framework) தொடர்பில் நிதி புலனாய்வுப் பிரிவு மற்றும் பிற செயற்படுத்தும் நிறுவனங்களுடன் வரி நிர்வாக அதிகாரிகளினால் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்கு வழிவகுக்கும் சட்ட ஏற்பாடுகள், சம்பந்தப்பட்ட வரி சட்டதிட்டங்களில் உட்சேர்க்கப்பட வேண்டுமென முன்மொழியப்படுகின்றது.

அத்துடன், நிதி தூய்தாக்குதல் மற்றும் பயங்கரவாதத்திற்கு நிதி வழங்கலுக்கு எதிரான அரசாங்கத்தின் வேலைத்திட்டங்களை வலுப்படுத்துவதற்காக வரி சம்பந்தமான பிழையான பொருள்கோடல், சட்டமா அதிபரினால் வழக்குத் தொடுத்தல், தண்டப்பணமும் தண்டனையும் விதித்தல் உள்ளிட்ட அமுலாக்கலினை மேற்கொள்ளத் தேவையான சட்ட ஏற்பாடுகளை எல்லா வரிச் சட்டங்களுக்கும் அறிமுகம் செய்வதற்கு முன்மொழியப்படுகின்றது.

35.8      தேசிய இலத்திரனியல் விலைப்பட்டியல் முறைமையை உருவாக்குதல்

தேசிய இ-விலைப்பட்டியல் முறைமைக்கு அடித்தளமிடுவதற்கு வரிசெலுத்துநர்களின் தொழில்முயற்சி வளத்திட்டமிடல் (ERP) முறைமைகள் மற்றும் வருமான நிருவாக முகாமைத்துவ தகவல் முறைமை (RAMIS) என்பவற்றுக்கிடையில் தங்குதடையற்ற தொடர்புகையை இயலச்செய்வதற்கு செயலி செய்நிரலாக்கம் இடைமுக அடிப்படையிலமைந்த ஒருங்கிணைக்கப்பட்ட கட்டமைப்பொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இம்முன்னெடுப்பு செயலி செய்நிரலாக்கம் இடைமுக ஒருங்கிணைப்பிற்கு ஆதரவளிப்பதற்கு தமது தொழில்முயற்சி வளத் திட்டமிடல் முறைமைகளை தரமுயர்த்தியுள்ள தெரிவுசெய்யப்பட்ட கம்பனிகளைக் கொண்ட குழுவொன்றுடன் தொடர்பான முன்னோடிக் கருத்திட்டம் ஒன்றை நிரைவு செய்து இவ்வருடத்திற்குள் நடைமுறைப் படுத்தப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

முதற்கட்டத்தில், செயலி செய்நிரலாக்கம் பொறிமுறையூடாக தெரிவுசெய்யப்பட்ட முன்னோடிக் கம்பனிகளுடன் ஒருங்கிணைத்தல் மற்றும் ஏற்றுமதியை நோக்காகக் கொண்ட தொழில்முயற்சிகளையும் உள்ளடக்குவதற்கு முறைமை விரிவுபடுத்தப்படும். இரண்டாம் கட்டத்தில் அனைத்து பெறுமதிசேர் வரி பதிவுசெய்யப்பட்ட வரிசெலுத்துநர்களும் உள்ளடக்கப்படுவர்.

மூன்றாம் கட்டத்தில் விற்பனை இட இயங்திரம் (POS) ஊடாக இலத்திரனியல் விலைப்பட்டியலிடல் முறைமை நிகழ்நேர கொடுக்கல்வாங்கல் அறிக்கையிடலுக்கு உட்படுத்தி வரி இணங்குவித்தலை மேம்படுத்தி முழுமையாக வலைத்தல அடிப்படையிலான தளத்தினூடாக பெறுமதி சேர் வரி நிர்வாகத்தின் வினைத்திறன் மற்றும் வெளிப்படைத் தன்மையையும் மேம்படுத்த எதிர்பார்க்கப்படுகின்றது.

35.9 உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை தனியொரு அலுவலக வளாகத்தில் தாபித்தல்

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அரசாங்க வருவாயினை ஈட்டுவதற்கு, பொறுப்பான முக்கிய நிறுவனங்களில் ஒன்றாவதுடன் டிஜிட்டல்மயப்படுத்தலின் நோக்கில் அதன் வரி சேகரித்தல் செயன்முறையை திசைப்படுத்துவது மிகவும் வினைத்திறன் மிக்க சேவை வழங்கலை மேற்கொள்ள முடியும்.

இந்நிலைமையின் கீழ் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தினது பிரதான அலுவலகத்தினை அதன் தொடர்புபட்ட அலுவலகங்களை தனியொரு வளாகத்தினுள் இயக்குவதன் மூலம் எளிமையான, மிகவும் நம்பகமான மற்றும் வினைத்திறன்மிக்க சேவையினை வரிசெலுத்தினர்களுக்கு வழங்குவதற்கு சாத்தியமாகவிருக்கும் அதேவேளை, நிலைபேறான முறையில் வரி சேகரிப்புச் செயன்முறையை வலுப்படுத்தும். வரிசெலுத்துனர்கள் இந்நிறுவனத்தின் முக்கிய பயன்பெறுனர்களாவதால் தரமான சேவையினை அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான பௌதிக வசதிகளை அபிவிருத்திசெய்வது அத்தியவசியமாகும். 

அதற்கமைய முன்மொழியப்பட்ட  இடங்களில் மிகப்பொருத்தமானதை தெரிவுசெய்து சாத்தியவள ஆய்வை நடாத்தியதன் பின்னர் புதிய அலுவலக கட்டிடத் தொகுதியைத் தாபிப்பதற்காக ரூபா 2,000 மில்லியன் ஒதுக்கீடு செய்வதற்கு முன்மொழிகின்றோம்.

36. இறுதி வரவு செலவுத்திட்ட நிலை அறிக்கையினதும் நடு ஆண்டு அரசிறை நிலை அறிக்கையினதும் வெளியீட்டு திகதியை மாற்றுதல்

நிதி ஆண்டின்போது செயல்திறன் மிக்க அரசிறை மேற்பார்வை மற்றும் கொள்கை ஒருங்கிணைப்பு என்பவற்றுக்குத் தேவையான அத்தியவசிய அரசாங்க நிதி தகவல்களை உரியகாலத்தில் பரப்புவதில் உள்ள தாமதத்தை கருத்தில்கொண்டு, அரசிறை வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தல் மற்றும் அரசாங்க நிதி முகாமைத்துவத்தை மிகவும் ஏற்புத்தன்மை மிக்கதாக்குவதற்கு, இறுதி வரவு செலவுதிட்ட நிலை அறிக்கையை (ஆண்டறிக்கை) வெளியிடுவதற்கான இறுதித் திகதி ஒவ்வொரு ஆண்டும் யூன் 30 திகதிக்கு பதிலாக மே 31 திகதிக்கும், நடு ஆண்டு அரசிறை நிலை அறிக்கையை வெளியிடுதல் ஒவ்வொரு ஆண்டும் ஒக்டோபர் 31 திகதிக்கு பதிலாக ஆகஸ்ட் 31 திகதிக்கும் முன்னகர்தப்படுவதற்கு நாம் முன்மொழிகின்றோம்.

