உலகம்சினிமாவிசேட செய்திகள்விளையாட்டு

2025ஆம் ஆண்டுக்கான ‘Gentleman Driver’ விருதை வென்ற அஜித் குமார்

நடிகர் அஜித்குமார் நடிப்பில் மட்டுமல்ல, கார் ரேஸ் மற்றும் பைக் ரேசிங்கிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்.

2025 தொடக்கத்தில் இருந்து தனது ‘அஜித் குமார் ரேசிங்’ அணியை சர்வதேச ரேஸ் போட்டிகளில் கலந்துக்கொள்ளச் செய்து, பல நாடுகளில் நடைபெற்ற பந்தயங்களில் வெற்றி பெற்று இந்தியாவுக்கும் தமிழ்நாடுக்கும் பெருமை சேர்த்தார்.

இப்போது அந்த முயற்சிக்கான பெருமையாக, அவருக்கு 2025ஆம் ஆண்டிற்கான ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது இத்தாலியில் வழங்கப்பட்டதால், அஜித் தனது குடும்பத்துடன் அங்கு சென்று விருதை பெற்றுள்ளார்.

கடந்த 2024 டிசம்பர் மாதத்திலேயே, அஜித் நடித்திருந்த ‘விடாமுயற்சி’ மற்றும் ‘குட் பேட் அக்லி’ படங்களின் பணிகளை முழுமையாக முடித்து வைத்துவிட்டார்.

டப்பிங் வேலைகளையும் தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களில் முடித்துவிட்டு, ரேசிங் மீது முழு கவனம் செலுத்தும் வகையில் எந்த பணியும் பாக்கி இருக்கக்கூடாது என்று படக்குழுவினரிடம் கூறியிருந்தார்.

அதன்படி, தற்போது முழுக்க முழுக்க ரேஸிங்கில் கவனம் செலுத்தி வருகிறார்.

அஜித் குமார் ரேசிங் அணி இதுவரை இரண்டு முறை மூன்றாவது இடத்தையும், ஒருமுறை இரண்டாவது இடத்தையும் பிடித்துள்ளது.

24 மணி நேரம், 12 மணி நேரம் என இருவிதமான பந்தயங்களிலும் அணி பங்கேற்று சிறப்பாக செயல்பட்டது.

தனிப்பட்ட முயற்சியாலும், அர்ப்பணிப்பாலும் இந்திய ரேசிங் துறைக்கும் இவர் புதிய உயரத்தைத் தந்துள்ளார்.

இந்நிலையில், இத்தாலி வெனிஸில் தொழில்முனைவோரும் ரேஸருமான மறைந்த பிலிப் சாரியோல் நினைவாக வழங்கப்படும் ‘ஜென்டில்மேன் டிரைவர்’ விருது இந்த ஆண்டுக்கு அஜித்துக்கு கிடைத்துள்ளது.

இந்த மகிழ்ச்சியை அஜித்தின் மனைவி ஷாலினி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளார்.

அஜித்தின் விருது பெற்ற புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, ரசிகர்களும் பிரபலங்களும் பெருமைகூறி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

Related posts

ஒமிக்ரான் வைரஸ் சவுதி அரேபியாவில் அடையாளம்

குரங்கு அம்மைக்கு புதிய பெயர்

வீடியோ | பரிசுத் தொகையைத் தூக்கி எறிந்த பாகிஸ்தான் அணி தலைவர்

editor