உள்நாடு

20 ஆவது அரசியலமைப்பு : நாளை பாராளுமன்றுக்கு

(UTV | கொழும்பு) –  20 ஆவது அரசியலமைப்பு திருத்தம் முதலாம் வாசிப்பிற்காக நாளை(22) பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளது.

முதலாம் வாசிப்பிற்காக பாராளுமன்றத்தில் அரசியலமைப்பு திருத்தம் முன்வைக்கப்பட்ட பின்னர் அதனை சவாலுக்குட்படுத்தி நீதிமன்றத்திற்கு செல்ல வேண்டுமாயின் 7 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளார்.

இதன்பின்னர் நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டால் நீதிமன்ற செயற்பாடுகளுக்காக 3 வாரகாலம் வழங்கப்பட்டு நீதிமன்ற தீர்ப்பினை அடுத்தே இரண்டாம் வாசிப்பிற்காக அரசியலமைப்பு திருத்தம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என பாராளுமன்ற பிரதி பொதுச் செயலாளர் நீல் இத்தவெல தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வவுனியாவில் முன்னாள் அரசியல் கைதி கொழும்பு பயங்கரவாத விசாரணைக்கு அழைப்பு

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கடத்தப்பட்ட வர்த்தகர்!

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு ஆலயத்தின் வருடாந்த திருவிழா இன்று