37. கடன்பெறுகை வரையறைகள்

2026 நிதியாண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தின் கடன்பெறுதல் வரையறை இணைப்பு II இல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. தொடர்புடைய செலவின வழிமுறைகள் மீதான தொழில்நுட்ப குறிப்பு இணைப்பு III இல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. மேலும்,  2024 ஆம் ஆண்டின் 44 ஆம் இலக்க பகிரங்க நிதி முகாமைத்துவச் சட்டத்தின் கீழ் வரவு செலவுத்திட்ட இரண்டாம் வாசிப்புடன் சமர்ப்பிக்கப்பட வேண்டிய ஆவணங்களும் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

37.1 2026 ஆம் ஆண்டுக்கான உயர்ந்தபட்ச கடன்பெறுதல் வரையறையை குறைத்தல்

வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் மூலம் எதிர்ப்பார்க்கப்படும் வருமான மதிப்பீடுகளில் ஏற்படும் திருத்தங்கள் காரணமாக 2025.09.26 திகதி  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒதுக்கீட்டு சட்ட மூலத்தில் குறித்துரைக்கப்பட்ட கடன்பெறுதல் வரையறை ரூபா 3,740 பில்லியனாக ரூபா 60 பில்லியனால் குறைத்து திருத்தப்படல் வேண்டும். இத்திருத்தம் இவ்வரவு செலவுத்திட்ட உரையில் இணைப்பு II இல் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

37.2 அமைச்சுகளின் விடயங்களின் திருத்துடன் தொடர்பான ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கான திருத்தங்கள்

பாராளுமன்றத்திற்கு ஒதுக்கீட்டு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் வெளியிடப்பட்ட 2485/65 ஆம் இலக்க 2025.10.18 ஆந் திகதியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்ட பிரகாரம் சில அமைச்சுக்களின் விடயங்கள் மற்றும் பணிகளின் திருத்தங்களுக்கு இணங்க இச்சட்டமூலத்திற்கு மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்களை அவ்வவ் ​ செலவின தலைப்பின் கீழ் வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

விடயங்கள் மற்றும் பணிகளின் திருத்தத்திற்கு இசைவாக 2025 ஆம் ஆண்டுக்குத் தேவையான செலவின தலைப்புகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய திருத்தங்கள் 4/2025 ஆம் இலக்க தேசிய வரவு செலவுத்திட்ட சுற்றறிக்கையில் ஏற்கனவே எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

38. முடிவுரை

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இலங்கையின் பரந்த பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது திருப்திகரமான முன்னேற்றத்தை தொடராக இடம்பெறச் செய்கின்றது என சர்வதேச ரீதியாகப் பராட்டப்படுகின்ற இத் தருணத்தில், இலங்கை சுற்றுலா பயணிகளின் சொர்க்கபுரியாகவும், உலகில் முதற் தர சுற்றுலா பயணிகள் அடைவிடமாகவும் சர்வதேச மட்டத்தில் பேர்பெற்றுள்ள தருணத்தில், உலகில் சனநாயக சுட்டிக்கு அமைவாக எமது தேசம் 15 படிகள் முன்னேற்றமடைந்துள்ள இத் தருணத்தில், உலகில் ஊழலுக்கு எதிரான செயன்முறை சிறந்த பாராட்டத்தைப் பெற்றுள்ள இத்தருணத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்ட மூலத்தை சமர்ப்பிப்பதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம்.

இக்குறுகிய காலப்பகுதிக்குள் நாட்டில் மனித நேயம் தொடர்பான புதியதோர் உணர்வை நாம் தோற்றுவித்துள்ளோம். சமநீதியை நாம் கட்டியெழுப்பியுள்ளோம். இனவாதமற்ற நாட்டை நாம் உருவாக்கியுள்ளோம். சட்டவாட்சியை வலுபடுத்தி சுயாதீனமாக சட்டவாட்சியை நிலைநாட்டுகின்ற நிறுவனங்களை உருவாக்கி அரசியலிலிருந்து பொலிஸார் உட்பட பாதுகாப்பு படைகளை விடுவித்து புதிய கட்டளைச் சட்டங்களை நிறைவேற்றி போதைவஸ்துக்களையும் பாதாள உலகையும் முறியடிப்பதற்கும் நடவடிக்கைகளை எடுத்துள்ளதுடன் வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்தியுள்ளமை நாம் பெற்ற தனித்துவமான வெற்றியாகும். பொருளாதாரத்தை உறுதிப்படுத்தி உயர்நிதியியல் ஒழுக்கத்தினை தாபிப்பதன் மூலம் அரசாங்க வருவாயை அதிகரித்துள்ளோம். ஏற்றுமதி வருவாய்களின் வளர்ச்சி சுற்றுலா வருவாய்களில் அதிகரிப்பு வெளிநாட்டு செலாவணி பண வருகைகளில் அதிகரிப்பு என்பன நாட்டின் ஸ்திரத்தன்மையை வலுப்படுத்தியுள்ளன. துறைமுக செயற்படு இலாபம் அதிகரிப்பு சுங்க வருவாய்கள் அதிகரிப்பு எமது அரசாங்கத்தின் ஒரு ஆண்டு ஐந்தொகை இதற்கு சான்றுபகர்கின்றன.

அதற்கமைய, மக்களின் அபிலாசைகளை விட்டுக்கொடுக்காத அத்துடன் அவ்வபிலாசைகளைக் காட்டிக் கொடுக்காத அரசாங்கத்தின் மீது இந்நாட்டின் பிரசைகள் வலுவான நம்பிக்கையினைக் கொண்டுள்ளன.

இக்கடந்த காலத்தின்போது ஊழலுக்கு எதிராக வலுவான மற்றும் துரிதமான வழிமுறைகளை எடுத்துள்ளதோர் நாடு மக்களின் இறையாண்மையைக் கொண்டு  இனவாதத்தை, மதவாதத்தை மற்றும் தீவிரவாதத்தை முடிவுக்கு கொண்டுவந்த நாடாகும். இவ்வரலாற்றில் எந்தவொரு தசாப்தத்திலும் காணப்படாத அளவுக்கு சட்டவாட்சியையும் ஒழுங்கையும் சுயாதீனத்தையும் ஏற்படுத்தியுள்ளதோர் நாடு. பொது மக்களின் நிதியங்களை தவறாகப் பயன்படுத்தாத அத்துடன் நிதியியல் ஒழுக்கத்தை நிறுவியுள்ள அரசாங்கமொன்றைக் கொண்டதோர் நாடு. எமது அரசாங்கம் அத்தகையதோர் நாட்டில் வரவு செலவுத்திட்ட அறிக்கையொன்றை சமர்பிக்கும் பணிவான சுய திருப்தியினைக் கொண்டுள்ளது.

