கேளிக்கை

திடீரென பெயரை மாற்றிய சமந்தா

(UTV | சென்னை) –  பிரபலங்கள் சொந்த வாழ்க்கையில் எந்த விஷயம் செய்தாலும் மக்களிடம் பிரபலமாகிவிடும். காதல், திருமணம், புதிய தொழில் என என்ன விஷயமாக இருந்தாலும் ரசிகர்களுக்கு தெரிந்துவிடும்.

நடிகை சமந்தா தமிழ்-தெலுங்கில் பெரிய ஹிட் படங்களாக கொடுத்து வருபவர். எப்போதும் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக புகைப்படங்கள் பதிவிடுவது, ஏதாவது ஒரு விஷயத்தை பற்றி புரொமோட் செய்வது என இருப்பார்.

இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டர் பக்கத்தில் சமந்தா அக்கினேனி என தனது கணவரின் குடும்ப பெயரை திருமணத்திற்கு பின் பதிவு செய்திருந்தார்.

ஆனால் இப்போது திடீரென அந்த பெயரை மாற்றி S என்றும் பதிவு செய்துள்ளார். அவரின் இந்த பெயர் மாற்றம் ஏன் என்பது யாருக்கும் தெரியவில்லை, அவர் சொன்னால் தான் உண்டு.

பெயர் மாற்றப்பட்ட நிலையில் இருக்கும் சமந்தாவின் டுவிட்டர் பக்கம்

Related posts

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

‘தலைவி’ ரிலீஸ் திகதி அறிவிப்பு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர் SP காலமானார்