உள்நாடுபிராந்தியம்

20 அடி பள்ளத்தில் வீழ்ந்து முச்சக்கரவண்டி விபத்து – இருவர் வைத்தியசாலையில்

நோர்வூட் – மஸ்கெலியா பிரதான வீதியின் ரொக்குட் பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர்.

மஸ்கெலியாவிலிருந்து நோர்வூட் பகுதிக்கு சென்ற முச்சக்கரவண்டி இன்று (11) மாலை 4 மணியளவில் வீதியை விட்டு விலகி சுமார் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி உட்பட இருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

-இராமச்சந்திரன்

Related posts

தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் அனைத்து ஊடக பிரதானிகளுக்கு அழைப்பு

editor

கொழும்பு – பதுளை பிரதான வீதியில் தொடர்ந்தும் போக்குவரத்து தடை

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிராக நீதிமன்றம் வழங்கிய உத்தரவு

editor