சூடான செய்திகள் 1

20 ஆம் திகதியில் இருந்து வானிலையில் மாற்றம்

(UTV|COLOMBO)-நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.

கிழக்கு மாகாணக் கரையோரப் பகுதிகளில் குறிப்பாக காலை வேளையில் பெய்யக் கூடிய சிறிதளவான மழை வீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை மற்றும் ஓரளவு குளிரான வானிலையும் எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது வடக்கு முதல் வடகிழக்கு வரையான திசைகளில் இருந்து வீசக்கூடுவதுடன் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 20-30 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

நாட்டில் காணப்படும் வரட்சியான வானிலையில் டிசம்பர் 20 ஆம் திகதியில் இருந்து சிறிய மாற்றம் எதிர்பார்க்கப்படுகின்றது.

(வளிமண்டலவியல் திணைக்களம்)

 

 

 

 

Related posts

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் இதுவரை 762 முறைப்பாடுகள் பதிவு

இலங்கைக்குள் மரண தண்டனையை அமுல்படுத்த ஐ.தே.க எதிர்ப்பு

ராஜாங்கணை, தெதுரு, அங்கமுவ நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு