சூடான செய்திகள் 1

2018 -வாக்காளர் பெயர்ப்பட்டியலே 2020 ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும்

(UTVNEWS | COLOMBO) – 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

2019ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப் பட்டியலைத் தயாரிப்பதற்றகான தரவுகள் தற்போது சேகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில், குறித்த பணிகளை எதிர்காலத்தில் நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறிருப்பினும், 2018 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர்ப்பட்டியலே அடுத்த ஜனாதிபதித் தேர்தலுக்காக பயன்படுத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது

கிராம சேவகர் காரியாலயம், பிரதேச செயலகம் மற்றும் தேர்தல்கள் செயலகத்திலும் இந்த வாக்காளர் பெயர்ப்பட்டியலை காட்சிப்படுத்த தேர்தல்கள் ஆணைக்குழு நடவடிக்கை மேற்கொள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நம்பிக்கையில்லா பிரேரணையில் பிரதமர் வெற்றிபெற அட்டனில் விசேட வழிபாடு

அளுத்கம ஸ்ரீ தம்மானந்த தேரர் தனது 103 ஆவது வயதில் காலமானார்

பணப் பயன்பாட்டை கட்டுப்படுத்த சரியான சட்ட திட்டங்கள் இல்லை