காஸா அமைதி ஒப்பந்தப்படி இஸ்ரேல் பணயக் கைதிகள் 20 பேரை ஹமாஸ் அமைப்பு விடுவித்துள்ளது.
செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட 20 பிணைக் கைதிகளும் இஸ்ரேல் அழைத்துச் செல்லப்பட்டனர்.
அதன்படி, ஹமாஸ் அமைப்பினரால் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்ட அனைத்து இஸ்ரேல் பிணைக் கைதிகளும் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த 20 பணயக்கைதிகளும் இஸ்ரேலிய இராணுவத்தின் காவலில் எடுக்கப்பட்டு வைத்திய பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட உள்ளனர்.
பரிமாற்றத்தின் ஒரு பகுதியாக விடுவிக்கப்படவுள்ள 1,966 பாலஸ்தீன கைதிகளும் இஸ்ரேலிய சிறை பேருந்துகளில் ஊடாக காசாவை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த குழுவைத் தவிர, ஹமாஸால் கடத்தப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த 39 பேர் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.