சூடான செய்திகள் 1

20க்கு எதிரான கம்மன்பிலவின் மனு இன்று விசாரணைக்கு

(UTV|COLOMBO)-அரசியலமைப்பின் 20வது திருத்த வரைபுக்கு எதிரான மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணி சமர்ப்பித்த வரைபு பிரேரணைக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில உச்ச நீதிமன்றத்தில் மனுவொன்றை சமர்ப்பித்தார்.

குறித்த வரைபு அரசியலமைப்பு முரணானது என தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறித்த மனுவை சமர்ப்பித்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை மாற்றியமைத்தல் உள்ளிட்ட யோசனைகள் உள்ளடங்கிய 20வது திருத்த வரைபை மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் கடந்த 5ம் திகதி பாராளுமன்றத்துக்கு சமர்ப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

சாதாரணத் தரப் பரீட்சையில் சுகாதாரப் பாடத்தை கட்டாயப் பாடமாக்க நடவடிக்கை

அரசியலமைப்புச் சபை உறுப்பினர்களின் பெயர் பட்டியல் சபாநாயகரிடம்

நீராடச் சென்ற மாணவன் சடலமாக மீட்பு