அதற்கமைய வரலாற்றிலேயே முதற் தடவையாக பொது மக்கள் நிதியங்கள் தவறாகப் பயன்படுத்தப்படாத அல்லது  முறையற்ற சிறப்புரிமைகளுக்குப் பயன்படுத்தப்படாத அரசாங்கமொன்றின் இரண்டாவது வரவு செலவுத்திட்டத்தின் நாட்டின் முன் சமர்ப்பித்துள்ளோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

இந்நாட்டின் ஒட்டுமொத்த மக்களும் நாமும் ஒருபோதும் மறக்க முடியாத வரலாற்றைக் கொண்டிருக்கின்றோம். ஒரு ஆண்டுக்கு முன்னர் எடுக்கப்பட்ட வரலாற்று ரீதியான அரசியல் தீர்மானம் ஒன்றுக்கமைவாக நாம் ஆட்சிக்கு வந்தோம். கடந்த காலத்தில் அரசை நாம் ஆண்டு அரசியல் அதிகாரமும் அரச அதிகாரமும் உடைமையன்றி அது ஒரு நிருவகித்தலேயாகும் என்பதை தெளிவுபடுத்தியுள்ளோம் எவ்வாறாயினும் மக்கள் மூலம் தற்காலிகமாக வழங்கப்பட்ட அதிகாரம் நிரந்தர அதிகாரமாக மாற்றிக் கொள்ளும் கனவுடைய வரலாற்றின் அரசாங்க முறைமையுடன் கூடிய அனுபவம் எமக்குள்ளது.

வரலாற்றில் ஏனைய அரசாங்கங்களுடனான ஒப்பீடொன்றுகூட அவ் கடந்த ஆண்டின் ஐந்தொகையை புரிந்து கொள்வதற்கு போதுமானது என நம்புகின்றேன்.

இக்காலப்பகுதியின் பிரபல்யமான தீர்மானங்களுக்கு பதிலாக சிறந்த தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். இக் காலப்பகுதியின் போது நாட்டுக்கென வரவேற்கத்தகாத தீர்மானங்களுக்கு பதிலாக ஆக்கபூர்வமான தீர்மானங்களை நாம் எடுத்துள்ளோம். அரசியல் வாதிகளின் நிழலின் கீழ் இந்நாட்டின் வரலாற்றில் இடம்பெறுகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை நாம் துடைத்தெறிந்துள்ளோம். பயங்கரமான ஊழல் மற்றும் மோசடி மூலம் மறைக்கப்பட்டிருந்த கள்வர்கள் குழுவுடன் கூடிய அரசியல் அதிகாரத்தை தோல்வியடையச் செய்து சட்டத்திற்கு தலை வழங்குகின்ற மற்றும் நாட்டை நேசிக்கின்ற பொறுப்பு மிக்க ஆட்சி முறைமை ஒன்றுக்கு எமது நாட்டை நாம் மாறுதலடையச் செய்துள்ளோம்.

அரசாங்கமொன்று உருவாக்கப்பட்ட முதல் ஆண்டில் இடம்பெறுவதற்கு எதிர்பார்க்கப்படக் கூடாத விடயங்கள் நிகழ்ந்த பழைய வரலாறுகளை நாம் தாண்டிச் சென்றுள்ளோம்.

அதிகாரத்திற்கு வந்து முதல் ஒரு சில மாதங்களுக்குள்ளே தமது நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் சிறப்புரிமைகளை வழங்கிய ஆளுகைக் சகாப்தங்களைக்கொண்ட வரலாற்றை நாம் மீட்டிப் பார்க்கின்றோம். 

ஆட்சிக்கு வந்து சில மாதங்களிலேயே மத்திய வங்கியை கொள்ளையடித்த காலப்பகுதியை நாம் அனுபவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களுக்குள்ளேயே தமது நண்பர்களுக்கே கோடிக்கணக்கான வரிச் சலுகைகளை வழங்கிய ஆட்சி காலத்தை நாம் அனுபவித்துள்ளோம். ஆட்சிக்கு வந்து ஒரு சில மாதங்களுக்குள்  அவர்களுக்கு ஏற்றவிதத்தில் சட்டத்துறையையும் நீதித்துறையையும் அரசியல்மயப்படுத்திய ஆட்சிகளை நாம் கண்டுள்ளோம். ஆட்சிக்கு வந்து மிகக் குறுகிய காலப்பகுதியினுள் மருந்துக்குப் பதிலாக நீர் ஊசி மருந்துகளை இந்நாட்டிலுள்ள அப்பாவிப் புற்று நோயாளருக்கு வழங்கிய மெய்சிலிர்க்கும் ஆட்சிகளை நாம் கண்டுள்ளோம்.

பயங்கரமான ஒழுக்கநெறியற்ற அவலட்சணமான முறைமையை நாம் மாற்றியுள்ளோம்.

பிரசைகளுக்கும் பொதுமக்கள் பிரதி நிதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டை நாம் தீர்க்கமாக மாற்றியமைத்துள்ளோம். அரசியல்வாதிகள் மக்களுக்கு மேலானவர்கள் அவர்களை அடிமைகளாக நடாத்துபவர்கள் அரசர் அல்லது மாண்பு மிக்க தெய்வங்கள் என்ற அந்தஸ்த்தை மாற்றியுள்ளோம். அவர்கள் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளுக்கு தகுதியான ஒருவரல்ல என்ற நிலைக்கு ஆளாக்கியுள்ளோம். மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர் ஒருவராக அவர் இருக்கலாம். எனினும் சாதார மக்களைப் போன்று அவர் சாதாரணமான ஒருவரே என்பதனை இக்குறுகிய காலப்பகுதியினுள் சமூகத்தில் நாம் உறுதிப்படுத்தியுள்ளோம். இது நாம்வென்றெடுத்த சாதனையொன்றாகும். அதனை மேலும் உறுதி செய்வதே எமது இலக்காகும்.

முன்னால் சனாதிபதிகளின் அளவுக்கு மீறிய சிறப்புரிமைகளை நாம் அகற்றியுள்ளோம். சிலர் இதை வலியாக உணரலாம் ஆனாலும் நாம் மக்களின் ஆணைக்கு அமைவாகப் பணியாற்றுகின்றோம். வேறு நாடுகளில் முன்னால் சனாதிபதிகளுக்கும் பிரதம அமைச்சர்களுக்கும் வழங்கப்படும் சிறப்புரிமைகள் பற்றி சிலர் வாதிடுகின்றனர் எனினும், அந்நாடுகள் எமது நாட்டைப்போன்று வங்கிரோத்து நிலைக்கு சென்றவையல்ல. எமது நாட்டை துரதிஷ்டவசமாக வங்குரோத்தடையச் செய்தனர்.  பிள்ளைகள் பாடசாலைகளைக் கொண்டிராத ஒரு நாட்டில் மில்லியன் கணக்கான மக்கள் ஒருவேளைகூட உணவின்றி உறங்கச் செல்லும் ஒரு நாட்டில், தமது உயிர்களைக் காப்பதற்கு மருந்து வாங்குவதற்கு வழியின்றி மக்கள் வருந்தும் ஒரு நாட்டில், அப்பாவி இளைஞர்கள் தொழிலின்றி வருந்தும் ஒரு நாட்டில் சிறப்புரிமைகளை தொடர்ந்தும் அனுபவிப்பது முன்னால் சனாதிபதிகளுக்கு நெறிமுறையொன்றாக அமையுமா? அதனை நாம் தொடர்ந்தும் முன்னெடுப்பது சாத்திமா?

