உள்நாடு

2022 தரம் 01 விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

(UTV | கொழும்பு) – எதிர்வரும் 2022ம் கல்வியாண்டுக்கு தரம் 01 இற்கு மாணவர்களை இணைப்பது தொடர்பான விண்ணப்ப முடிவுத் திகதி ஓகஸ்ட் 07ம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

தரம் ஒன்றில் மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக் கொள்ளும் இறுதித் திகதி, எதிர்வரும் ஜூலை 31ஆம் திகதியுடன் நிறைவடையும் நிலையில், இவ்வாறு மேலும் ஒரு வாரத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

கடந்த மே 30ஆம் திகதி கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட குறித்த விண்ணப்பம் கோரல் தொடர்பான இறுதித் திகதி ஜூன் 30ஆம் திகதியுடன் நிறைவடைவதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஓகஸ்ட் 07 வரை நீடிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : விசாரணை மேற்கொள்வதற்கு குழு

Shafnee Ahamed

மீண்டும் மஹிந்த பிரதமர்?

கட்டுப்பாட்டை இழந்த கார் முச்சக்கர வண்டியுடன் மோதி விபத்து – பலர் காயம்

editor