உள்நாடு

‘ஒன்லைன்’ இலிருந்து பல்கலைக்கழக பேராசிரியர்களும் விலகல்

(UTV | கொழும்பு) –  இணையதள கல்வி நடவடிக்கைகளில் இருந்து பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் சங்கம்இன்று (28) முதல் விலகியிருக்க தீர்மானித்துள்ளது.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக சட்டமூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக குறித்து சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.

குறித்த சட்டமூலத்தின் ஊடாக சுதந்திர கல்வி தனியார் மயப்படுத்தலுக்கு உட்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும் குறித்த சட்டமூலம் தொடர்பில் இதுவரையில் இறுதித் தீர்மானம் எதுவும் எடுக்கப்படவில்லை என இராஜாங்க அமைச்சர் அனுராத ஜயரத்ன மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

இன்றைய மின்வெட்டு நேரத்தில் நீடிப்பு

கப்ராலுக்கு அரச கணக்குகள் தொடர்பான நாடாளுமன்ற குழு அழைப்பு

உடல் அடக்கத்திற்கு அனுமதி வழங்கப்பட்டமை வரவேற்கத்தக்கது : இம்ரான் கான் [VIDEO]