வகைப்படுத்தப்படாத

200 ஆண்டு பழமையான தேசிய அருங்காட்சியகத்தில் பயங்கர தீ விபத்து

(UTV|BRAZIL)-பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோ நகரில் உள்ள மிகவும் பழமையான அருங்காட்சியகம் உள்ளது. இதில் பிரேசில் நாட்டின் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பொருட்கள், எகிப்திய கலைப்பொருட்கள் உள்ளிட்ட பிறநாடுகளின் கலைப்பொருட்கள் என 2 கோடிக்கும் அதிகமான பொருட்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.

200 ஆண்டுகள் பழமையான இந்த அருங்காட்சியகத்தில் ஞாயிறு இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை கட்டுப்படுத்த போராடி வருகின்றனர்.

அருங்காட்சியகம் மூடப்பட்ட சிறிது நேரத்தில் தீப்பற்றியிருக்கலாம் என்றும், யாரும் கவனிக்காததால் சிறிது நேரத்தில் கட்டிடம் முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இதில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் கருகி உள்ளன. காயமோ உயிர்ச்சேதமோ ஏற்பட்டதாக தகவல் வெளியாகவில்லை.

இந்த அருங்காட்சியகத்தின் பாழடைந்த நிலை மற்றும் அரசாங்கத்தின் நிதி குறைப்பு குறித்து ஊழியர்கள் தங்கள் கவலைகளை ஏற்கனவே தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பண்டைய காலத்தில் போர்ச்சுகீசிய அரச குடும்பத்தின் மாளிகையாக இருந்த இந்த அருங்காட்சிகத்தின் 200 ஆண்டு நிறைவு விழா இந்த ஆண்டு கொண்டாடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Person shot while trying to enter school dies

Date set to consider revision against granting bail to Pujith & Hemasiri

இந்திய பிரதமரின் வருகை தொடர்பில் மஹிந்த ராஜபக்ஷ கருத்து