ஆயினும், நாம் அந்த உதாரணத்தை நிறுவியுள்ளோம். ஒருநாளைக்கு மூன்றுவேளை உணவு உட்கொள்ளாத மக்கள் மூன்று ஊட்டச்சத்து உணவுகளை பெறக்கூடிய பொருளாதாரமொன்றை உருவாக்குவதும் ஒவ்வொருபிள்ளையும் கல்வியைப் பெறும் சூழலை உருவாக்குவதும் ஒவ்வொருவருக்கும் புகலிடம் வழங்குவதும் ஒவ்வொரு பிரசைக்கும் ஆரோக்கியமான வாழ்வை உறுதி செய்வதும் எமது ஏகக் குறிக்கோளாகும்.

இன்று, நாட்டுக்கு பணியாற்றுவதற்கு விரும்புகின்ற யாருக்கும் வழியொன்றை உருவாக்குவதற்கு எமக்கு இயலுமாக இருக்கின்றது. மிகச் சிறிய இடத்திலிருந்து நாட்டின் உச்சம்வரை உயர்வடைவதற்கான வாயிலை நாம் திறந்துள்ளோம். செல்வம் , அதிகாரம் அல்லது சமூக அந்தஸ்த்துக்குப் பதிலாக ஆற்றல், திறன் மற்றும் இயலுமை என்பவற்றைக் கொண்டவர்களுக்கு அவ்வாயில் திறந்துள்ளது.

வரலாற்றில் தமது நண்பர்களுக்கு அனைத்துச் சிறப்புரிமைகளையும் வழங்குவதற்கு தேவையான அளவு சட்டம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேர்தல்களில் அவர்களுக்கு உதவியவர்களுக்கு உபசரணையளிப்பதற்கான விதிகள் மற்றும் ஒழுங்குவிதிகளைக்கூட மாற்றுவதன் மூலம் உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சலுகை வழங்குதல் வரலாற்றை நாம் நிறுத்தியுள்ளோம்.

அத்துடன் வரலாற்றில் பாதாள உலகு மற்றும் போதைப்பொருளில் ஈடுபட்டுள்ள பலர் அரசியல் நிழலின் கீழ் இருந்தனர் . இன்று அவர்கள் அவை அனைத்தையும் இழந்துள்ளனர்.

பல்வேறு பதவிகளுக்கும் நியமனங்களை மேற்கொள்கின்ற போது திறமை, இயலுமை, நேர்மை, நாட்டுக்காக பணியாற்ற விருப்பம் என்பவற்றை நாம் தேடினோமேயன்றி அவர்கள் எமக்கு உதவினார்களா அல்லது எங்களில் ஒருவராக இருந்தார்களா என்பதே அல்ல. அவரது அரசியல் பின்னணி, தேசியம், உறவு, சமயம், கற்ற பாடசாலை, இருந்த நாடு போன்றன எமக்கு தொடர்பற்றவை எம்மிடம் தனிப்பட்ட நிகழ்ச்சி நிரல்கள் கிடையாது. எமக்கு தேவைப்பட்டது அனைத்தும் இவர்களின் சேவைகள் நாட்டின் மக்களுக்கு நன்மை பயக்குமா இல்லையா என்பதை அறிந்து கொள்வதே.

நீண்டகாலமாக எமதுநாடு பற்றி முதலீட்டாளர்கள் இருண்ட எண்ணப்பாங்கினைக் கொண்டிருந்தனர். அத்தகைய இருண்ட எண்ணப்பாங்கை நாம் மாற்றியுள்ளோம். முதலீட்டாளர் எமக்கு சொத்தொன்றாகும். அவர்களை நாங்கள் நோக்கிய விதத்தையும் எமக்கு இருந்த எண்ணப்பாங்கையும் நாம் மாற்றியுள்ளோம் அவர்கள் எமக்கு உதவவே வருகின்றனர் என்ற எண்ணப்பாங்கை நாம் தோற்றிவித்துள்ளோம். முதலீட்டுக்காக பொருத்தமான சுழலை தோற்றுவித்து அவசியமான வசதிகளை எவ்வித தாமதமுமின்றி அவர்களுக்கு வழங்குவதற்கு அவசியமான சூழலை நாம் உருவாக்குகின்றோம். இலங்கையை முதலீட்டாளர்களுக்கு சாதகமான சொர்க்கபுரியாக மாறுதலடையச்செய்யும் பொருட்டு நாம் சட்டவாட்சி நீண்டகால அரசாங்கக் கொள்கைகள், சுயாதீன நீதித்துறை மற்றும் ஊழல் இல்லாத முதலீட்டு நேயம் மிக்க சுழல் என்பவற்றை ஏற்கனவே உருவாக்கியுள்ளோம். தனிப்பட்ட ஒப்பந்தங்கள், இலஞ்சம், பக்கச்சார்பு என்பவற்றிலிருந்து விடுபட்ட வெளிப்படையான முதலீட்டுச் சூழல், தற்போது உருவாக்கப்பட்டு வருகின்றது. அத்துடன் புதிய சட்ட கட்டமைப்புகள், வீசாக் கொள்கைள் மற்றும் முதலீட்டாளர்களால் வேண்டப்படும் வேறு உட்கட்டமைப்பு வசதிகள் விரைவாக அபிவிருத்தி செய்யப்பட்டு வருவதுடன் வியாபார வசதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றது. இந்நோக்கில் வருகின்ற முதலீட்டாளர்களுக்கு வசதியளிப்பதற்கும் ஆக்கபூர்வமான பெறுபேறுகளை அடைவதற்கும் தொடர்பு முகாமையாளர் இணைக்கப்பட்டுள்ளார். இது நேர்மையான அழகான, முதலீட்டாளர்களுக்கு சிநேகமிக்க ஒரு நாடு என்ற செய்தியை நாம் வழங்குகின்றோம்.

இந்நாடு இரண்டுகோடிக்கு மேற்பட்ட பிரசைகள் சுவாசிக்கும் இல்லமாகும். அத்துடன் இந்நாடு பல தலைமுறையினர் வாழவுள்ள நாடுமாகும். நாம் நாகரீகமடைந்த நாடொன்றை உருவாக்குகின்றோம். விலங்குகளைக் கூட நேசிக்கும் ஒரு நாடு. மனிதாபிமானம் நிறைந்ததொரு நாடு.

