சூடான செய்திகள் 1

19 வயதுடைய இளைஞரால் சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம்

(UTV|COLOMBO)-தங்கொட்டுவ காவல் துறை பிரிவிற்குட்பட்ட சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் கடந்த ஜுலை மாதம் பாடசாலை செல்லும் 15 வயதுடைய சிறுமியை பெற்றோரிடமிருந்து ஏமாற்றி அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகம் செய்துள்ளார்.

குறித்த சிறுமியை அப்பகுதியிலுள்ள விடுதி ஒன்றுக்கு அழைத்து சென்று 19 வயதுடைய இளைஞர் இந்த செயலை புரிந்துள்ளார்.

பாடசாலை சிறுமியை விடுதிக்குள் அனுமதித்த குற்றத்திற்காக விடுதி உரிமையாளருக்கு எதிராகவும் நடவடிக்கைகள் எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன் சிறுமி வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

ரத்ன தேரர் 7 நாட்களுக்குள் அரசை கவிழ்ந்தால் தான் அரசியலில் இருந்து ஓய்வுபெறுவேன் – அசாத் சாலி

மின்னல் தாக்கியதில் ஒருவர் பலி

இந்தியாவிலிருந்து 15,000 மெட்ரிக் தொன் உப்பு இறக்குமதி

editor