உள்நாடு

2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் – துப்பாக்கி மீட்பு

தெவுந்தர பகுதியில் 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்திற்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் T56 துப்பாக்கி, கெக்கணதுர பகுதியில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (12) காலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட ஒரு சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது தெரியவந்த தகவல்களின் அடிப்படையில், அந்த நபர் தங்கியிருந்த வாடகை வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த T56 துப்பாக்கி மற்றும் மெகசின் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மார்ச் 21 ஆம் திகதி, தேவிநுவர வணக்கஸ்தலத்திற்கு முன்னால் ஒரு வேனில் வந்த ஒரு குழுவினரால் மோட்டார் சைக்கிளில் சென்ற 2 இளைஞர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர் உட்பட பல சந்தேக நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குற்றப் புலனாய்வுத் துறையின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவு இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது

Related posts

நஷ்டம் தரும் அரசு நிறுவனங்களில் CEYPETCO இற்கு முதலிடம்

கற்பிட்டியில் காற்றாலை உடைந்து வீழ்ந்ததில் மூன்று வீடுகள் சேதம்

editor

ரமழான் மாதத்தை முன்னிட்டு உணவகங்களில் திடீர் சோதனை

editor