ஒரு நாட்டின் கல்வி அந்நாட்டைக் கட்டியெழுப்புவதில் எவ்வளவு விசேடம் மிக்கதென்பதை நாம் ஆழமாக அறிவோம். அனைத்துப் பிள்ளைகளுக்கும் கல்வியை வழங்கும் நிலைபேறான கொள்கையை நாம் ஆழமாக அறிவோம்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

பல தசாப்தங்களாக பாதுகாப்பற்ற, சிக்கலான, அழுத்தம் மிகுந்த வரலாற்றுக் கதையினை முடிவுறுத்தும் ஏக உரிமையை இந் நாட்டு மக்கள் எனக்கு பொறுப்புத் தந்துள்ளனர். நாம் அந்த பாரிய மற்றும் தனித்துவமான மக்கள் ஆணையை மிகவும் பணிவுடனும் பொறுப்புடனும் நாட்டை கட்டியெழுப்பும் உயரிய பணிக்காக பயன்படுத்தியுள்ளோம். ஊழலுக்கு எதிராக செயற்படுதல், தேசிய ஒற்றுமையை நோக்கி பயணித்தல், சட்டத்தை அனைவருக்கும் சமமாக பிரயோகித்தல் ஆகிய உன்னத செயற்பாடுகளை மேற்கொள்ளுதல் எவ்வளவு கடினமாக இருப்பினும் நாம் அந்த கடுமையான பணியினை திட உறுதியுடன் முன்னெடுப்போம்.

ஒவ்வொரு இலங்கையரும் நல்வாழ்வை அனுபவிக்க வேண்டும் என்ற எனது நோக்கினை அடைவதற்கான பாதை மற்றும் கனவினை நனவாக்குவதற்காக தூய எதிர் பார்ப்புடன் இந்த வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பித்துள்ளோம்.

மாற்ற முடியாதவற்றை ஏற்றுக்கொள்வதற்கு மன அமைதியும், செய்ய முடியுமானவற்றை செய்வதற்கான தைரியமும், செய்த மாற்றங்களை அறிந்து கொள்வதற்கான ஞானமும் அவர்களுக்கு கிடைக்க வேண்டுமென்ற கூற்றொன்றும் உள்ளது. நாம் அந்த யதார்த்தத்தை விளங்கியுள்ள ஓர் அரசாங்கமாகும்.

கௌரவ சபாநாயகர் அவர்களே,

வரலாறு முழுவதும் மக்களின் இடுப்புப் பட்டியினை இறுக்கி அரசியல் வாதிகளுக்கான பட்டியினை தளர்வடையச் செய்யும் உதாரணங்களை அரசாங்கங்கள் ஏற்படுத்தியுள்ளன. ஆனால் இன்று என்ன நடந்துள்ளது எனில் மக்களின் இடுப்புப் பட்டியை தளர்வடையச் செய்து அரசியல் வாதிகளுக்கான பட்டி இறுக்கமடையச் செய்யும் உதாரணமொன்று இடம் பெற்றுள்ளது. எமக்குத் தேவை, பாரிய அரசாங்கமொன்றல்ல ஆனால் மிகவும் உற்பத்தித்திறன் மிக்க அரசாங்கமொன்றே.

ஒரு நாட்டின் வரவுசெலவுத்திட்டம் என்பது வெறுமனே தேசமென்ற வகையில் நாம் உழைப்பதை, நாம் செலவிடுவதை, நாம் கடன்பெறுவதை அளவிடுகின்ற கணக்கீட்டுச் செயன்முறை ஒன்றல்ல. இது வெறுமனே ஆவணமொன்றல்ல.

இது அரசிறை நிலைபெறுதன்மையை சமநிலைப்படுத்துகின்ற அதே வேளை எமது அபிவிருத்தி இலக்குகளை அடைவதற்கு அவசியமாகவுள்ள கடினமான மற்றும் வெளிப்படையான விட்டுக்கொடுப்பனவுகளின் பிரதிபலிப்பொன்றாகும்.

சுருக்கமாகக் குறிப்பிடுவதாயின் வரவுசெலவுத்திட்டமென்பது அனைத்துப் பிரசைகளினதும் உரிமைகளை நிறைவேற்றுவதற்குத் தேவையான நிதியியல் வளங்கள் ஒதுக்கீடு செய்யுமொன்றாகும். அதற்கமைய அது ஒருநாட்டின் எதிர்காலம் பற்றிய ஒருமித்த கருத்தாகும்.

நாடு என்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் தெளிவானவை. முன்னுரிமைகளும் தெளிவானவை. 

இனிமேலும் நோயை கண்டறிவது அவசியமானதென நாம் நம்பவில்லை. பல காலமாக நோய்பற்றியும் அடிப்படைக் காரணம் பற்றியும் நாம் புரிந்து கொண்டுள்ளோம். நோய்க்குச் சிகிச்சை அளிக்கும் பணியில் நாம் தடம் பதிக்கின்றோம். 

இது சவால் மிக்கது அச்சவால்களை நாம் அனைவரும் ஒன்றினணந்து வெற்றி கொள்ளலாம் என்று நாம் நம்புகின்றோம்.

குறிப்பாக எமது நாட்டில் துரதிஷ்ட வசமாக எமது நாட்டுக்கு வெளியில் சென்ற பல ஆற்றல் படைத்தோர் பலர் காணப்படுகின்றனர். ஆட்சியாளர்களின் அநீதிகளுக்கு அவர்கள் தலைகுனியாமை காரணமாக சிலர் நாட்டை விட்டுச் சென்றனர்.

அல்லது நாட்டிலுருந்து அவ்வாறான உண்ணத மிக்கவர்களை ஆட்சியாளர்கள் வெளியேற்றினர். இந்நாட்டின் கல்வி கற்றவர்கள், இந்நாட்டில் பிறந்து வெளிநாட்டில் கல்வி கற்றவர்கள் உலகில் மிகச் சிறந்த வாய்ப்புகளைக் கொண்டிருந்தனர் ஆனால் அவர்கள் அவ்வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாது அவர்களது தாய்நாட்டுக்கு சேவையாற்றுவதற்கு வந்தனர்.

எனினும் அவர்கள் பிறந்த நாட்டின் மண்ணில் சுதந்திரமாக சுவாசிப்பதற்கு அல்லது அம்மண்ணுக்கு சேவையாற்றுவதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை. தவறிழைக்கின்ற ஆட்சியாளர்களுக்கு அவர்கள் தலை குனியத் தெரியாமலிருந்ததே அவர்களின் தவறாகவிருந்தது. 

அத்துடன், சரியான ஆட்களுக்கு சரியான இடம் வழங்கப்படாத முறைமையுடன் அவர்கள் ஒத்துப்போகவில்லை. அவர்கள் அனைவருக்கும் நான் இன்று அழைப்பு விடுக்கின்றோம் அவர்களுக்காக இந்நாடு தடைசெய்யப்பட்டிருந்த காலம் முடிவடைந்துவிட்டது பழைய நிலைமை முடிவுக்கு வந்தது.

சரியான ஆளுக்கு சரியான இடத்தை வழங்குகின்ற முறைமையொன்று தற்போது காணப்படுகின்றது. சுதந்திரமாக வந்து சுதந்திரமாகப் பணியாற்றுங்கள், இந் நாட்டின் கதவு உங்களுக்காக திறக்கப்பட்டுள்ளது.

எமக்கு உரித்தான அனைத்தையும் பெறுவதற்கு இயலுமையும் வாய்ப்புக்களையும் நாம் தோற்றுவித்தால் மாத்திரம் அவை எம்மை வந்தடையும் என இரவிந்திரனாத் தாகூர் குறிப்பிடுகின்றார்.

