அரசியல்உள்நாடு

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் 114 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றம்

2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு திருத்தங்களுடன் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 159 வாக்குகளும் எதிராக 45 வாக்குகளும் கிடைக்கப்பெற்றுள்ளது.

அதன்படி, 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் 114 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் நிதியமைச்சராக கடந்த பெப்ரவரி 17 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

அதன்படி, வரவு செலவுத் திட்டம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் 7 நாட்கள் நடைபெற்று, இரண்டாம் வாசிப்பு வாக்கெடுப்பு பெப்ரவரி 25 ஆம் திகதி நடைபெற்றது.

வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு 109 வாக்குகளால் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்ட நிலையில், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 155 வாக்குகளும் எதிராக 46 வாக்குகளும் பதிவாகியிருந்தன.

Related posts

தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

முதலையால் இழுத்துச் செல்லப்பட்ட நபர் இரண்டு நாட்களுக்கு பின்னர் சடலமாக மீட்பு

editor

ஜனாதிபதி அநுரவிற்கு இந்தியாவில் ஆரவாரமான வரவேற்பு

editor