உள்நாடுபிராந்தியம்

2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து – 11 பேர் காயம்

தங்காலை, மஹாவெல பகுதியில் இன்று (27) பிற்பகல் 2 பேருந்துகள் மோதி விபத்திற்குள்ளானதில், 11 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மாத்தறையில் இருந்து தங்காலை நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும், தங்காலையில் இருந்து திக்வெல்ல நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக நகுலுகமுவ மற்றும் தங்காலை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்து குறித்து தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

கஞ்சிப்பானை இம்ரான் தொடர்ந்தும் விளக்கமறியலில்

கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கையில் உயர்வு

பிரச்சார பணிகளுக்கு சிறுவர்களை ஈடுபடுத்த வேண்டாம்