இவ்வரவுசெலவுத் திட்டத்தின் நோக்கம் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழித்து அபிவிருத்தியைத் தூண்டி, நம்பிக்கையை மீள் அமைத்து புதியதோர் வாழ்வைத் தொடங்குவதன் மூலம் மறுமலர்ச்சியை உருவாக்குவதாகும்.

எதிர்க்கட்சியிடம் நாம் கண்ணியமாகக் கூறுகின்றோம். எங்களை விமர்சியுங்கள், எங்களை குற்றம் சுமத்துங்கள். எதிர்ப்புத்தெரிவியுங்கள் ஆனால் குறைந்தது எதிர்கால தலை முறையினர்களுக்காக போதைப் பொருள் கடத்தலை பாதாள உலகை முடிவுக்கு கொண்டுவருவதற்கு நாம் போராட்டுகின்ற போது, மற்றும் வறுமையை ஒழிப்பதை நோக்கி நாம் பணியாற்றுகின்ற போது அதற்கு முழு மனதுடன் ஆதரவளியுங்கள். குறைந்தது அப்போராட்டத்தில் எதிர்க்கட்சியிலிருந்து நாடு எதிர்பார்ப்பது அதுவே, 

கௌரவ சபாநாயகர் அவர்களே,

வரலாற்றின் வழிமிகுந்த நிகழ்வுகள் இந்நாட்டைக் கட்டியெழுப்புமாறு எமக்கு கூறுகின்றன. கடந்த காலத்தில் முழுமையான இழப்புகளும் புறக்கணிப்பும் ஒடுக்குதலும் அச்சுறுத்தல்களும் கர்ச்சிப்புக்களும் இந்நாட்டை கட்டியெழுப்புவதற்கே எமக்கு கூறுகின்றன.

கடந்தகாலப் பிள்ளைகளின் தலைமுறை உண்மையான பெருமையுடன் கூடிய அவர்களின் தாய்நாடான இந்நாடுபற்றி பேசமுடியாமலிருக்கும் ஆனாலும், எதிர்கால தலைமுறை அத்தகைய சோகத்திலிருந்து விடுபட்டிருக்க வேண்டும்.

மிகவும் அழகான நாடொன்றுக்காக ஒவ்வொரு கனவையும் தியாகம் செய்து அவ்வழகிய நாடு பிறப்பதற்கு முன்னரே மரணித்த ஒவ்வொரு இதயமும் இந்நாடு அழகான நாடொன்றாக தோற்றம் பெறுவதைக் காணும் கனவைக் கொண்டிருந்தது.

அத்தகைய தூய்மையான மக்களின் இறக்கின்ற விருப்பங்களை நாமாக பொறுப்பேற்றுள்ளோம். கடவுளின் வாசகமாக மிகவும் விருப்பத்துடன் அவ்வெண்ணங்களை நாம் நிறைவு செய்கின்றோம்.

இருண்ட மேகங்களுக்கப்பால் சூரியன் மிளிர்கின்றது என்றும் இருண்ட மேகங்கள் விலகிச் செல்கின்றதென்றும் நாம் நம்புகின்றோம். இருளின் மத்தியில் ஒளிக்கீற்று நிச்சயம் பிரகாசிக்கும் என நாம் நம்புகின்றோம்.

எமது பயணத்தில் நாம் செல்கின்றோம் என்று ஞாபகப்படுத்துகின்றோம், எதிரிகளின் வெறித்தனமான குரள்களை நாம் செவிமடுக்க மாட்டோம். இந் நாட்டின் பிரசைகளின் தீர்க்கமான மற்றும் நம்பிக்கை மிக்க எதிர்பார்ப்புகளை மாத்திரம் நாம் அவதானிப்போம்.

பொருளாதார ரீதியாக சுபீட்சம் மிக்கது மாத்திரமன்றி நெறிமுறை சார்ந்து பெருமைமிக்க, உலகளவில் மதிக்கப்படுகின்ற பரந்த மனிதாபிமான பண்புகளைக் கொண்ட தேசமொன்றை நாம் கட்டியெழுப்புவோம்.

இத்தனித்துவம் மிக்க பயணத்தின் பிரசைகள் என்ற வகையில் நீங்கள் முக்கிய பங்காற்றுவீர்கள். இம்மாறுதலின் பின்னால் உள்ள சக்தியும் காரணமும் நீங்களே. நேர்மையுடனும் அர்ப்பணிப்புடனும் அயராது பணியாற்றிய அரசாங்க ஊழியர்கள், தொழில்சார் நிபுணர்கள் மற்றும் தொழில்முயற்சியாளர்கள் ஆகியோருக்கு நாம் நன்றி கூறுகின்றோம். வெளிநாட்டிலுள்ள எமது இலங்கையர்கள் திரும்பி வந்து, முதலிட்டு நாம் அனைவரும் நேசிக்கின்ற எமது தாய்நாட்டை மீளக் கட்டியெழுப்புவதில் கைகோர்க்குமாறு அவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றோம். 

இறுதியாக இவ்வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதை தளராத அர்ப்பணிப்புடனும் விடா முயற்சியுடனும் பணியாற்றிய நிதி அமைச்சின் அனைத்து அலுவலர்களுக்கும் திறைசேரிக்கான செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும அவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியினைத் தெரிவிக்கின்றேன். அவர்களது தொழில்சார் பண்பு, அர்ப்பணிப்பு மற்றும் கடமை உணர்வு என்பன இவ்வனைத்தையும் உள்ளடக்கி முன்னோக்கி நோக்குகின்ற வரவு செலவுத்திட்டத்தை தயாரிப்பதில் ஏதுவாக அமைந்தது.

அரசாங்கத்தின் பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலையும் தேசிய அபிவிருத்தி இலக்குகளையும் நாம் கூட்டாக முன்னேற்றமடையச் செய்வதனால் இம் முன்மொழிவுகளை உரிய காலத்திலும் காத்திரமான விதத்திலும் உறுதிப்படுத்தி நடைமுறைப்படுத்துவதற்கு நிதி அமைச்சின் அலுவலர்கள் என்ற ரீதியில் உங்களது தொடர்ச்சியான ஆதரவையும் கடமைப் பொறுப்பினையும் நாம் எதிர்பார்க்கின்றோம்.  

நன்றி!

