அரசியல்உள்நாடு

2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது

கொட்டகலை பிரதேச சபையின் நவம்பர் மாதத்திற்கான மாதாந்த சபைக்கூட்டமானது கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் இராஜமணி பிரசாந்த் அவர்களின் தலைமையில், கூட்ட மண்டபத்தில் இன்றைய (11) தினம் இடம்பெற்றது,

இக்கூட்டத்தில் கொட்டகலை பிரதேச சபையின் உப தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பங்கேற்றிருந்தனர்.

இச்சபைக்கூட்டத்திலே கொட்டகலை பிரதேச சபையின் 09 ஆவது வரவு செலவுத் திட்டமான 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத்திட்டம் மற்றும் செயற்பாட்டுத் திட்டங்கள் முன்வைக்கப்பட்டு 2026 ஆம் ஆண்டுக்கான கொட்டகலை பிரதேச சபையின் வரவு செலவுத்திட்டம் சபையினால் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

மேலும் கொட்டகலை பிரதேச சபைக்குற்பட்ட பிரதேசத்தில் காணப்படும் பிரச்சனைகள் மற்றும் அவற்றுக்கான தீர்வுகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Related posts

ஆட்ட நிர்ணய குற்றச்சாட்டில் மாலி – மஹிந்தானந்தா முறுகல்

பிரசன்ன ரணதுங்க, ரமேஷ் பத்திரன, ரொஷான் ரணசிங்க CID யில் ஆஜராகியுள்ளனர்.

editor

இலங்கைக்கும் – மொஸ்கோவிற்கும் இடையிலான விமான சேவைகளை இடைநிறுத்தம்