உள்நாடு

2021வரவு செலவுத்திட்டம் – வாக்கெடுப்பு இன்று

(UTV | கொழும்பு) –  2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.

இதனை அடுத்து வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதம் இன்று காலை 10 மணி முதல் பாராளுமன்றில் இடம்பெறவுள்ளது.

இன்றைய குழுநிலை விவாதத்தின் போது நிதி அமைச்சுக்கான ஒதுக்கீடுகள், நிதி மற்றும் மூலதனச் சந்தை மற்றும் அரச தொழில் முயற்சி சீர்திருத்த இராஜாங்க அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் மற்றும் சமுர்த்தி, உள்ளக பொருளாதார, நுண்நிதிய சுயதொழில், தொழில் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சுக்கான ஒதுக்கீடுகள் ஆகியன குறித்து விவாதிக்கப்படவுள்ளன.

இன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை குறித்த குழுநிலை விவாதம் இடம்பெறவுள்ளது.

இதனைத் தொடர்ந்து 2021ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை 5 மணிக்கு இடம்பெறவுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

எரிபொருள் நெருக்கடி : மற்றுமொருவர் பலி

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தலில் NPP வெற்றி

editor

கொழும்பிற்குள் விசேட அம்பியுலன்ஸ் சேவை