உள்நாடு

2020 O/L : பரீட்சை தொடர்பிலான அறிவிப்பு

(UTV | கொழும்பு) –  2020ம் கல்வியாண்டிற்கான கல்விப் பொதுத் தராதர பத்திர சாதாரண தர பரீட்சையை எதிர்வரும் மார்ச் மாதம் அளவில் நடத்துவதற்கு எதிர்பார்த்துள்ளதாக கல்வி அமைச்சர் ஜீ எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

கொரோனா பரவலையடுத்து தீர்மானிக்கப்பட்ட திகதியில் சாதாரண தர பரீட்சையை நடத்துவதற்கு முடியாது என கல்வி அமைச்சர் ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் எதிர்வரும் 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் 2020 ஆம் கல்வி ஆண்டுக்கான சாதாரண தரபரீட்சையை நடத்த எதிர்பார்த்துள்ளதாகவும், திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related posts

ஜனாதிபதி பிலிப்பைன்ஸுக்கு விஜயம்

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது

தங்கம் கடத்திய அலி சப்ரி தொடர்பான அறிக்கை நாடாளுமன்றில் சமர்ப்பிப்பு !