பின்னிணைப்பு – I

2026 வரவுசெலவுத்திட்ட மதிப்பீடுகளின் சுருக்கம்

ரூபா. பில்லியன்

விடயம்

2024

2025 திருத்தப்பட்ட மதிப்பீடு

2026

வரவுசெலவு திட்டம்

மொத்த வருமான மற்றும் மானியங்கள்

      4,091

            5,100

           5,300

மொத்த வருமானம்

      4,031

            5,075

             5,270

வரி வருமானம்

    3,705

           4,725

              4,910

வருமான வரி

       1,026

             1,120

              1,210

பொருட்கள் சேவைகள் மீதான வரி

  2,201

            2,953

            3,056

வெளிநாட்டு வர்த்தகம் மீதான வரி

         477

               652

              644

வரியல்லாத வருமானம்

      326

             350

                360

மானியங்கள்

      60

                25

                 30

மொத்த செலவினம்

    6,131

          6,548

            7,057

மீண்டெழும்

      5,340

           5,530

          5,688

சம்பளங்கள் மற்றும் வேதனாதிகள்

    1,066

           1,220

              1,323

ஏனைய​ பொருட்கள் மற்றும் சேவைகள்

        351

              380

                401

வட்டி

      2,690

            2,650

              2,617

உதவிதொகைகள் மற்றும் மாற்றல்கள்

       1,234

            1,280

             1,347

அரச முதலீடு

         817

            1,033

             1,380

ஏனைய

         (26)

              (15)

                (11)

வருமான மிகை (+)/பற்றாக்குறை(-)

   (1,309)

             (455)

              (418)

ஆரம்ப மிகை (+)/பற்றாக்குறை(-)

         650

          1,202

              860

வரவு​செலவுத்திட்ட மிகை (+)/பற்றாக்குறை(-)

 (2,040)

       (1,448)

        (1,757)

மொத்த நிதியளிப்பு

   2,040

          1,448

              1,757

மொத்த வெளிநாட்டு நிதியளிப்பு

      333

            200

                235

வெளிநாட்டு படுகடன்-மொத்தம்

       3,967

             650

              700

படுகடன் மீள்கொடுப்பனவு

  (3,634)

           (450)

              (465)

மொத்த உள்நாட்டு நிதியளிப்பு

     1,707

          1,248

        1,522

வங்கியல்லாத கடன்பெறுகைகள்

   2,087

          1,248

             1,522

வங்கி பெறுகைகள் மற்றும் பிற

       (381)

                  –  

             –  

வருமானம் மற்றும் மானியங்கள்/​மொ.உ.உ(%)

   13.7

           15.9

               15.4

மொத்த வருமானம்/மொ.உ.உ(%)

       13.5

           15.9

         15.3

வரி வருமானம்/மொ.உ.உ

    12.4

           14.8

               14.2

வரியல்லாத வருமானம் /மொ.உ.உ(%)

           1.1

              1.1

                1.0

மானியங்கள்/மொ.உ.உ(%)

        0.2

              0.1

                 0.1

மொத்த செலவினம்/மொ.உ.உ(%)

        20.5

             20.5

              20.5

மீண்டெழும் செலவினம்/மொ.உ.உ(%)

      17.9

             17.3

                16.5

வட்டியல்லாத/ மொ.உ.உ(%)

            8.9

              9.0

                8.9

வட்டி/​மொ.உ.உ(%)

      9.0

              8.3

                 7.6

அரச முதலீடு/மொ.உ.உ (%)

            2.7

                3.2

                 4.0

வருமான மிகை (+)/பற்றாக்குறை(-) மொ.உ.உ (%)

          (4.4)

              (1.4)

                (1.2)

ஆரம்ப மிகை (+)/பற்றாக்குறை(-) மொ.உ.உ(%)

           2.2

               3.8

                 2.5

வரவுசெலவுத்திட்ட மிகை (+)/பற்றாக்குறை (-) மொ.உ.உ(%)

              (6.8)

                    (4.5)

                      (5.1)

அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டது

பின்னிணைப்பு II

வரவுசெலவுத்திட்டப் பொழிப்பு 2026

மொத்த படுகடன் பெறுகை தேவைப்பாடு – 2026

(கணக்கீட்டுக் கொடுக்கல் வாங்கல்களுக்கான முற்திட்டமிடல்)

விடயம்

ரூபா பில்.

அரசாங்க கடன் பெறுகை தவிர்ந்த மொத்த பெறுகைகள்

              5,355

மொத்த ஆரம்பசெலவு

              4,485

மீண்டெழும்

              3,105

 மூலதனம்

              1,380

படுகடன் சேவை கொடுப்பனவுகள்

              4,495

வட்டி கொடுப்பனவு

              2,617

படுகடன் மீள்கொடுப்பனவு

              1,878

முற்பணக் கணக்குகளுக்கான ஏற்பாடு

                   10

அரசாங்க பிணையங்களின் புத்தக / காசு பெறுமதிக்கான திருத்தங்கள்

                 105

அரசாங்க கணக்குகளில் பதியப்படவேண்டிய மொத்த கடன்பெறுகை தேவைப்பாடுகள்

              3,740

அரசிறைக் கொள்கைத் திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்டது

பின்னிணைப்பு – III

செலவின முன்மொழிவுகள் -2026

இல.

முன்மொழிவு

ரூபா மில்.

1.அரச நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளுக்குத் தேவையான வாகனங்கள்/ இயந்திரங்களை வழங்குதல்

12,500

2.அரச நிறுவனங்களில் டிஜிட்டல் அணுகலை மேம்படுத்துதல்

1,000

3.10 அரசுக்குச் சொந்தமான நிறுவனங்களின் நிலுவையிலுள்ள நியதிச்சட்ட கொடுப்பனவுகளை இரண்டு ஆண்டுகளுக்குள்​செலுத்துதல்

5,000

4.அரச ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் வழங்கப்படும் ஆதன கடன் திட்டத்தை மீண்டும் செயற்படுத்துதல்

500

5.அதிபர்களுக்கான கொடுப்பனவு மற்றும் ஆசிரியர்களுக்கான கஷ்ட கொடுப்பனவை அதிகரித்தல்

1,000

6.பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளில் நுழைவாயில் காப்பாளர்களுக்கான கொடுப்பனவை அதிகரித்தல்

250

7.தற்போதுள்ள முதலீட்டு வலயங்களுடன் தொடர்புடைய ஊட்டல் வலயங்களை சேவை வலயங்களாக அபிவிருத்தி செய்தல்

1,000

8.சர்வதேச தரவு நிலையங்களை ஈர்ப்பதற்கு ஊக்குவிப்புத் தொகைகளை வழங்குதல்

500

9.முதலீட்டு நோக்கங்களுக்காக நிலம் விடுவிப்பதை நெறிப்படுத்துதல்

100

10.கைத்தொழில் வலயங்களைத் தாபித்தல் மற்றும் அபிவிருத்தி செய்தல்

1,000

11.ஏற்றுமதி ஊக்குவிப்பு

500

12.தனியார் துறையில் உள்ள மாற்றுத்திறன் உள்ள அல்லது விஷேட தேவைகள் உள்ள இளைஞர்களின் வேலைவாய்ப்புகளை ஊக்குவித்தல்

500

13.மாற்றுத்திறனாளிகள் மற்றும் விஷேட தேவைகள் உள்ளவர்களுக்கு பொது இடங்களில் அணுகல் மற்றும் சுகாதார வசதிகளை உறுதி செய்தல்

1,000

14.பெருந்தோட்ட / தோட்டத் தொழிலாளர்களின் ஊதியத்தை அதிகரித்தல்

5,000

15.தலசீமியா நோயாளிகளுக்கு சலுகைகளை வழங்குதல்

250

16.ஆட்டிசம் உள்ளிட்ட குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கான பகல்நேர பராமரிப்பு நிலையங்களை நிறுவுதல்

500

17.மாவட்ட மற்றும் பிரதேச அளவிலான செயல்படுத்தலுக்கான “பிரஜா சக்தி திட்டத்திற்கான” மொத்த ஒதுக்கீட்டை ரூபா 25 பில்லியனாக அதிகரித்தல்

