உள்நாடுசூடான செய்திகள் 1

2024 ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட டொனால்ட் ட்ரம்புக்கு தடை விதித்த கொலராடோ உயர்நீதிமன்றம்!

(UTV | கொழும்பு) –

2024 ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் போட்டியிடுவதற்கு கொலராடோ (Colorado) உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அதன்படி, டொனால்ட் ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக பணியாற்றுவதற்கு தகுதியற்றவர் என்றும் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 6 ஆம் திகதி அன்று அமெரிக்க தலைநகர் மீது அவரது ஆதரவாளர்கள் நடத்திய தாக்குதலில் அவருக்கு பங்கு இருப்பதால் காரணமாக கொலராடோவில் போட்டியிட முடியாது என்றும் நீதிமன்றம் செவ்வாயன்று தீர்ப்பளித்துள்ளது.

அமெரிக்க அரசியலமைப்பின் 14 ஆவது திருத்தத்தின் 3 ஆவது பிரிவின் கீழ், ஜனாதிபதி வேட்பாளரொருவர் தகுதி நீக்கம் செய்யப்படுவது இதுவே முதல்தடவையாகும் என சர்வதேச ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமீத் வீரசிங்க உள்ளிட்ட 8 பேரின் விளக்கமறியல் நீடிப்பு

வரவு செலவு திட்டத்தின் குழுநிலை விவாதத்தின் 12 ஆவது நாள் இன்று

உயர் தரத்தை நிறைவு செய்யும் மாணவர்களுக்கு புதிய திட்டம்!