அரசியல்உள்நாடு

20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் செப்டெம்பர் 20 ஆம் திகதி அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விடுமுறை வழங்கப்படும் பாடசாலைகள் மீண்டும் எதிர்வரும் 23 ஆம் திகதி ஆரம்பமாகும்.

மேலும், வாக்குச் சாவடி மையங்களாகப் பயன்படுத்தப்படும் பாடசாலைகளை செப்டம்பர் 19 ஆம் திகதி பாடசாலை நேரம் முடிந்த பின்னர் கிராம அலுவலர்களுக்கு வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் நிலையங்களாக பயன்படுத்தப்படும் பாடசாலைகளுக்கு அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி தொடர்புடைய காலங்களில் மட்டுமே விடுமுறை வழங்கப்படும் எனவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

UNPயோடு இணையும் 13 SLPP அமைச்சர்கள்!

இரட்டைக் கொலை – சந்தேக நபர்கள் அதிர்ச்சி வாக்குமூலம்

editor

அதிகரிக்கும் கோதுமை மாவின் விலை!