20,750

18.அரச நிறுவனங்களை பணமில்லா பொருளாதாரத்தை ஊக்குவிப்பதற்கு உதவுதல்

1,000

19.பால் உற்பத்தியை அதிகரித்தல்

1,000

20.தெரு விலங்குகளுக்கான தங்குமிடங்கள் மற்றும் தகனக்கூடங்கள்

100

21.படல்கம பால் பதப்படுத்தும் தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகளை பூர்த்தி செய்தல்

3,000

22.கால்நடை வளர்ப்புப் பண்ணைகளை மேம்படுத்துதல்

1,000

23.சிறிய அளவிலான தென்னை பயிர்ச் செய்கையாளர்களுக்கு சலுகைகள் வழங்குதல்

2,500

24.தம்புள்ளையில் வெப்பநிலை கட்டுப்பாட்டு சேமிப்பு வசதியை மேம்படுத்துதல்

250

25.நிலையான விவசாய கடன் நிதியத்தை நிறுவுதல்

800

26.இயந்திரமயமாக்கப்பட்ட நெல் உலர்த்தலுக்கான வசதிகளை வழங்குதல்

500

27.காலநிலைக்கு உகந்த நீர்ப்பாசன தொழில்நுட்பத்தின் மூலம் மாத்தளை, கண்டி மற்றும் உலர்வலயங்களின் விவசாய உற்பத்தியை அதிகரித்தல்

1,000

28.மகாபொல, உதவித்தொகை, ஆசிரியர் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி மாணவர் கொடுப்பனவுகள் ரூபா 2,500 ஆல் அதிகரித்தல்

2,750

29.உயர்கல்வி நிறுவனங்களில் கல்வி கற்கும் குறைந்த வருமானம் கொண்ட மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு கொடுப்பனவு வழங்குதல்

50

30.அதிக மண்சரிவு அபாயத்தை எதிர் கொள்ளும் குடும்பங்களுக்கு புதிய வீடுகளை வழங்குதல்

2,000

31.நிறுவனமயமாக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் குழந்தை பாதுகாப்பு மீள் ஒருங்கிணைப்புக்கு வீடமைப்பு உதவி வழங்குதல்

2,000

32.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு “ஒரு அழகான வாழ்க்கைக்கு அவர்களுக்கென ஒரு இடம்” வீட்டுவசதி திட்டத்தை செயல்படுத்துதல்

3,000

33.உள்நாட்டில் இடம்பெயர்ந்த சமூகங்களுக்கு வீட்டுவசதி வழங்குதல்

1,150

34.ஹம்பாந்தோட்டை, காலி, களுத்துறை மற்றும் இரத்தினபுரி ஆகிய இடங்களில் வெள்ளக் கட்டுப்பாடு குறித்த சாத்தியக்கூறு ஆய்வுகளை நடத்துதல்

500

35.களுத்துறை களப்பு அபிவிருத்தி

100

36.யானை – மனித மோதலுக்கு தீர்வு வழங்குதல்

1,000

37.மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்தல்

100

38.மீன்பிடி துறைமுகங்களை அபிவிருத்தி செய்தல்

1,000

39.வீதி விபத்துகளைக் குறைப்பதற்கான பாதுகாப்புத் திட்டத்தை செயல்படுத்துதல்

1,000

40.மட்டக்களப்பில்  கிரண் மற்றும் பொன்னுடல்கல்சேனை பாலங்களின் நிர்மாணத்திற்கான ஆரம்பப் பணிகளைத் தொடங்குதல்

500

41.மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் ரம்புக்கனை-கலகெதர பிரிவை நிர்மாணித்தல்

16,000

42.ஆரோக்கியா நிலையங்களை நிறுவுதல்

1,500

43.தெனியாய மற்றும் தம்புள்ளை வைத்தியச​லைகளை பொருத்தமான இடங்களுக்கு இடமாற்றம் செய்தல்

1,000

44.விளையாட்டு கலாச்சாரத்தை ஊக்குவித்தல்

800

45.போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தடுப்பதற்காக நாடளாவிய நடவடிக்கையை ஆரம்பித்தல்

1,500

46.நாடகம், அரங்கேற்றக் கலைகள் மற்றும் இலக்கியங்களை ஊக்குவித்தல்

50

47.சிறைச்சாலைகளைப் புதுப்பித்தல் மற்றும் அடையாளம் காணப்பட்ட பொருத்தமான இடங்களுக்கு அவற்றை மாற்றுதல்

2,000

48.இரத்தினபுரி நகர அபிவிருத்திக்காக காணியை விடுவித்தல்​ (அரச ஊழியர்களுக்கான விடுதிகள் நிர்மாணம்)

500

49.ஹட்டன் மற்றும் மாத்தளை நகரங்களின் அபிவிருத்தி

500

50.அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய பிதேசங்களில் நகர மண்டபங்களை நிர்மாணித்தல்

200

51.நிலையான கிராமப்புற போக்குவரத்து சேவைகளை உறுதி செய்வதற்காக இலாபமற்ற வழித்தடங்களில் இயக்கப்படும் பேருந்துகளுக்கு மானியங்கள் வழங்குதல்

2,000

52.மகளிர் வலுவூட்டல்

200

53.குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த மாற்றுதிறன் உடைய    பாடசாலை மாணவர்களுக்கு ரூபா 5,000 கொடுப்பனவு வழங்குதல்

50

54.கட்டுமானம் நிறுத்தப்பட்ட நிந்தவூர் கலாச்சார நிலையத்தை பூரணப்படுத்துதல்

300

55.முதியோர் பொருளாதாரத்தில்  பிரஜைகளுக்கான முதலீடு

10

56.மீனவர்களுக்கு செய்மதி தொழில்நுட்பம் மூலம்   மீன் வள பிதேசங்கள்  தொடர்பாக தகவல் வழங்கல்

100

57.உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தை ஒரே வளாகத்தில் நிறுவுதல்

2,000

58.உள்நாட்டு விமான நிலையங்களை அபிவிருத்தி செய்தல்

1,000

59.உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான வசதிகளை மேம்படுத்துதல்

1,000

60.ஊடகவியலாளர்களுக்கு  உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப அணுகுமுறைக்கான உதவி வழங்குதல்

100

61.மாத்தறையில் நில்வளா கங்கையூடாக உவர் நீர் உள்ளீர்ப்பு மற்றும் வெள்ளக் கட்டுப்பாடு

1,000

62.மனித-யானை மோதலைத் தீர்ப்பதற்காக ஆராய்ச்சி அடிப்படையிலான தீர்வுகளைக் கண்டறிதல்

10

Related posts

  நாட்டில் அதிகரித்து வரும் போதைப்பொருள்பாவனைக்கு எதிராக போராடுவதற்கு இலங்கைக்கு உதவுமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, மாலைதீவிடம் கோரிக்கை

ஹிட்லர் பிறந்த வீட்டை பொலிஸ் நிலையமாக்க முயற்சி!

பாணின் விலை 5 ரூபாவால் குறைப்பு