வணிகம்

2018 வரவு செலவுத்திட்டம் – ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்டது

(UDHAYAM, COLOMBO) – மிகவும் ஆரோக்கியமான செயலாற்று திறன் கொண்ட வரவு செலவுத்திட்டம் ஒன்றை அரசாங்கம் இந்த வருடம் சமர்ப்பிக்கவுள்ளது.

இதன் மூலம் 2020ஆம் ஆண்டில் முக்கிய இலக்குகளை அடைவது அரசாங்கத்தின் எதிர்ப்பார்ப்பாகும்.

அரசாங்கத்தின் வருமானத்தை மொத்தத் தேசிய உற்பத்தியின் 16 தசம் ஐந்து வீதமாக உயர்த்துதல் அரசாங்கத்தின் மீள் செலவு வீதத்தை மொத்தத் தேசிய உற்பத்தியின் 14 வீதமாக மாற்றுதல், அரச முதலீடுகளை ஐந்து தசம் மூன்று வீதமாக உயர்த்துதல், வரவு செலவுத்திட்ட துண்டுவிழும் தொகையை மூன்று தசம் ஐந்து வீதம் வரை குறைத்தல் மற்றும் அரச கடன் தொகையை 70 வீதமாகக் குறைத்தல் ஆகியன முக்கிய இலக்குகளாகும்.

Related posts

Viberஆல் privacy boost அறிமுகம்

வர்த்தக நிலையங்கள் மற்றும் சிற்றூண்டிச்சாலைகளில் சுற்றிவளைப்பு நடவடிக்கை ஆரம்பம்

வெள்ளை சீனிக்கான அதிகபட்ச சில்லறை விலை குறித்த வர்த்தமானி அறிவிப்பு இரத்து