உள்நாடுவிளையாட்டு

2024 டி-20 ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க

சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அறிவிக்கப்பட்ட 2024 ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு 20 ஓவர் ஆண்கள் அணியில் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் வனிந்து ஹசரங்க உள்ளீர்க்கப்பட்டுள்ளார்.

அவர் இந்த அணியில் 9வது இடத்தில் உள்ளார்.

அந்த அணிக்கு ரோஹித் சர்மா தலைமை தாங்குகிறார்.

இந்த அணியில் இந்திய அணியைச் சேர்ந்த நான்கு வீரர்கள் இடம் பெற்றுள்ளதுடன், பங்களாதேஷ் மற்றும் தென்னாப்பிரிக்க வீரர்கள் எவரும் இடம்பெறவில்லை.

இருப்பினும், 2024 டி-20 உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் இந்தியாவை எதிர்த்துப் போட்டியிட்டது தென்னாப்பிரிக்கா அணி என்பது குறிப்பிடத்தக்கது.

2024-ம் ஆண்டின் சிறந்த ஆண்கள் டி20 அணி விபரம் பின்வருமாறு:-

ரோகித் சர்மா (இந்தியா), டிராவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), பில் சோல்ட் (இங்கிலாந்து), பாபர் அசாம் (பாகிஸ்தான்), நிக்கோலஸ் பூரன் (மேற்கிந்திய தீவுகள்), சிக்கந்தர் ராசா (சிம்பாப்வே), ஹர்திக் பாண்டியா (இந்தியா), ரஷித் கான் (ஆப்கானிஸ்தான்), வனிந்து ஹசரங்க (இலங்கை), ஜஸ்பிரித் பும்ரா (இந்தியா), அர்ஷ்தீப் சிங் (இந்தியா).

Related posts

தை பிறந்த கையோடு மலையக மக்கள் முன்னணியில் மறுசீரமைப்பு நடவடிக்கை ஆரம்பம் – இராதாகிருஷ்ணன் எம்.பி

editor

இங்கிலாந்து மூன்றாவது முறையாக உலக சாம்பியனை தனதாக்கியது

ஹுனுபிட்டிய கங்காராமய ஆலயம் வழிபாட்டு தலமாக பிரகடனம்